-->

2016-03-25

Effects of 7th House and General Rules | 7 ம் பாவத்து பொதுவான விதிகள்:

7 ம் பாவத்து பொதுவான விதிகள்:- 7th House General Rules
1. சனி செவ்வாய் இணைந்து கடக இராசியில் இருந்து அது 7ம் இடமாக அமைந்தால் மனைவி அதிர்ஷ்டமுடையவள்.
2.சுபர் நீசமாகி 7ல் இருப்பது மனைவி குணமற்றவராக சொல் கேளாதவராக நடத்தையில் கோளாறு உள்ளவள்.
3. சுக்கிரன்-சந்திரன் இணைந்து 7ல் இருந்து சனிசெவ்வாய் பார்க்கபட்டால் திருமணம் ஆகாது.
4.7ம் இடத்தில் பல கிரகங்கள் இருந்து அவைகளின் ஆட்சி ,உச்ச,நடபு,விடுகளானால் பல பெண்கள் நண்பர்களாக இருப்பார்கள்.
5. லக்னம் ராசிக்கும் 7ம் அதிபதியும் ,சுக்கிரனும் இராசி அம்சத்தில் உபய இராசிகளில் இருந்தால் இரண்டு திருமணம் நடக்கும் .
6. இராசி சக்கரத்தில் 7ல் நீசமடைந்த கிரகம் இருந்து சுபக்கிரகம் பார்க்கப்பட்டால் துனைவருடைய அபிமானத்தை இழப்பாள்.
7.7ல் பாபக்கிரகங்க்களும் ,சுபக்கிரகங்க்களும் இணைந்து இருந்தால் மறுமணம் செய்துகொள்ள நேரும்.
8. லக்கினத்தை விட7ம இடம் பலமுடன் இருந்தால் கணவன்-மனைவி மூலமாக அதிர்ஷ்ட்டம் வரும்.
9. 7ல் நீச்ச கிரகம் இருந்தால் ருதுவாகத பெண்ணுடன் ஜாதகன் உடல்உறவு கொள்வான்.
10. 7ம் வீட்டோன் இரட்டை ராசியில் பலமுடன் இருந்தால் பல பெண்கள் தொடர்பு கொள்வான்

11பெண்கள் ஜாதகத்தில் 7ல் கிரகம் எதுயும் இல்லாமலும் சுபக்கிரகம் பார்வை இல்லாமல் இருந்தால் கணவனால் புறக்கனிக்கப்படவும்-வேறு ஒருவரை அடைந்து சிற்றின்ப வேட்க்கையையும் பூர்த்தி செய்து கொள்வாள்.
12 . 7 ம் பாவம் நீர் ராசியானாலும் 7 ல் நீர் இராசி கிரகம் இருந்தாலும் ஈரப்பசை உடையதாகவும் உடல் உறவின் போது இன்பம் தருவதாகவும் அமையும்.
13. 7 பாவிகள் சம்பந்தம் ஏற்ப்பட்டால் உடல் உறவின் போது தும்பத்தை தரும்.,
14. 7 ம வீடு மேஷம் , விருச்சிகம் , மகரம் , கும்பம் ஆகியவற்றில் ஒன்றாகி அதில் சுக்கிரன் , செவ்வாய் ,சனி ஆகியவர்கள் நின்றால் மிக மிக மோசமான செக்ஸ் வாழ்க்கை வாழ்பவர்கள் ஆவார்கள்.
15. 7ம் அதிபதி அஸ்தமனம் ,கிரகயுத்தம் பாப கார்தாரி யோகம் ஏற்ப்பட்டால் விந்துவில் உயிரணு இருக்காது.

16 . 7ம் அதிபதி பகைவீட்டில் இருந்தால் தூரத்திலும் ,சுபர் வீட்டில் - ராசி அம்சத்தில் இருந்தால் அருகிலும் திருமணம் நடக்கும்.
17. 6,7 -ம் அதிபதிகள் 7 ல் இருந்து பாவிகளுடன் சேர்ந்து 9ம்பாவத்தில் இருப்பது
ஆசை , ஆசை தணியாத பெண் ஆசை இறுதி காலம் வரை உள்ளவன்.
18. 7குடையவன் 3,6,8,12, ல் இருந்தால் நடுத்தர வயதை பெறுவதற்கு முன் காம உணர்ச்சி இழப்பார்.
19, 11 க்குடையவர்க்கு 7ம அதிபதி திரிகோணம் பெற்று சுபர்பார்வை பெற்றால் மனைவி இருக்கும் போதே பல பெண்களை திருமணம் செய்து கொள்வார்,
20. பெண்கள் ஜாதகத்தில் - கோச்சார செவ்வாய் - பிறந்த ஜாதகத்தில் உள்ள சுக்கிரனுக்கு 7மபாவம் (1) அதன் அதிபதிக்கு சம்பந்தம் ஏற்படும் போதும் லக்கினத்திற்கு 7ம் பாவம் (2) அதன் அதிபதிக்கு சம்பந்தம் ஏற்படும் போதும் பெண்களுக்கு திருமணம் நடக்கும்
21. 7ம் பாவம் - 7ம் அதிபதி ., இவர்களில் ஒருவர் சனி- சூரியனுக்கு இடையே இருந்தால் திருமணம் நடை பெற தாமதம் ஆகும்,
22. வக்கிரம் பெற்ற கிரகம் - 7ம் பாவத்தில் பார்ப்பது -இருப்பது திருமனத்திற்கு தாமதம் ஆகும் .,
23. தூமகேது என்ற உபகிரகம் லக்கினத்திற்கு 7ல் இருந்தால் திருமணம் நடைபெறாது.,
24. 7ம அதிபதி சுக்கிரன் கூடி 6 ல் இருந்தால் விந்துவில் அணுக்கள் இருக்காது.,
25 . லக்கினம் ,7ல் பாவிகள் அமர்ந்து 7ம் அதிபதியும் ,லக்கினாதிபதியும் பகை நீசமடைந்து களத்திர காரன் சுக்கிரன் -குருவும் பலமுழந்து காணபட்டால் .,காலம் முழுவதும் திருமண பந்தத்துக்குள் ஈடுபடாது வாழ்வார்.,

7ம் பாவ சிறப்பு பொது பலன்கள்: - 1 Effects of 7th house Tamil Jothidam
26. லக்கினம் ,லக்கினாதிபதி ,குரு பலமாக இருந்தாலும் ஏழாம் அதிபதி, சுக்கிரன் பலவீனமாக இருந்தால் ,ஜாதகருக்கு திருமணமே நடாவ்யபெறாது.
27. லக்கினாதிபதி , குரு ராசியாதிபதி ,சூரிய லக்கினாதிபதி - இந்த நால்வருக்கு லக்கினம் - இராசி ,சூரியா லக்கினம் -குருலக்கினம் - இவை நான்கின் 7ம் அதிபதிகளின் சம்பந்தமோ (அ) பார்வையோ இல்லாவிடில் ,இப்படிப்பட்ட ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் திருமணமே நடக்காது.
28. லக்கினப்படியோ (அ) 7ம் பாவப்படியோ அஸ்திபாரம் போட்டு பார்க்கும் போது அஸ்திபாரபலம் 0 க்கு கீழே போய் விட்டால் இந்தஜாதகர் (அ) ஜாதகிக்கு எந்த காலமும் திருமணமே நடக்காது .
29. 7ம் இடம் சூரியனுக்கும் - சனிக்கும் இடையே சிக்கிக்கொண்டால் திருமணமாவது சந்தேகம் - மீறி நடந்தால் உடல் உறவு ஏற்படுவது என்பது கேள்விகுறியாகவே இருக்கும் .,
30 . சூரியன் -சந்திரன்-செவ்வாய் மூவரும் 7 ல் இருந்தால் திருமணம் எனபது நரக வாழ்க்கை ஆகி விடும்.,

7ம் பாவ சிறப்பு பொது பலன்கள்: -Effects of 7th house Tamil Jothidam
31 . 7ம் அதிபதி இருக்கும் நட்சத்திராதிபதி பலம் பெற்றால் யோகம் .,
32 . 7ம் பாவத்தின் நட்சச்திராதிபதி பலம் பெற்று அது சந்திரன் - சுக்கிரனாக அமைந்தாலும் உபநட்சத்திராதிபதியாக அமைந்தாலும் உடல் உறவில் சொர்க்கத்தின் வாசலுக்கு செல்பவர்கள்.,
33 . 7ம் பாவத்தின் நட்சத்திராதிபதி - உபநட்சத்திராதிபதியாக சூரியன்- சனி -ராகுவாக அமைந்தால் உடல் உறவு இன்பசுகம் திருப்திஇல்லாத நிலை ஏற்ப்படும்.,
34 . பெண்ணின் 7ம் இடம் ஆணின் குருவிற்கு (அ) சுக்கிரனுக்கு அருகில் ஒரே ராசியாக அமைவது மகிழ்ச்சியான திருமணத்தை தரும் .,
35 ., 5 மற்றும் 7 ம் அதிபதிகள் மிதுனத்தில் சேர்ந்து இருந்தால் காதல் திருமணம் செய்து கொள்வார்கள்.,

7ம் பாவ சிறப்பு பொது பலன்கள்: - Effects of 7th house Tamil Jothidam
36 . 5-ம் வீடுதான். 7-ம் வீட்டு அதிபதி 5-ம் வீட்டில் இருந்தாலும், 5-ஆம் வீட்டு அதிபர் 7-ம் வீட்டில் இருந்தாலும் ஒருவர் காதல் திருமணம் செய்வர்
37 .ஒன்பதாம் அதிபதி அல்லது குரு கெட்டால் சமுதாய
கட்டுப்பாடு மீறிய காதல்.
38. 7ம் பாவம் 9ம் பாவம் சம்பந்தம் பெற்றால் காதல் திருமணம்.
39 . 7ம் அதிபதியும் சுக்ரனும் சனியினால் பார்க்கப்பட்டால்
கட்டாயம் காதல் திருமணம்.
40 . 1, 5, 7, 9 பாவங்கள் தொடர்பு காதல் திருமணம். பாவாதிகள் கெட்டுவிட்டால் காதல் திருமணம் தடைபடும்.,செவ்வாய், சுக்ரன் தொடர்பு மற்றும் 1, 5, 7 வீடு தொடர்பு காதல் திருமணம் மற்றும் ஆண்/பெண் இருவரின் சுக்ரன், செவ்வாய் ஒரே பாகையானால் எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கவலைப்படாமல் திருமணம் செய்து கொள்வர்.



2016-03-13

ராஐ யோகங்கள் தரும் உச்ச சனீஸ்வரன் : Raja Yogas by exalted saturn (Sani)

ராஐ யோகங்கள் தரும் உச்ச சனீஸ்வரன் : Raja Yogas by exalted saturn (Sani)

பாகுபாடு இல்லாத தர்மவான்நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படிபூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மைதீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே.

Raja Yogas by exalted saturn
Raja Yogas by exalted saturn
சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம்பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலிபெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழைபணக்காரன்படித்தவன்படிக்காதவன்பதவியில் இருப்பவன்பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்தஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரிஎன்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல்வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் சனியைபோல் கொடுப்பவனும் இல்லைகெடுப்பவனும் இல்லை’ என்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’ என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.

சாக்கடையில் பதுங்கிய இந்திரன்

ஒரு சமயம் தேவேந்திரன்சனி பகவானிடம் சென்று, ‘நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம்?’ என்று கேட்டான். அதற்கு சனி பகவான், ‘நான் நீதிமான். எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது’ என விளக்கம் சொன்னார். அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரர் அந்த கால நேரத்தை தெரிவித்தார்.

சனீஸ்வரர் தெரிவித்த அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டான். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்த பிறகு வெளியே வந்த தேவேந்திரன்சனீஸ்வரரிடம் சென்று, ‘உங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா’ என்று பெருமையடித்துக் கொண்டான். சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, ‘நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் உழன்றீர்களே.. அதுகூட என் பார்வைபீடிப்பினால்தான்’ என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறிய முடிகிறது.

சனீஸ்வரரின் அதிகாரம் : Power of Satunr (Sani)

எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் திசாபுக்திஅந்தரம் என்று உண்டு. ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன்கோச்சார பலமும் அதிகமாகும். ஒருவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும் ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார். நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள்உடல்நல குறைவுவிபத்துகள்வியாபாரத்தில்தொழிலில் கடன்நஷ்டம்ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னைஇடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல்படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், ‘சனியனே! உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுது’ என்று சொல்லி திட்டுவார்கள்.

உன்னை புதன் பிடித்து ஆட்டுகிறது. கேது ஆட்டுவிக்கிறான் என்று யாரும் சொல்வதில்லை. எந்த கிரக திசா புக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும். இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மைதீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் நம்மிடையே தவறாக ஏற்பட்டு விட்டது. இப்படி சர்வ வல்லமை பெற்ற சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. அந்த வகையில் சனிபகவான் தன் உச்ச ராசியை அடைய சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும். தற்போது 2012-ம் ஆண்டு முதல் சனி தன் உச்ச வீடான துலா ராசியில் அமர்ந்துள்ளார். ஆகையால் பூரண பலத்துடன் திகழ்கிறார்.

இதனால் ரிஷபம்மிதுனம்கன்னிதுலாம்விருச்சிகம்மகரம்கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த உச்ச சனியால் சகல யோக அதிர்ஷ்டங்கள்சுப விசேஷங்கள் கூடிவரும். யோக பாக்யத்தை அருள்வார். மற்ற ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கங்கள்நிறைகுறைகள்கஷ்ட-நஷ்டங்கள் இருந்தாலும் உச்ச பலம் காரணமாக சில சாதகமான பலன்கள் உண்டாகும். ஜாதகத்தில் சனி திசை நடப்பவர்களுக்கு இந்த உச்ச நேரம் மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும்.

வழிபாடு பரிகாரம் : Remedies

பார்வையற்றோர்மாற்றுத் திறனாளிகள்நோயாளிகள்முதியோர்கள்ஆதரவற்றோர்கடின உழைப்பாளிகள்தொழிலாளிகள்பாரம் தூக்குவோர்துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும்தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும். சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். நவ திருப்பதிகளில் பெருங்குளம் சனி பரிகார ஸ்தலமாகும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.


சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்குகுறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். இல்லாதோர்இயலாதோர்சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கி தரலாம். சனியின் நட்சத்திரமான பூசம்அனுஷம்உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம்வஸ்திர தானம் செய்வது சிறப்பு.

2016-03-06

கிழமைகள்… பலன்கள்… பரிகாரங்கள்…– Weakdays and Remedies

கிழமைகள் பலன்கள் பரிகாரங்கள் – Weakdays and Remedies

பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறப்பெடுக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல்பாடுகளின் பலாபலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு.
எண்கணித அடிப்படையில் கிழமைகள், குறிப்பிட்ட கிழமையில் பிறந்த அன்பர்களது குணநலன்கள், அவர்களுக்கான பலாபலன்கள்,   அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பரிகார வழிபாடுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. அதுபற்றி நாமும் அறிவோம்.

ஞாயிற்றுக்கிழமை - Sunday
கடின வேலைகளையும் மிக எளிதாகவும் திறமையாகவும் முடித்து சாதனை படைப்பார்கள். சொன்னதைச் செய்வார்கள். இயலாது எனில் மௌனம் சாதிப்பார்கள். உற்றார்- உறவினருக்கு உதவும் குணம் கொண்டவர். இவரது தலைமையின் கீழ் பலபேர் பணிபுரிவார்கள்.
நல்லன அருளும் தேதிகள்: ஞாயிற்றுக்கிழமையுடன் 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் இணைந்திருக்க பிறந்தவர்களுக்கு எதிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை இந்தத் தேதிகளில் துவங்கலாம்.
ஏற்றம் தரும் வயது காலங்கள்: 19, 28, 37, 45, 55, 64, 73
வளம் தரும் கிழமை: வெள்ளி
வழிபாடு: ஞாயிறன்று சூரிய உதயத்துக்குமுன் எழுந்து காலைக்கடன்களை முடித்து, ஆதித்ய ஹ்ருதயத்தை பாராயணம் செய்வதால், நல்ல பலன்களைப் பெறலாம்; ஆயுள் விருத்தி உண்டாகும். தந்தையிடமும், பெரியோரிடமும், ஆன்றோரிடமும் ஆசிபெற வேண்டும். தெய்வ வழிபாடுகளில் கோதுமை பண்டத்தால் நைவேத்தியம் செய்தல் நலம்.

திங்கள்கிழமை - Monday
சாந்தமான மனம் படைத்தவர். இனிமை, அன்பு, உதவும் உள்ளம் உள்ளவர். எதிரிகளையும் நண்பர்களாக பாவிப்பர். தர்ம- நியாயங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதி உள்ளவர். இவர்களுக்குச் சொந்தத் தொழில் கைகொடுக்கும். குளிர்ச்சியான தேகம் உடையவர்.
நல்லன அருளும் தேதிகள்: இவர்கள் 2, 7, 11, 16, 20, 25, 29 ஆகிய தேதிகளில் புதிய தொழில் தொடங்குதல், பொருள்களை வாங்கி சேகரித்தல், சுப நிகழ்ச்சிகள் செய்வது சிறப்பு.
ஏற்றம் தரும் வயது காலங்கள்: 20, 29, 38, 47, 56, 65, 74 இந்த வயதுகள் நடக்கும்போது திருப்திகரமான திருப்பங்கள் உண்டாகும்.
வளம் தரும் கிழமை: திங்கள்கிழமையே!
பரிகார வழிபாடு: திங்கள்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து காலைக்கடன் முடித்து நீராடி, தாயை வணங்கி ஆசிபெறுவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அத்துடன், சக்தி தலங்களுக்குச் சென்று வெள்ளை நிறப் பூக்களால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் விசேஷம். கற்கண்டு கலந்த நைவேத்தியங்களைப் படைத்து வழிபடலாம்.

செவ்வாய்க்கிழமை - Tuesday
செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் பலரிடமும் பலவிதமான யோசனைகளைக் கேட்பார்கள். ஆனாலும் தான் வைத்ததே சட்டம்; தான் நினைப்பதே சரி எனும் மனப்போக்குடன் திகழ்வார்கள். நல்லவர்களுக்கு நல்லவர்; கெட்டவர்களுக்கு கெட்டவராகத் திகழ்வார். அதனாலேயே பலருக்கும் இவரைப் பிடிக்காது. ஆனால், அதைப் பற்றி இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். நியாய- தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்.
நல்லன அருளும் தேதிகள்: 9, 18, 27 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
ஏற்றம் தரும் வயது காலங்கள்:  18, 27, 36, 45, 54, 63, 72 ஆகிய வயதுகளில் நல்ல திருப்பங்கள் உண்டாகும்.
வளம் தரும் கிழமை: வியாழன்
பரிகார வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை எழுந்து நீராடி, அரளிப்பூவால் முருகப்பெருமானை அர்ச்சித்து வழிபட்டால், வாழ்க்கை வளம்பெறும். அன்றைய மாலைப்பொழுதில் ஸ்ரீபைரவரை வழிபடுதல் விசேஷம். துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பிப்பது சிறப்பு.

புதன்கிழமை - Wednesday
இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளிகளாகத் திகழ்வார்கள். இயந்திரம், வைத்தியம், ஜோதிடம், துப்பறியும் கலை, ஓவியம் ஆகியவற்றில் திறமைசாலிகளாக விளங்குவர். ரகசியம் காப்பதில் வல்லவர். மற்றவர்களின் மனதில் உள்ளதைத் துல்லியமாக அறிந்து அதற்கேற்ப செயல்படுவார்கள். பலதுறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். மருத்துவர், நீதிபதி, பொறியாளர், எழுத்தாளர் என்று  உயர்ந்த நிலையில் வாழ்வார்கள்.
நல்லன அருளும் தேதிகள்: 5, 14, 23 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளைத் துவங்கினால் வெற்றி கிடைக்கும்.
ஏற்றமிகு வயது காலங்கள்: 23, 32, 41, 50, 59, 68 ஆகிய வயதுகளில்  நல்ல முன்னேற்றம் உண்டு.
வளம் தரும் கிழமை: வியாழன்
பரிகார வழிபாடு: புதன்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி துளசி மற்றும் மருக்கொழுந்தால் ஸ்ரீமகாவிஷ்ணுவை வழிபடலாம். மேலும் விஷ்ணு சகஸ்ரநாமம், கிருஷ்ணாஷ்டகம் பாராயணம் செய்வதும் சிறப்பு. பாசிப்பயறு சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தல் நலம்.

வியாழக்கிழமை - Thursday
வியாழனன்று பிறந்தவர்கள் நீதி-தர்மத் துக்கு பக்கபலமாக விளங்குவர். குறுக்கு வழியில் செல்பவரையும் திருத்தி நல்வழிப் படுத்துவதற்கு பாடுபடுவர். உற்றார்- உறவுகளுக்கு உதவிபுரிவர். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவர்.
நல்லன அருளும் தேதிகள்: 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளைத் துவங்க ஏற்றம் உண்டாகும்.
ஏற்றம் தரும் வயது காலங்கள்:  21, 30, 48, 57, 66, 75, 84 ஆகிய வயதுகளில் வாழ்க்கையில் முன்னேற்றம் (வீடு, மனை, வண்டி, வாகனம்) வசதி ஏற்படும்.
வளம் தரும் கிழமை: வெள்ளி
பரிகார வழிபாடு: வியாழக்கிழமைகளில்  சூரிய உதயத்திற்கு முன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகத்தைப் பாராயணம் செய்து வழிபடுவது சிறப்பு. தேவகுரு பிரகஸ்பதியை வழிபடுவதால் வளம் பெருகும். மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொண்டைக் கடலை சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தல் நலம். கருட தரிசனம் செய்வது மிக நன்று.
வெள்ளிக்கிழமை - Friday
இந்தக் கிழமையில் பிறந்தவர்கள், பிறக்கும்போதே சமர்த்துப் பிள்ளைஎன்று பெயரெடுப்பார்கள். பேச்சாலேயே மற்றவர் களை தன் வயப்படுத்துவார். தமது பேச்சை கேட்காதவர்களை புறக்கணித்து விடுவார்கள். எந்த வேலையையும் சிரமம் இல்லாமல் மற்றவர்களின் துணையுடன் பூர்த்தி செய்வார் கள். கணவன் அல்லது மனைவியின் அளவற்ற அன்பிலும் பாசத்திலும் மூழ்கித் திளைப்பர்.
நல்லன அருளும் தேதிகள்: 4, 8, 13, 17, 26, 31 ஆகிய தேதிகள் நலம் பயக்கும்.
ஏற்றம் தரும் வயது காலங்கள்: 22, 26, 31, 35, 44, 53, 62, 66, 71 வயதுகளில் குடும்பம் பல நன்மைகளைச் சந்திக்கும்.
வளம் தரும் கிழமை: திங்கள்.
பரிகார வழிபாடு: வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி மல்லிகைப் பூக்களால் ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்வது சிறப்பு. பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபடுவது  விசேஷம்.

சனிக்கிழமை - Saturday
இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள். வேலை என்று வந்துவிட்டால் அதை முடித்துவிட்டே மற்ற வேலைகளைத் துவங்குவர். சான்றோரிடமும் ஆன்றோரிடமும் மிகுந்த பக்தி உள்ளவர். எப்போதும் தான் உண்டு தன்வேலை உண்டு என நினைப்பவர்
நல்லன அருளும் தேதிகள்: 8, 17, 26 ஆகிய தேதிகளில் சிறப்பான நன்மைகள் பல பெற்றிடுவீர்.
ஏற்றம் தரும் வயது காலங்கள்: 22, 26, 31, 35, 41, 50, 53, 58, 62, 67 ஆகிய வயதுகளில் வாழ்வில் இன்பம் சேரும்.
வளம் தரும் கிழமை: வியாழன்

பரிகார வழிபாடு: சனிக்கிழமை காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து, நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து, நீலாம்பரம், நீல சங்குபூ, வில்வம் சாற்றி சிவனாரை வழிபடுவது சிறப்பு. சிவாலயங்களில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தோஷங்கள் நீங்கும். வீட்டில் பூஜைக்கு பிறகு காகத்துக்கு எள் கலந்த நெய்சாதம் இடவேண்டும். கருட தரிசனமும் நலம்பயக்கும்.

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP