-->
Showing posts with label ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016. Show all posts
Showing posts with label ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016. Show all posts

2016-01-08

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - மீனம் ராசி | 2016 Rahu Ketu Transit Meena Rasi | Rahu Ketu peyarchi 2016 Meena Rasi

2016 - ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்: மீனம் ராசி
(Effect of Rahu transit in Leo for Meena Rasi)


வருகிற ஜனவரி மாதம் 8-ம் தேதியன்று ராகு சிம்ம ராசிக்கும் கேது கும்ப  ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதாவது ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்துக்கும் கேது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்கும் சென்று அமர்கிறார்கள். அதன்மூலம் பொதுவாக உங்களுக்கு நற்பலன்களாகவே நிகழும்.
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். செய்தொழில் மேன்மையடையும். அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். இதுவரை உங் களுக்கு தொல்லைகொடுத்துவந்த எதிரிகளும் போட்டியாளர்களும் காணாமல் போவார்கள். அவர்களால் நிலவி வந்த தொல்லை நீங்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்படையும். அதே நேரத்தில் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள், வாயுத் தொந்தரவு, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் ஏறப்டும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படும். நெருங்கிய நண்பர்கள், நெருங்கிய உறவினர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பும்.
எதிர்பாராத வருமானம் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஆனால் அவை நிரந்தரமாக இருக்காது. கோர்ட் கேஸ்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்கும். சிலருக்கு சாதகமான தீர்ப்புகளும் கிடைக்கும்.
உங்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புண்டாகும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். புத்தி சாதுரியம் அதிகரித்து, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகளை முறியடித்துவிடுவீர்கள் . அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அமர்ந்து, உங்களுக்கு மிகச் சிறப்பான பலன்களைக் கொடுக்கிறார். இது உங்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். விரயச் செலவுகள் குறையும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு இப்போது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். சிலர் வெளிநாட்டுக்கு மகிழ்ச்சி சுற்றுலா சென்று வருவார்கள். குழந்தைகள் சம்பந்தமாக எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சிலர் காசி ராமேஸ்வரம் செல்வார்கள். சிலர் கடமைகள் அத்தனையும் முடித்துவிட்டு குடும்பப் பொறுப்புகளிலிருந்து அமைதியாக ஒதுங்கி இருப்பார்கள். சிலர் ஏகாந்தமான மோன நிலைக்கு செல்வார்கள். ஞான நிலையும் சித்திக்கும். தியானத்தை மேற்கொள்வார்கள்.
கேதுபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தை தனது 3-ம் பார்வையால் பார்க்கிறார். அதன் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தின் தேவைகளைக் காலமறிந்து பூர்த்தி செய்து அவர்களுடைய மகிழ்ச்சியைப் பெறுக்குவீர்கள். உங்கள் செல்வாக்கும் புகழும் உயரும். கௌரவம் அந்தஸ்து மேன்மையடையும். தேவைக்கேற்றபடி வருமானம் கிடைக்கும். தொழிலில் மேன்மை ஏறப்டும். புதிய தொழிலும் அமையும்.


ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - மேஷ ராசி 

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - கும்பம் ராசி | 2016 Rahu Ketu Transit Kumbha Rasi | Rahu Ketu peyarchi 2016 Kumbha Rasi

2016 - ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்: கும்பம் ராசி
(Effect of Rahu transit in Leo for Kumbha Rasi)


கடந்த ஒண்ணரை வருடங்களாக ராகு உங்கள் ராசிக்கு 8-மிடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 2-மிடத்திலும் இருந்து உங்களுக்குப் பல வழிகளில் நிம்மதி இல்லாமல் செய்தார்கள். அவ்வப்போது சில நன்மைகள் நடந்தன என்றாலும், பொதுவாக பலருக்கும் பல கெடுதல்களே நடந்தன. இப்போது வரப்போகும் பெயர்ச்சியின்போது ராகு உங்கள் ராசிக்கு 7-ம் இடமான சிம்ம  ராசிக்கும் கேது உங்கள் ஜென்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
7-மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு திருமணத் தடைகளை உண்டாக்குவார். அல்லது திருமண ஏற்பாடுகள் தாமதமாகும். சில புதுமணத் தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமல், வாழ்க்கையையே பிரச்சினையாக்கிக் கொள்வார்கள்.அதேபோல சில குடும்பங்களில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன்-மனைவி உறவு சொல்லிக்கொள்ளும் அளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஜாதக திசா-புத்திகள் யோகமாக இருந்தால், துலா ராசியில் ராகு உச்ச சனியுடன் சேர்ந்து இருப்பதால், திருமணத் தடைகள் விலகும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேரலாம். அதே சமயம் வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனத்துடன் இருக்கவேண்டும். அவருக்கு ரத்தம் சம்பந்தமான பாதிப்புகள் , விஷம் சம்பந்தமான பாதிப்புகள் அலர்ஜி ஆகியவை ஏற்படும். சிலர் ஒழுக்க நிலையில் பிறழ்ந்து தடுமாறிப் போகும் சூழ்நிலை உண்டாகும். அந்நியப் பெண்கள் , ஒழுக்கக் குறைவான பெண்களின் நட்பும் ,பழக்கமும் உங்களுக்கு ஏற்படக்கூடும். அது உங்கள் கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துவிடும்.
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய உதவிகள் உங்களுக்கு அவ்வப்போது கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அவர்களுடன் சேர்ந்து புதிய தொழில் கூட்டுத் தொழில் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் எச்சரிக்கையும் அவசியம். இல்லாவிட்டால் ஏமாற்றத்தை தவிர்க்க முடியாது. ஆனால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் உங்களைவிட்டு மாறினாலும்கூட சிலருக்கு தொழில்ரீதியாகப் புதிய கூட்டாளி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. திடீரென எதிர்பாராத வருமானம் வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. சிலருக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தாலும்கூட பழைய ந்ண்பர்களில் சிலர் உங்களைவிட்டுப் பிரிந்து செல்லக்கூடும். சிலர் தங்களது தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள். சிலருக்கு இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலையும் உருவாகும். அடிக்கடி வெளியூர்ப் பயணம் செய்யவேண்டியிருக்கும். சிலருக்கு வண்டி வாகனங்கள் விரயச் செலவை ஏற்படுத்தும்.
ஆரம்பத்தில் வெளிவட்டார பழக்கவழக்கங்களில் சில பிரச்சினைகள் உருவானாலும் பிறகு விரும்பியபடி காரியங்கள் பலிதமாகும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு முடிவில் வெற்றி உண்டாகும். பண வசதியைப் பொறுத்தவகையில் இல்லை என்ற குறை நீங்கி எண்ணங்கள் ஈடேறும். இரண்டாம் இடத்து குரு உங்கள் வாக்கு சாதுர்யத்தை மேம்படுத்தி மற்றவர்களை உங்கள் வசப்படுத்தி உங்கள் திட்டங்களையும் தேவைகளையும் நிறைவேற்றச் செய்வார். அத்தியாவசியத் தேவைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேறும். மனைவியும் பிள்ளைகளும் கேட்டதை வாங்கிக் கொடுத்து, அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். உங்கள் உறவினர்களையும் மனைவிவழி உறவினர்களையும் அனுசரித்து வரவேற்று உபசரிப்பதன்மூலம் சொந்த பந்தங்களின் அன்புக்கு ஆளாகலாம்.
உங்கள் மனோபாலம் அதிகமாகும். எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் துணிவு கிடைக்கும். ஆனால் முடிவெடுக்கும்போதுதான் குழப்பங்கள் ஏற்பட்டு கால தாமதமாகும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், திடீர் தொல்லைகள் ஏற்படும்.
உங்கள் ஜென்ம ராசியில் கேது சஞ்சாரம் செய்வதால்,மனதில் தேவையற்ற குழப்பங்கள் அதிகமாகும். காரணம் தெரியாத வீண்பயம் மனதில் இருக்கும். எப்போதும் முகத்தில் சோகம் குடிகொண்டிருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள் எல்லாம் அப்போதைய சூழ்நிலைக்கு பயனற்றதாக இருக்கும். உங்கள் உடல்நலத்திலும் கவனம் தேவை. உங்கள் தாயாரின் உடல்நலத்திலும் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் பகைமையும் ஏற்படும். சிலர் பெற்றோரைப் ப்ரிந்து வாழ வேண்டிவரும். தொழில் ரீதியாகவும் சில இடையூறுகள் ஏற்படும். அதன்மூலம் மனசஞ்சலம் ஏற்பட்டு மன நிம்மதி கெடும்.
மாணவர்கள் இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் சிரத்தையுடன் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் பெரிய புத்திசாலியாகவும் எடுத்த காரியத்தை முடிக்கும் திறமை படைத்தவராக இருந்தாலும் இந்த சமயத்தில் அவை எடுபடாமல் போகும். எடுக்கும் முயற்சிகளிலும் காரியங்களிலும் தடை ஏற்படும் காலம் இது. தொழிலாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மின்சாரம், நெருப்பு ஆயுதம் இவைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
மனதை ஒருமுகப்படுத்தி, ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபட்டால், குருமார்களின் தரிசனம் , சாதுக்களின் நட்பு பெரியோர்களின் தொடர்புகள் அவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். உங்கள் கௌரவம் உயரும். புகழ், பாராட்டு கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகத் தொடர்புகள் அதிகரிக்கும். ஜாதகத்தில் அந்த தசாபுத்திகள் நடந்தால், ஜோதிடம், வைத்தியம், தியானம் யோகா போன்ற கலைகளில் ஈடுபாடு ஏற்படும். சனியும் சேர்ந்து சம்பந்தம் ஏற்பட்டால், மாந்த்ரீகம், ஹிப்னாட்டிசம் இவைகளில் ஆர்வம் ஏற்படும்.
உங்கள் செல்வாக்கு புகழ் இவைகளில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் பங்கு கிடைக்கும். இருவரும் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவதால், சந்தோஷமும் வாழ்க்கையில் நிறைவும் ஏறப்டும். சிலருக்கு ,பிள்ளைகள் பெற்றோர் சொல்லைக் கேட்காமல் போகலாம். ஒழுக்கக் குறைவால் எல்லோருக்கும் கேவலத்தை ஏற்படுத்தி சங்கடங்களை உண்டுபண்ணக்கூடும். பிள்ளைகள்மீது கவனம் செலுத்துவது மட்டுமின்றி அணுசரணையாக இருப்பதும் அவசியம். சகோதர வகையில் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் விட்டுக்கொடுத்து நடந்து அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளும் சாமர்த்தியம் உங்களுக்கு கை கொடுக்கும்.

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - மேஷ ராசி 

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - மகரம் ராசி | 2016 Rahu Ketu Transit Makara Rasi | Rahu Ketu peyarchi 2016 Makara Rasi

2016 - ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்: மகரம் ராசி
(Effect of Rahu transit in Leo for Makara Rasi)

வருகிற ஜனவரி  மாதம் 20-ம் தேதி ராகு பகவான் சிம்ம ராசியிலும் கேதுபகவான் கும்ப ராசியிலும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன்மூலம் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திலும், கேதுபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இவற்றை நல்ல சஞ்சாரம் என்று சொல்ல முடியாது. இனி இவற்றால் உண்டாகப்போகும் பலன்களைக் காணலாம்.
8-ம் இடத்தில் உள்ள ராகுவின் சஞ்சாரம் எதிர்பாராத நிகழ்வுகளை ஏற்படுத்தும். எதிர்பாராத நிகழ்வுகள் என்று குறிப்பிட்டதன்மூலம் தீய பலன்கள் மட்டுமின்றி சில நல்ல பலன்களையும் எதிர்பார்க்கலாம். ராகு தனது 3-ம் பார்வையால், 10-ம் இடத்தைப் பார்ப்பதால், சிலர் உத்தியோகம், வியாபாரம், தொழில் சம்பந்தமாக திடீரென்று வேறு ஊர்களில் வேறு இடங்களுக்கு மாறிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சிலர் தங்கள் வசிப்பிடங்களையும் மாற்றிக்கொண்டிருப்பார்கள். வீடு குடி மாறுவார்கள். சியல்ருக்கு எதிர்பாராத சொத்து சுகங்கள் கியடிக்கும். சிலருக்கு ஷேர்மார்க்கெட்டில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். இருப்பினும் அதையே நம்பி வாழ்க்கையை ஓட்டிவிட முடியாது. பயணங்களின்போது 8-ம் வீட்டில் உள்ள ராகு சில எதிர்பாராத நிகழ்ச்சிகளை நடத்திவிட வாய்ப்புண்டு. அதனால் பயணங்களின்போது கவனம் தேவை. பயணங்களின்போது எடுத்துச் செல்லும் பொருள்கள் திருட்டுப்போகும் நிலையும் ஏறப்டலாம். சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் போலீஸ். கோர்ட், தண்டனை என்று அல்லல்படுவார்கள். வியாபாரிகள் கணக்குவழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அரசாங்கத்தால் தொல்லை ஏறப்டும். அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகளால் பிரச்சினைகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். அரசு வேலையில் இருப்பவர்கள் கையூட்டுப் பெறுவதை தவிர்ர்க்கவில்லையென்றால், காவல்துறையிடம் சிக்கி சிறை செல்வார்கள். அவமானப்பட நேரும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புண்டாகும் யோகம் வரும். அதுபோல சிலருக்கு வெளிநாட்டுப் பயணத்துக்கான வாய்ப்புகள் உண்டாகும். இந்தக் காலத்தில் யாருக்காகவும் ஜாமீனுக்குப் போகவேண்டாம். அதில் நீங்கள் சிக்கிக்கொண்டு துன்பப்படநேரும். வரவு செலவுகளும் உங்களைக் கவிழ்த்துவிட்டுவிடும் நாணயம் தவறிப்போவீர்கள். பணத்தைப் பிறரிடம் கொடுத்துவைத்தால் ஏமாற்றப்படுவீர்கள். தானாகக் கிடைக்காத விஷயத்தை பணம் கொடுத்து சாதித்துக்கொள்ளவேண்டாம். சிக்கல் ஏற்படும். காரியமும் நிறைவேறாமல், செலவழித்த பணமும் கைவிட்டுப் போய், லஞ்சம் கொடுத்ததற்கான தணடனையும் கிடைக்கும். தொழில், வியாபாரம் சம்பந்தமாக சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். எடுத்த காரியங்களில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். மனதில் குழப்பம் இருக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளால் தொல்லை ஏற்படும்.. ஆரோக்கியம் பாதிப்படையும். மறைந்திருக்கும் எதிரிகளால் அவ்வப்போது தொல்லைகள் ஏற்படும். ஆனால், அவர்களால் உங்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது. பொதுவாக இந்த ராகு பெயர்ச்சி பண விரயம், எதிகளால் தொல்லை,அலைச்சலகள் தீய நட்பு, பெண்களால் அவமானங்கள் என்று ஏற்படும்.
இனி கேதுபகவானின் 2-ம் இட சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். கேது பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிப்பது பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும். தொழில் மந்த கதியை அடையும். வருமானம் குறையும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் ஏற்படும். அவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே பெரிய சிரமம் உண்டாகும். கொஞ்சம் வருமானம் வந்தாலும் பின்னாலேயே செலவும் வந்து நிற்கும். அவசிய செலவுகளை மட்டும் பிரித்துக்கொள்ளாவிட்டால், கடன்படவேண்டியிருக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். கவனம் கல்வியில் செல்லாது. நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையாகப் போராடவேண்டியிருக்கும். குடும்பத்தில் வீண் சண்டை சச்சரவுகள், குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தாருடன் நீங்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வம்பை விலைக்கு வாங்குவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நியாயமான தேவைகளைக்கூட பூர்த்திசெய்யமுடியாமல் போகும். அதனால், குடும்பத்தாரின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படும். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு தனிக்குடித்தனம் சென்றுவிடுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போவதால், உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிகக்ப்படும். சிலருக்கு கண்களில் பாதிப்பு ஏற்படும். மனதில் விரக்தி ஏற்படும். சிலர் மன அமைதிக்காக வேதாந்த விஷயங்களில் மூழ்குவார்கள்.
கேது பகவான் தன்னுடைய 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தையும், தன்னுடைய 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தையும் பார்வையிடுகிறார். உங்கள் தாயாரின் உடல்நலம் பாதிகக்ப்படும். சிலருக்கு வீடு, மனை நிலம் சம்பந்தமான விரயச் செலவுகளும் , தேவையற்ற வம்பு வழக்குகளும் ஏற்படக்கூடும். வண்டிவாகனங்களில் விரயச் செலவுகள், வணடி வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவுகள் ஏற்படுதல் போன்ற நிலைகளை உருவாக்கலாம். தொழில் வியாபாரத்தில் உங்களது கவனம் செல்லாது. மனநிம்மதி இருக்காது. பொருள் வீணாக செலவழியுமே தவிர உருப்படியாக எதையும் செய்ய முடியாது. வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடையும் தாமதங்களும் ஏற்படும். சுப காரியங்களை கடன்பட்டுச் செய்யவேண்டியிருக்கும். அந்தக் கடன் உங்களுக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். முடிந்தவரைஎல்லோரையும் அனுசரித்துக்கொள்ளமாட்டீர்கள். அதனால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பீர்கள். அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்று விடுவார்கள்.சிலர் சொந்தபந்தங்களைவிட்டுப் பிரிந்துவிடுவார்கள். சிலருக்கு உறவும் பகையாகும். நண்பர்களும் பிரிந்து விடுவார்கள். அயலாரிடம் இருந்துகூட உதவிகள் கிடைக்கலாம்;ஆனால், சொந்த பந்தங்களிடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்காது.


ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - மேஷ ராசி 

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - தனுசு ராசி | 2016 Rahu Ketu Transit Thanusu Rasi | Rahu Ketu peyarchi 2016 Thanusu Rasi

2016 - ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்: தனுசு ராசி
(Effect of Rahu transit in Leo for Thanusu Rasi)

வருகிற ஜனவரி  மாதம் 8-ம் தேதியன்று, ராகு-கேது பெயர்ச்சி நிகழவுள்ளது. அச்சமயம் ராகு உங்கள் ராசிக்கு 9-ம் இடமான சிம்ம  ராசிக்கும், கேது உங்கள் ராசிக்கு 3-ம் இடமான கும்ப ராசிக்கும் இடம் பெயர்கிறார்கள். இந்த இரண்டு பெயர்ச்சிகளுமே உங்களுக்கு சாதகமானவைகள்தான். இனி பலன்களைப் பார்க்கலாம்.
ராகுவின் 9-ம் இட சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களையே கொடுக்கும். தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். தந்தையும் தந்தை வழி உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் மேன்மையடையும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அலைச்சல்கள் அதிகமாகும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். வெளிநாட்டில் உள்ளோருடன் வர்த்தக உறவுகள் ஏற்பட்டு சிலருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் வேற்று இன, மதத்தினரும் வேற்றுமொழி பேசுபவர்களும் உதவியாக இருப்பார்கள். வெளிநாட்டு வர்த்தகம், நூதனமான பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு மேன்மை ஏற்படும். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்வோருக்கு இது ஏற்றமான காலம். ஒரு கணிசமான தொகையை சம்பாதிப்பார்கள். ஆன்மீக சிந்தனைகள் உங்களுக்கு அதிகமாகி, வேதாந்த புராண விஷயங்களில் நாட்டம் அதிகமாகும். கோவில் மடாலயம் போன்ற இடங்களில்கௌரவப் பதவிகளும் பொறுப்புகளும் கிடைக்கும். பெரியோர்கள் , ஞானிகளின் தரிசனமும் ஆசீர்வாதமும் கிடைக்கும். அவர்களால் கொரவிக்கப்படுவீர்கள். சிலர் தீர்த்த யாத்திரை, கோயில் குளங்களுக்கு செல்லுதல் புனிதப் பயணம் போன்ற ஆன்மீகச் சுற்றுலாவில் கலந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்துக்கள் மேன்மையடையும். பூர்வீகச் சொத்தினால் ஆதாயமும் நன்மையும் கிடைக்கும். சிலருக்கு அவரவர் பிறந்த ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றம் ஏற்படும். சிலர் தர்ம நியாயங்களுக்கு மாறாக செயல்பட்டு பணம் தேடவும் செய்வார்கள். அதன் காரணமாக அவர்கள் பணமே பிரதானமாய் கேவலமாய் அலையவும் வாய்ப்புண்டு. இந்த நிகழ்வுகள் ஜாதகத்தில் 9-ம் இடத்தில் தீய கிரகங்கள் இருந்தால் ஏற்படும்.
இந்தக் காலத்தில் உங்கள் எதிரிகளும், உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்துடையவர்களும்கூட உங்கள் செயல்திறனைக் கண்டு உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் . அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரியின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை ஏறபடும்.
ராகு பகவான் தனது 3-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். இதன்பலனாக, தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும். மூத்த சகோதரர் மேன்மையடைவர். மூத்த சகோதரர்களால், தக்க உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களை உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட நல்ல லாபமும் காரிய சித்தியும் உண்டாகும். அதுபோல ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். உங்கள் வாழ்க்கைத் துணை உடல்நலம் பெறுவார். உடல்நோய் நீங்கி நல்ல ஆரோக்கியம் பெறுவார்.சிலருக்கு நல்ல நணப்ர்கள் சேருவார்கள். அவர்கள் மூலமாக நல்ல காரியங்கள் நடைபெறும். சிலருக்குப் புதிய கூட்டுத் தொழில் உருவாகும். கூட்டுத் தொழில் செய்யும் கூட்டாளிகளுடன் நல்லிணக்கம் ஏர்படும். தொழில் அபிவிருத்தியும் கூடும். உடன் பழகும் நணப்ர்களுக்கு தக்க சமயத்தில் பல உதவிகள் செய்வீர்கள். நண்பர்களின் துயரங்களைப் போக்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைப்பதுடன் புதிய பொறுப்புகளும் கூடும். அதன் காரணமாக வேலைப்பளுவும் அலைச்சலும் அதிகமாகும். புத்திர புத்திரிகளால் மேன்மையுண்டாகும். கணவன்-மனைவி உறவு சிறக்கும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். 3-ம் இடத்தில் பயணம் செய்யும் கேது நல்ல வசதி வாய்ப்புகளை வழங்கத் தயங்க மாட்டார். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அத்தனையும் வந்து சேரும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்புகளும் அவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும். உங்களுக்கு அதிகார பதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். சிலர் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவர். மனோபலம் அதிகரிக்கும். எந்தப் பிரச்சினையானாலும் துணிவுடன் எதிர்கொள்வீர்கள். சிலருக்கு விதவைப் பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு தொல்லையில் முடியும். எனவே தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் வருமானம் கிடைக்கும். முயற்சி எதுவுமின்றியேகூட உங்களுக்கு இப்போது வருமானம் வரும். இந்தக் காலத்தில் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றியே உண்டாகும். சிலர் மத விஷ்யங்களில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு அதன்மூலம் பெரும் புகழடைவார்கள். ஆனால், சிலர் அதையே பயன்படுத்திக்கொண்டு தீய வழிகளில் பணம் சம்பாதிக்கத் துணிவார்கள். அப்படிப்பட்ட வழிகள் பாதிப்பைத் தரும் என்பதால் அவைகளைத் தவிர்க்கவும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் காரணமாக பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கமும் பிரச்சினைகளும் தீரும். பூர்வீகச் சொத்தினால் நல்ல லாபம் கிடைக்கும். புத்திர புத்திரிகள் மேன்மையடைவார்கள். புத்திர புத்திரிகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் அவர்கள் நலல் முன்னேற்றத்தை அடைவார்கள். குலதெய்வ வழிபாட்டை முடிப்பீர்கள். மேலும்,. கேதுபகவான், தனது 11-ம் பார்வையினால் உங்கள் ராசியையே பார்க்கிறார். இதனால் மனோபலம் கூடும். எந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினாலும் முதலில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் அது விலகிவிடும். சாதனை வீரராக வலம் வருவீர்கள்.
கேது பகவானின் 3-ம் இட சஞ்சாரம் உங்கள் வாழ்க்கையில் நல்ல காலத்தின் தொடக்கம் ஆகும். இதுவரை நீங்கள் அனுபவித்துவந்த தொல்லை, துயரம் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும். இதுவரை குடும்பத்தில் இருந்துவந்த நோய் நீங்கி குடும்பத்தினரின் ஆரோக்கியம் பெருகும். மருத்துவச் செலவுகள் குறையும். பணம் பல வழிகளிலிருந்தும் வந்துகொண்டிருக்கும். செலவினங்கள் அதிகமாகும் வாய்ப்புகளும் உண்டு. கவனத்துடன் இருந்தால் உன்னத நிலையை அடைய முடியும். நல்ல நண்பர்களும் உங்களது நலம் விரும்பிகளும் உங்களுக்கு தக்க சமயத்தில் தக்க ஆலோசனைகளைச் சொல்லி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணவன்-மனைவி உறவில் மகிழ்ச்சி நிறையும்.


ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - மேஷ ராசி 

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - துலா ராசி | 2016 Rahu Ketu Transit Thula Rasi | Rahu Ketu peyarchi 2016 Thula Rasi

2016 - ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்: துலாம் ராசி
(Effect of Rahu transit in Leo for Thula Rasi)

வருகிற ஜனவரி  மாதம் 8-ம் தேதியன்று ராகு பகவான் சிம்ம  ராசிக்கும் கேது பகவான் கும்ப  ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இந்த பெயர்ச்சியின்போது ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ம் இடத்துக்கும் கேதுபகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்துக்கும் வருகிறார்கள். இப்போது ராகு-கேதுவின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம்.
ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் சஞ்சாரம் செய்து மிக நன்மையான பலன்களை கொடுக்கப் போகிறார். பலவிதமான நன்மைகள் எதிர்பாராதவிதமாக பலவழிகளிலிருந்தும் வந்து சேரும். சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு அரசாங்க உதவி கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசாங்க கல்விக்கடன் கிடைத்து படிப்பை நல்ல முறையில் தொடர முடியும்.வேற்று இனத்தவர், வேற்று மொழி பேசுபவர் , வேற்று மதத்தினர் மூலம் பல நன்மைகள் தற்போது உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சிலர் புது ஆடை ஆபரணங்கள் வாங்குவர். எதிர்பாராத பண வரவு கிடைப்பதால், பழைய கடன்கள் அடைபடும்.கடன் சுமை குறையும். மூத்த சகோதரர் நன்மை அடைவார்கள். உங்களுக்கு மூத்த சகோதரர்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். சிலர் புதிய சொத்துகள் , புதிய வண்டி வாகனங்கள் வாங்குவர். கடந்த காலத்தில் கோர்ட் கேஸ்கள் என்று அலைந்துகொண்டிருந்தவர்கள் அந்த தொல்லைகள் நீங்கி நிம்மதி அடைவார்கள். அந்த வழக்குகளில் தீர்ப்பு வருமானால், அது உங்களுக்கு சாதகமாகவே வரும். ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ம் பார்வையாக உங்கள் ராசியையே பார்க்கிறார். இதன் காரணமாக உங்கள் மனம் உற்சாகத்தில் மிதக்கும். முகத்தில் பொலிவும் உடம்பில் சுறுசுறுப்பும் இருக்கும். மனோபலம் அதிகமாகும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கும் செயல்திறனும் புத்திகூர்மையும் அதிகமாகும். அதுபோல ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்தைப் பார்க்கிறார். தந்தை மேனமையடைவார். தந்தை வழி உறவினர்களால் எதிர்பாராத லாபம் இடைக்கும். எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் ,எதிலும் வெற்றி, அதன்மூலம் மன மகிழ்ச்சி கிடைக்கும். கணவன்-மனைவி உறவு சிறக்கும். அனுகூலமான செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் பதவிகள் கிடைக்கும். புதிய நணப்ர்கள் கிடைப்பது மட்டுமல்லாமல், அவர்களால், தக்க சமயத்தில் தகுந்த உதவிகள் கிடைக்கும். விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவீர்கள்.
இனி கேதுவின் சஞ்சார பலன்களைத் தெரிந்துகொள்வோம். கேதுபகவான் தனது 5-ம் இடத்து சஞ்சாரத்தின் மூலம் புத்திரர் வழியில் சஞ்சலத்தை ஏற்படுத்துவார். உங்கள் புதல்வர்கள் வேற்று மத்தவரையோ அல்லது வேற்று இனத்தவரையோ திருமணம் செய்துகொள்வர் .புத்திரர் வழியில் செலவினங்களும் அதிகரிக்கும். இக்காலத்தில் போதைப்பொருள்களைப் பழக்கப்படுத்திக்கொள்வீர்கள். அந்த விஷயத்தில் 5 ம் இடத்திலுள்ள கேது உங்களை படுகுழியில் தள்ளிவிடாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்வது அவசியம். உங்களுக்கு ஆன்மீக சிந்தனையும் கடவுள் பக்தியும் அதிகமாகி உங்களை ஞான மார்க்கத்தில் ஈடுபடுத்தவும் வாய்ப்புள்ளது. அதனால் தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவது உங்களால் முடியும். இந்த சமயத்தில் பெரியோர்கள் ,ஞானிகளின் சந்திப்பும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.
உங்கள் பூர்வீகச் சொத்து எளிதில் கைக்கு வரமுடியாது. அதை அடைவதில் சண்டை சச்சரவுகளும் பிரச்சினைகளும் ஏற்படும். ராகு 11ல் இருந்தாலும் கூட கேது 5ல் இருந்துகொண்டு சூது, லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் பணம் வருவதை தடை செய்துவிடுவதால், கிடைப்பது சொற்ப லாபமாகவே இருக்கும். அந்த சொற்ப லாபத்தில் மயங்கி சூது வழிகளையே பெரிதாக நம்பி வாழ்ந்தால் கைப்பொருளையும் இழக்க வேண்டி வரும். லாகிரி வஸ்துக்களும் உங்கள் ஆரோக்கியத்தைப் பதம் பார்த்துவிடும். அரசு சம்பந்தமான துறைகளில் இழுபறி நீடிப்பதால், வெற்றி தாமதமாகவே கிடைக்கும். உங்களில் சிலர் மந்திர தந்திர விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டமின்றிக் கவனம் சிதறும். சிலர் காதல் விவகாரங்களில் சிக்கிக்கொண்டு அவஸ்தைப்படுவது மட்டுமின்றி காதல் தோல்வி ஏற்பட்டு மனம் வாடவும் வாய்ப்புண்டு. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படலாம் என்பதால், பூரண ஓய்வில் இருக்கவேண்டியது அவசியம். அத்துடன் மருத்துவர் ஆலோசனையிலும் மருத்துவப் பாதுகாப்பிலும் இருக்கவேண்டியது அவசியம்.
கேது தனது 3ம் பார்வையால் உங்கள் 7ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் பலனாக உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். மனைவி கர்ப்பிணியானால் கவனம் மிகவும் அவசியம். மனைவி வழி உறவினர்களிடையே ஏதாவது பிரச்சினைகள் தோன்றினால், அதில் நீங்கள் தலையிடவேண்டாம். அப்படி அவசியம் ஏறப்ட்டு தலையிட நேர்ந்தாலும் மிகவும் ஜாக்கிரதையாக பிரச்சினைகளைக் கையாளாவிட்டால், பிரச்சினைகள் உங்கள் மீதே திரும்பிவிடும் நிலை ஏறபடலாம். புதிய நண்பர்கள் கிடைத்து அவர்கள் மூலம் உதவிகளும் கிடைக்கலாம். சிலருக்கு புதிய கூட்டாளியும் கிடைத்து புதிய கூட்டுத் தொழில் உருவாகவும் வாய்ப்புகள் உண்டு. மேலும் கேது பகவான் தனது 11-ம் பார்வையினால், உங்கள் 3-மிடத்தைப் பார்க்கிறார். இதன்பலனாக உங்கள் மனோபலம் அதிகரிக்கும். எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் துணிவு பிறக்கும். இளைய சகோதரர்கள் மேன்மையடைவதோடு உங்களுக்கும் உதவியாக இருப்பார்கள். காது சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். குலதெய்வ வழிபாடு சிறப்படையும்.
பொதுவாக கேதுவின் 5-ம் இடத்து சஞ்சாரம் தொழில் பிரச்சினைகளையும் தொல்லைகளையும் கொடுக்கும். தொழில், வியாபாரம் நிதானமாக முன்னேறும். தேவைக்கேற்ற வருமானம் கொடுக்கும். பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வம்பு வழக்குகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏறப்டும். உறவுகள் பகையாகலாம். சரியான நேரத்துக்கு உண்ணவோ உறங்கவோ முடியாது. புதிய நட்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். தீர்த்த யாத்திரை மற்றும் ஆன்மீகப் பயணங்கள் தொடர வாய்ப்புண்டு.


ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - மேஷ ராசி 

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - கன்னி ராசி | 2016 Rahu Ketu Transit Kanni Rasi | Rahu Ketu peyarchi 2016 Kanni Rasi

2016 - ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்: கன்னி ராசி
(Effect of Rahu transit in Leo for Kanni Rasi)

வருகிற ஜனவரி மாதம் 8-ம் தேதி ஏற்படப்போகும் ராகு கேது பெயர்ச்சியின்போது ராகு பகவான் உங்கள் ராசிக்கு 12ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
ராகுவின் 12ம் இடத்து சஞ்சாரம் உங்களுக்கு அதிக அலைச்சலையும் பயணங்களையும் கொடுக்கும். வேலைப்பளு கூடும். உறக்கம் குறையும். சிலர் குடும்பத்தை விட்டு வெளியூரில் தங்க நேரும். உங்ககளுடைய பயணங்கள் அனைத்தும் பெரும்பாலும் வியாபார சம்பந்தமாகவோ அல்லது உத்தியோக சம்பந்தமாகவோதான் இருக்கும். பூர்வீகச் சொத்து பிரச்சினைக்குள்ளாகி ,பிறகு நீங்கும். குழந்தைகள் வழியில் செலவுகள் ஏறப்டும். சிலருக்கு அரசாங்கத்தாலும் அரசு அதிகாரிகளாலும் விரயச் செலவு ஏற்பட்டு மனக்கஷ்டங்கள் தோன்றும். மறைமுக எதிரிகளால் எப்போதும் தொல்லைகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும் அவர்கள் எதிர்ப்பு உங்களை ஒன்றும் செய்ய முடியாது. பெண்கள் அளவுக்கு மீறிய செலவைக் கட்டுப்படுத்தாவிட்டால், பற்றாக்குறை ஏற்படும்.வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். உறக்கம் என்பது ஆழ்ந்த தூக்கமாக இருக்காது. இந்தக் காலக் கட்டத்தில், உங்கள் ராசிக்கு குருபார்வை கிடைத்துள்ளதால், விரயத்தில் உள்ள ராகுபகவான், ஏதாவது ஒரு நல்ல காரியத்தை நடத்தி வைத்து, அதன்மூலம் சுப விரயச் செலவுகளை ஏற்படுத்துவார்.
ராகு பகவான் தனது 11ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10ம் இடத்தைப் பார்ப்பதால், தொழில் ரீதியாக சில பின்னடைவுகள் ஏற்படும். உற்பத்திப்பொருட்கள் விற்பனையின்றி தேங்கிக் கிடக்கும். உங்களிடம் கடன் பெற்ற வியாபாரிகளிடமிருந்து பணம் திரும்பக் கைக்கு வராது. ராகுபகவான் தனது 3-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தைப் பார்ப்பதால், உங்களால் நாணயத்துடன் நடந்துகொள்ளமுடியாமல் போகும். அது மட்டுமின்றி உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிப்படையும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவு ஏற்பட்டு மறையும். குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணம் இல்லாமல் போகும். வார்த்தைகளில் சிடுசிடுப்பு இருக்கும். கண்கள் சம்பந்தமான நோய் ஏற்படும். தேவையில்லாத அபவாதம் ஏற்படும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகலாம். கணவன்-மணைவி உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. புத்திர-புத்திரிகளின் போக்கு மனதுக்கு கவலையளிக்கும்.
கேது பகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தின்மூலம் நற்பலன்களாக நிகழும். உங்கள் ராசிக்கு குரு பகவானின் நற்பலன்களும் கூடுவதால், ராகுவின் தீய பலன்கள் பெருமளவுக்கு குறைய வாய்ப்புள்ளது. கேதுவின் சஞ்சாரம் தக்க முறையில் தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த போட்டியாளர்களையும் எதிரிகளையும் அழிக்கும். பழைய கடன்கள் அடையும். அதே சமயம் தொழிலைப் பெருக்க எதிர்பார்த்த புதிய கடனுதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் பண வரவு கிடைக்கும். சிலர் நூதனமான பொருள் விற்பனை மூலம் நல்ல லாபம் காண்பார்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நோயிலிருந்து விடுபடுவீர்கள். இதுவரை இருந்துவந்த மருத்துவச் செலவுகள் இனி இருக்காது. உங்கள் செல்வாக்கு உயரும். தாராள பணப்புழக்கம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் நல்ல நிலைமை ஏறப்டும். எடுக்கும் காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் உங்கள் புதிசாலித்தனத்தின்மூலம் வெற்றியடைவீர்கள். அரசியல்வாதிகள் , பத்திரிக்கையாளர்கள் ,மக்கள் பணி புரிபவர்கள் ஆகியோர் மேன்மையடைவார்கள். புதிய பட்டம் பதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து வளர்ச்சி காண்பீர்கள். சேவைத் துறையில் உள்ளவர்கள் மேன்மையடைவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களில் இதுவரை நிலவிவந்த தடைகளும் தாமதங்களும் நீங்கி, இப்போது சுப கார்யங்கள் நடந்தேறும்.
அரசியலில் இருப்பவர்கள் பிரபலமாகும் வாய்ப்புள்ளது. கேது பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தை தனது 3ம் பார்வையால் பார்ப்பதால், இதுவரை தொல்லை கொடுத்து வந்த பிரச்சினைகள் யாவும் அமுங்கிப்போகும். வேலைப்பளு அதிகமாகும். ஆனால் அதற்கேற்ற வருமானமும் இருக்கும். கேது பகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடத்தைப் பார்வையிடுவ்தால் தாயாரின் உடல்நலம் சிறக்கும். தாய்வழி உறவினர்கன் உதவி கிட்டும். சிலர் புதிய வண்டி வாகனத்தை வாங்குவார்கள். சிலர் வீடு மனை வாங்குவார்கள். விருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவீர்கள். தீர்த்த யாத்திரை செல்வீர்கள். பூர்வீகச்சொத்து மேன்மையடையும். கேதுபகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தால், மனதிற்குள் அசாத்திய துணிச்சல் ஏற்படும். மிகவும் சுறுசுறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்பட்டு வெற்றியை அடைவார்கள். கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். கணவன்-மனைவி உறவு சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். ராகுவின் கெடு பலன்கள் குறையும்.


ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - மேஷ ராசி 

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP