நம் உடலில் பல்லி எங்கே
விழுந்தால் என்ன அர்த்தம் என்று
தெரியுமா?
இந்திய புராணத்தின் படி, மிருகங்கள் என்பது
என்றுமே ஒரு நல்ல இடத்தை
பிடித்துள்ளது. ஆனால் அதில் நமக்கு
மிகவும் பிடிக்காத ஒன்று உள்ளது என்றால்
அது தான் வீட்டில் காணப்படும்
பல்லி. ஊர்ந்து செல்லும் உயிரின
வகைகளில் நாம் அதிகமாக வெறுப்பது
இந்த வீட்டு பல்லியாக தான்
இருக்கும்.
அப்படி நாம் வீட்டில் பல்லியை
பார்க்கும் போது, நாம் உடனே
கொடுக்கும் ரியாக்ஷன் - அருவருப்பாக உணர்வது. அதோடு நில்லாமல்
அதனை விரட்டுவதில் குறியாக இருப்போம். ஆனால்
நம் பண்டைய இந்திய புராணத்தில்
இதற்கனவே ஒரு படிப்பு இருந்தது
உங்களுக்கு தெரியுமா? அது தான் பல்லி
சாஸ்திரம்.
பல்லி என்பது கேதுவை குறிக்கிறது.
கேது என்பது ஸ்வரபானு அசுரனின்
உடலாகும். அவனுடைய தலையை வெட்டியது
விஷ்ணு பகவானாகும். பல்லி கத்துவது முதல்,
அது நம் உடலில் எங்கே
விழுகிறது என்பது வரை பல
முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
ஒவ்வொன்றும்
ஓர் அர்த்தத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தீபாவளியன்று வீட்டில்
பல்லியை காணவில்லை என்றால் வெளிச்சங்களின் பண்டிகையான
தீபாவளி முழுமை பெறுவதில்லை. தீபாவளி
அன்று பல்லியை காண நேர்ந்தால்
குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும்
என நம்பப்படுகிறது.
பல்லி தலையில் விழுவதன் அர்த்தம்
பல்லி ஒருவரின் தலையில் விழுந்தால்,
வரப்போகும் கெட்ட நேரத்திற்கு அவர்
தன்னை தானே தேற்றிக் கொள்ள
வேண்டும். இவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு,
அலைக்கழிக்கப்பட்ட மன நிம்மதி அல்லது
குடும்பத்தில் மரணம் ஏற்படலாம். ஆனால்
தலையில் விழுவதற்கு பதிலாக முடியின் மீது
விழுந்தால் ஏதோ வகையிலான நன்மை
கிட்டும்.
முக பகுதியில் புருவம், கன்னத்தில் விழுந்தால்
ஒருவரின்
முகத்தில் பல்லி விழுந்தால், சீக்கிரமே
உங்கள் வீட்டு கதவை உறவினர்
தட்டலாம். உங்கள் புருவத்தின் மீது
விழுந்தால், ராஜ பதவியில் இருப்பவரிடம்
இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும். ஆனால்
அதுவே உங்கள் கன்னம் அல்லது
கண்களில் விழுந்தால், ஏதோ ஒன்றுக்காக நீங்கள்
தண்டிக்கப்படுவீர்கள்.
இடது கை அல்லது வலது
கையில் விழுந்தால்..
இடது கையின் மீது பல்லி
விழுந்தால், உங்களுக்கு சந்தோஷங்கள் கிடைக்கும். இதுவே வலது கை
என்றால் உங்கள் உடல்நலம் பெருவாரியாக
பாதிக்கப்படும்.
பாதத்தில்
அல்லது பிறப்புறுப்பில் விழுந்தால்.
பாதத்தில்
பல்லி விழுந்தால் வருங்காலத்தில் பயணம் மேற்கொள்வீர்கள். பிறப்புறுப்பின்
மீது விழுந்தால் கஷ்டகாலம் மற்றும் வறுமையை அது
குறிக்கும்.
வலது மணிக்கட்டு, தொப்புள், தொடையில் விழுந்தால்
வலது மணிக்கட்டில் விழுந்தால், ஏதோ வகையில் பிரச்சனை
எழலாம். பல்லி விழும் இடம்
உங்கள் தொப்புள் என்றால் உங்களுக்கு
மதிப்புமிக்க கற்களும், ரத்தினங்களும் கிடைக்கும். மறுபுறம், அது உங்கள் தொடையில்
விழுந்தால் உங்கள் பெற்றோருக்கு நீங்கள்
வருத்தத்தை ஏற்படுத்துவீர்கள்.
aanmikam
By TamiJothidamTips |  17:45
Learn Vedic Astrology Lessons Basics
பல்லி விழும் பலன் உண்மையா
ReplyDeletedonot beleive
Delete