-->

2015-03-19

Astrology Tikpalam - திக்பலம்

திக்பலம்:
1)சூரியபகவான், செவ்வாய்பகவானும் 10மிடத்தில் திக்பலம் பெறுவர்.
2)சந்திரபகவான், சுக்கிரபகவானும் 4மிடத்தில் திக்பலம் பெறுவர்.
3)குருபகவான், புதபகவானும் 1 மிடத்தில் திக்பலம் பெறுவர்.
4)சனிவகவான் 7 மிடத்தில் திக்பலம் பெறுவர்.
ஒரு கிரகம் திக்பலம் பெருமானால் நல்ல பலன்கள் கொடுக்கும்..... ஆனால் இலக்கின சுபர்களாக இருந்து திக்பலம் பெற்ற கிரகம் அம்சத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் அதிக நன்மைகள் தரும்.... அசுபாராக இருந்து திக்பலம் பெற்றால்அந்த கிரகம் அசுபபலன்களே அதிகமாகவும் தரும்.....சுபரோ ,அசுபரோ யராகவே இருந்தாலும் திக்பலம் பெற்ற கிரகம் இலக்கின சுபர்களின் நட்சத்திரத்தில் இருந்து அம்சத்திலும் நல்லநிலையில் இருந்தால் நன்மைகள் தரும் இது அனுபவபூர்வமான உண்மை...
1)விதி: உதாரணம் ஒரு ஜாதகத்தில் மேஷம் இலக்கினம் என்று வைத்துகொள்ளுவோம் அதற்கு 7 ல் துலாத்தில் சனிபகவான் 200 பாகையில் உச்சம், திக்பலம் பெறுவர் மேஷம் இலக்கினத்திற்கு சனிபகவான் 10,11ம் பாவாதிபதி ஆகிறார் சர இலக்கினத்திற்கு 11ம் பாவாதிபதி பாதகாதிபதியாவார் 7 ல் மாரக பாவத்தில் சனிபகவான் இருந்து 3,7,10ம் பார்வையால் 1,4,9,ம் பாவங்களையும் பார்ப்பார் அவர் பார்க்கும் பாவங்களும் நன்மைகள் தராது அதுப்போல் சித்திரை நட்சரத்தில் இருந்தாலும்கூட நன்மைகள் தராது என் என்றால் இலக்கினாதிபதி 8 ம் பாவத்திற்கும் அவர்தான் அதிபதி அஷ்டமாதிபதி நட்சரத்தில் இருந்தால் தொழில்கள் சரியாக இருக்காது. விசாகம் நட்சத்திரத்தில் அது நல்ல என்று சொல்லுவதற்கு இல்லை குருபகவான் 9.12 பாவாதிபதி ஆகிறார் சனிபகவான் 10,11 பாவாதிபதி நல்ல சம்பந்தம் ஆனால் விசாகம் 1,2.ம் பாதங்களில் இருந்தால் அம்சத்தில் நீசம் ,அஷ்டமா ஸ்தானம் பெறுவர் அதுவும்கூட சரியில்லாத நிலைதான்.விசாகம் 3 ம் பாதத்தில் இருந்தால் இராசி சந்திப்பு வரும் அல்லது 12ம் பாவதிபதியின் நட்சத்திரத்தில் 10ம் அதிபதி 7ம் பாவத்தில் இருந்தால் தொழில் விரையம் தருவார்... சுவாதி நட்சத்திரமாக வந்தால் இராகுபகவான் இருக்கும் பாவம் அவருக்கு வீடு கொடுத்தவரின் நிலை இலகினத்திற்கு எந்த பாவத்தில் இராகுபகவான் இருக்கிறார் என்றுபார்த்து நன்மை தீமைகள் முடிவுஎடுக்கலாம். விதியின்படி சரியில்லை என்றால் அப்படியே விட்டுவிடாமல் மதியின்படி ஆராயவேண்டும் ......
2)மதி: விதியை மதியால் வெல்லாம் எப்படி என்றால் இராசி என்கிற சந்திரபகவானை கொண்டும் பார்க்கவேண்டும். இராசிக்கு எந்த பாவாதிபதியாக வருகிறார் அவர் இருக்கும் பாவம் மற்றும் சாரபலம் 3,5,7 நட்சத்திரத்தை தவிர மற்ற நட்சத்திர சாரத்தில் பலம் பெற்று சனிபகவானுக்கு வீடு கொடுத்தவர் தற்கால கிரக நட்பு சமம் மித்துரு பலம் பெற்றாலும் நன்மையான பலன்கள் தரும். மதிக்கும் அதாவது இராசிக்கு அசுப பாவம் 3,5,7 சாரபலம் பெற்று இருந்தால் அதுவும்கூட அசுபபலன்களே தரும். திக்பலம் பெற்ற கிரகங்கள் எல்லா கிரகங்களும் நன்மைகள் செய்வதில்லை திக்பலம் பெற்ற கிரகம் நன்மைகள் தரும் என்று முடிவுக்கு வரக்குடாது ஜாதகத்தை சரியாக ஆராய்ந்து விதியும் ,மதியும், சரியில்லையே என்றுபார்த்து முடிவுசெய்து ஜாதகரை அவரின் கதி அவ்வவுதான் என்று விட்டுவிடாமல் ஜாதகரை சரணாகதி அடையா செய்யும்படி சொல்லவேண்டும்......
3)கதி: கதி என்பது ஒரு கிரகம் ஜாதகத்தில் பகை , நீசம் அஸ்தமனம் அடைந்து அந்த கிரகம் இலக்கின அசுபரின் நட்சரத்தில் இருந்து பாவம் வலிமை இழந்து தன்னுடைய கரகம் நன்மைகள் தராதநிலையில் அந்த ஜாதகரை சரணாகதி அடையா சொல்லவேண்டும் அப்படிஎன்றல் என்ன என்று கேட்பது எனக்கு புரிகிறது. அதாவது கிரக தேவதை என்று ஒன்று உள்ளது எந்த கிரகம் பலமிழந்து உள்ளதோ அந்த கிரகத்துக்கு குறிய (சாந்திபரிகாரம்) தோஷபரிகரம் பூஜைகள் செய்து அந்த தேவதையை சரணாகதி அடையா சொல்லுவது. கிரக தேவதைகள் என்றால் கிரகத்திற்கு அதிபதியான தெய்வங்கள் கிரகதோஷ பரிகார (சாந்திபரிகாரம்) வழிபாட்டிற்கு நன்மைகள் தரக்குடியா தெய்வங்கள்...
1)சூரியபகவானுக்கு தேவதை (ருத்திரன்)சிவபகவான்.
2)சந்திரபகவானுக்கு (சக்தி)பார்வதிதேவி.
3)செவ்வாய்பகவானுக்கு (சண்முகன்)முருகபகவான்.
4)புதன்பகவானுக்கு(விஷ்ணு)விஷ்ணுபகவான்.
5)குருபகவானுக்கு (பிரம்மன்)பிரமதேவன்.
6)சுக்கிரபகவானுக்கு (மாகலட்சுமி)லட்சுமிதேவி.
7)சனிபகவானுக்கு (இமயன்)யமபகவான்.
8)இராகுபகவானுக்கு(காளியம்மன்)நாகதேவதை.
9)கேதுபகவானுக்கு(விநாயகர்)இந்திரன்.
ஆகியதெய்வங்கள் ஆகும் எந்த கிரகத்துக்கு (சாந்திபரிகாரம்)தோஷபரிகாரம்செய்யவேண்டுமோ அந்தக் கிரகத்தின் சன்னிதானம் சென்று பூஜை அல்லது யாகம் செய்யவேண்டும் இந்த பூஜை,யாகம் எல்லோரும் செய்யக் கூடாது சாஸ்திரிகள் அல்லது தீட்சை பெற்றவர்களை கொண்டே தேய்பிறையில் ஒருநாள் செய்யவேண்டும். அப்படி (சாந்திபரிகாரம்)தோஷபரிகாரம் செய்யும் பொழுது அந்த கிரகத்தின் தசாபுத்தி களில் உண்டாகும் தீமைகள் குறையும்... இப்படி எந்த கிரகம் நன்மைகள் தரும் தீமைகள் தரும் என்று ஒன்றிரண்டு நாட்களில் அல்லது ஒரு மாதத்தில் ஐந்தாறு ஜாதகங்கலையோ பார்த்து முடிவு செய்துவிடமுடியாது அனுபவம் இருக்கவேண்டும்..
இதுதாங்க விதிசரியில்லை என்றால், மதிஎன்கிற இராசியை கொண்டு பலன் காணவேண்டும் அதுவும்கூட சரியில்லை என்றால், இவரே கதி என்று தெய்வத்திடம் சரணாகதி அடைவது இவ்வாறு ஒரு ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து சிறப்பான பலன்கள் சொல்லவேண்டும் இதுப்போல் எல்லா பாவங்களும் கிரகங்களையும் ஜாதகத்தில் பலன்கள் நிர்ணயம் செய்யவேண்டும் அப்படி ஜாதபலன் சிறப்பாக சொன்னீர்கள் என்றால் ஜோதிடரையும், ஜோதிடத்தையும் இனி வரும் காலத்திலும் யாருமே குறைகள் சொல்லமுடியாது.....அதாவது வாழ்க்கையில் விதியை மதியால் வெல்லாம் அதுவும்கூட உதவவில்லை என்றால் கிரகங்களின் தேவதைகளின் தெய்வபக்தியில் சரணாகதி அடைந்து அந்த ஜாதகரின் வாழ்கையில் (வெற்றி) தீமைகளில் இருந்து நன்மைகள் பெறசெய்வது... நன்றி...
“குருவாழ்க” “குருவேதுணை”

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP