-->

2015-03-20

how to calculate astavarga points - அட்டவர்க்கப் படலம்:

சூரியபகவான் -சந்திரபகவான் பரல்கள்:
சூரியபகவான் பரல்கள் 8 ,-1-2-4-7-8-9-10-11. சூரியபகவான்
சந்திரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 4,-3-6-10-11. சூரியபகவான்
செவ்வாய்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 8,-1-2-4-7-8-9-10-11.
சூரியபகவான் புதன்பகவானுக்குகொடுக்கும் பரல்கள்7,-3-5-6-9-10-11-12.
சூரியபகவான் குருபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 4,-5-6-9-11.
சூரியபகவான் சுக்கிரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 3,6-7-12.
சூரியபகவான் சனிபகவானுக்கு கொடுக்கும் பரல்கள்8, 1-2-4-7-8-9-10-11.
சூரியபகவான் லக்கினத்திற்க்கு கொடுக்கும் பரல்கள்6,3-4-6-10-11-12.
சந்திரபகவான் பரல்கள் 6-1-3-6-7-10-11. சந்திரபகவான்
சூரியபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 6-3,6,6,7,8,10,12.
சந்திரபகவான் செவ்வாய்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 7-2,3,5,6,9,10,11.
சந்திரபகவான் புதன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 8-1,3,4,5,7,8,10,11.
சந்திரபகவான்குருபகவானுக்கு கொடுக்கும் பரல்கள்7- 1,4,7,8,10,11,12.
சந்திரபகவான் சுக்கிரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 7-3,4,5,7,9,10,11.
சந்திரபகவான் சனிபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 4-3,5,6,11.
சந்திரபகவான் லக்னத்திற்க்கு கொடுக்கும் பரல்கள்4- 3,6,10,11.

செவ்வாய்பகவான் –புதன்பகவான் அட்டவர்க்கப் படலம்:
செவ்வாய்பகவான் பரல்கள் 7-1,2,4,7,8,10,11.
செவ்வாய்பகவான் சூரியபகவானுக்குகொடுக்கும் பரல்கள் 5-3,5,6,10,11.
செவ்வாய்பகவான் சந்திரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 3-3,6,11.
செவ்வாய்பகவான் புதன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 4-3,5,6,11.
செவ்வாய்பகவான் குருபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 4- 6,10,11,12.
செவ்வாய்பகவான் சுக்கிரன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 4-6,8,11,12.
செவ்வாய்பகவான் சனிபகவானுக்கு கொடுக்கும்பரல்கள் 7-1,4,7,8,9,10,11.
செவ்வாய்பகவான் லக்னத்திற்க்கு கொடுக்கும் பரல்கள்5-1,3,6,10,11.
புதன்பகவான் பரல்கள் 8-1,3,5,6,9,10,11,12.
புதன்பகவான் சூரியபகவானுக்குகொடுக்கும் பரல்கள் 5-5,6,9,11,12.
புதன்பகவான் சந்திரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 6-2,4,6,8,10,11.
புதன்பகவான் செவ்வாய்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்8- 1,2,4,7,8,9,10,11.
புதன்பகவான் குருபகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 4-6,8,11,12.
புதன்பகவான் சுக்கிரன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள் 8-1,2,3,4,5,8,9,11.
புதன்பகவான் சனிபகவானுக்கு கொடுக்கும்பரல்கள் 8-1,2,4,7,8,9,10,11.
புதன்பகவான் லக்னத்திற்க்கு கொடுக்கும் பரல்கள் 7- 1,2,4,6,8,10,11.

குருபகவான் –சுக்கிரன்பகவான் அட்டவர்க்கப் படலம் :
குருபகவான் பரல்கள்-8-1,2,3,4,7,8,10,11.
குருபகவான் சூரியபகவானுக்குகொடுக்கும் பரல்கள்-9-1,2,3,4,7,8,9,10,11.
குருபகவான் சந்திரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள்-5- 2,5,7,9,11.
குருபகவான் செவ்வாய்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்-7- 1,2,4,7,8,10,11.
குருபகவான் புதன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்-8- 1,2,4,5,6,9,10,11.
குருபகவான் சுக்கிரன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்-6- 2,5,6,9,10,11.
குருபகவான் சனிபகவானுக்கு கொடுக்கும்பரல்கள்- 4- 3,5,6,12.
குருபகவான் லக்னத்திற்க்கு கொடுக்கும் பரல்கள்-9- 1,2,4,5,6,7,9,10,11.
சுக்கிரபகவான் பரல்கள்-9- 1,2,3,4,5,8,9,10,11.
சுக்கிரபகவான் சூரியபகவானுக்குகொடுக்கும் பரல்கள்-3- 8,11,12.
சுக்கிரபகவான் சந்திரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள்-9- 1,2,3,4,5,8,9,11,12.
சுக்கிரபகவான் செவ்வாய்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்-6- 3,5,6,9,11,12.
சுக்கிரபகவான் புதன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்-5- 3,5,6,9,11.
சுக்கிரபகவான் குருபகவானுக்கு கொடுக்கும் பரல்கள்-5- 5,6,8,9,10,11.
சுக்கிரபகவான் சனிபகவானுக்கு கொடுக்கும்பரல்கள்-7- 3,4,5,6,9,10,11.
சுக்கிரபகவான் லக்னத்திற்க்கு கொடுக்கும் பரல்கள்-8- 1,2,3,4,5,8,9,11.

சனிபகவான் அட்டவர்க்கப் படலம் :
சனிபகவான் பரல்கள்;4-3,5,6,11.
சனிபகவான் சூரியபகவானுக்குகொடுக்கும் பரல்கள்;7-1,2,4,7,8,10,11.
சனிபகவான் சந்திரபகவானுக்கு கொடுக்கும் பரல்கள்;3- 3,6,11.
சனிபகவான் செவ்வாய்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்; 6- 3,5,6,10,11,12.
சனிபகவான் புதன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்; 6- 6,8,9,10,11,12.
சனிபகவான் குருபகவானுக்கு கொடுக்கும் பரல்கள்; 4- 5,6,11,12.
சனிபகவான் சுக்கிரன்பகவானுக்கு கொடுக்கும் பரல்கள்;3- 6,11,12.
சனிபகவான் லக்னத்திற்க்கு கொடுக்கும் பரல்கள்; 6- 1,3,4,6,10,11.

சூரியபகவான் அட்டவர்க்கம்-48.
சந்திரபகவான்அட்டவர்க்கம்-49.
செவ்வாய்பகவான்அட்டவர்க்கம்-39.
புதன்பகவான்அட்டவர்க்கம்-54.
குருபகவான்அட்டவர்க்கம்-56.
சுக்கிரபகவான்அட்டவர்க்கம்-52.
சனிபகவான்அட்டவர்க்கம்-39.
அட்டவர்க்கம் மொத்தம்- 337.


திரிகோண சோதனை- ஏகாதிபத்திய சோட்தனை:

திரிகோண சோதனை.
1.மேஷம், சிம்மம், தனுசு; 2. ரிஷபம், கன்னி, மகரம்.
3.மிதுனம், துலாம்,கும்பம். 4.கடகம், விருச்சிகம், மீனம் .
திரிகோணம் என்ற கட்டத்தில் ஏழுதிக் கொண்டு வரவேண்டும் ஒரேஅளவுடைய பரல்களாக இருந்தால் அதை அப்படியே போட்டுக் கொள்ளலாம் பரல்கள் மாறுபட்டு இருந்தால் குறைவான பரல்களுக்கு ஏற்றபடி சரிசெய்து போடவேண்டும். பரல்கள் இல்லாமல் இருந்தலும் மற்றஒன்றில் இருக்கும் பரல்களையும் எடுத்து சைபர் என்று போட்டு விடவேண்டும்.

ஏகாதிபத்திய சோதனை:


ஏகாதி என்றால் ஏக ஆதிபத்தியம் என்று போருள்
அதாவது மேஷம், விருச்சிகம் இரண்டும் ஏக ஆதிபத்தியம்;
ரிஷபம், துலாம் இரண்டும் ஏக ஆதிபத்தியம்;
மிதுனம், கன்னி இரண்டும் ஏக ஆதிபத்தியம்;
மகரம், கும்பம் இரண்டும் ஏக ஆதிபத்தியம்;
தனுசு ,மீனம் இரண்டும் ஏக ஆதிபத்தியம்;
இரு இராசிகளுக்கும் ஒரே அதிபதி என்பதால் இவற்றுக்கு மட்டுமே ஏகாதிபத்திய சோதனை செய்ய வேண்டும். கடகம்- சிம்மம் ஆகிய இரு ராசிகளுக்கும் தனித்தனியே ஒற்றை ஆதிபத்தியமாக வருவாதால் ஏகாதிபத்திய சோதனை இல்லை.
ஏகாதிபத்திய இராசிகளில் பரல்கள் சம்மாக இருந்து இரண்டிலும் கிரகங்கள் இருந்தால் அவற்றின் பரல்களை போட்டுவிட வேண்டும்.

ஒன்றில் கிரகம் இருந்து மற்றதில் கிரகம் இல்லாமல் இருந்தால் இரண்டின் பரல்களும் சம்மாக இருந்தால் மாற்றம் செய்யாமல் அப்பயே போட்டுக் கொள்ள்லாம்.
இரண்டிலும் கிரகங்கள் இருந்தோ அல்லது இல்லாமலோ இருந்து பரல்கள் சம்மாக இல்லாமல் இருந்தால் குறைவான பரல்களுக்கேற்ப மற்றதைச் சரி செய்து கொள்ளவேண்டும். ஒன்றில் பரல்கள் இருந்து மற்றதில் பரல்கள் இல்லாமல் சைபராக இருந்தால் இரண்டையும் சைபராக்கிவிட வேண்டும்.

இராசி குணகாரம்,கிரக்குணகாரம்,குணசமுகம்,சுத்தபிண்டம் ஏகசமுகம்:

1)மேஷம்இராசி முதல் மீனம் இராசிவரையில் வரிசையாக ஒவ்வொருஇராசிக்கும் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது அந்த எண்கள்தான் இராசி குணகாரம் எனப்படும். மேஷம்- 7, ரிஷபம் -10, மிதுனம் -8, கடகம்- 4, சிம்மம்- 10, கன்னி -5, துலாம் -7,விருச்சிகம் -8,தனுசு -9, மகரம் -5, கும்பம் -11, மீனம் -12.

2)கிரக குணகாரகம் . சூரியபகவான் -5, சந்திரபகவான் -5, செவ்வாய்பகவான் -8, புதன்பகவான் -5, குருபகவான் -10, சுக்கிரன்பகவான் -7, சனிபகவான் -5.

3)இந்தகுணகார எண்களைக் கொண்டு இராசிபிண்டம், கிரகபிண்டம்கண்டுஅதன் பின் சோத்தியப்பிண்டம் காணவேண்டும்.

4)அட்டவர்க்க கணிதத்தில் திரிகோணம் ,ஏகாதி சோதனை செய்தபின் கிடைத்த ஏகாதி எண் சோதனையைக் கொண்டு ஒவ்வொரு இராசியிலும் உள்ள ஏகாதி எண் அந்தந்த இராசியின் குனாகார எண்ணால் பெருக்க வருவதுதான் இராசி பிண்டம் ஆகும்.

5)கிரக பிண்டம் காண அந்தந்த கிரகங்கள் நின்ற இராசியிலே ஏகாதி சோதனையில் எத்தனை எண் உள்ளனவோ அதை கிரக குனாகார எண்ணால் பெருக்க வருவதுதான் கிரக பிண்டமாகும்.


6)கிரக பிண்டத்தையும் ,இராசி பிண்டத்தையும் கூட்டினால் வருகின்ற தொகையே சத்திய பிண்டமாகும்…
தினகண்டம் -வயதுகண்டம:
முன் சொன்ன சோதனைப்படிக்குள்ள எட்டுவர்க்கமானவை.
ஆதிப்பரல், திரிகோணம், ஏகாதிபத்தியம், இராசி, குணகாரம், கிரக்குணகாரம், குணசமுகம், சுத்தபிண்டம், ஏகசமுகம், இவை அட்டவர்க்கமாம்.


தந்தைக்குக் சூரியபகவானு இருக்கும் 9 மிடத்திலிருந்தும்,
தாய்க்கு சந்திரபகவான் இருக்கும் 4 மிடத்திலிருந்தும்.
சகோதரனுக்கு செவ்வாய்பகவானுக்கு 3 மிடத்திலிருந்தும்,
கல்விக்கு புதபகவானுக்கு 4 மிடத்திலிருந்தும்.
குழைந்தைக்கு குருபகவானுக்கு 5 மிடத்திலிருந்தும்.
மனைவி அல்லது கணவனுக்கு சுக்கிரபகவானுக்கு 7 மிடத்திலிருந்தும்.
உடல்நலிவுகள்,பிணி,பீடைகள், கண்டங்கள் சனிபகவானுக்கு 8 மிடத்திலிருந்தும்.

ஒரு கிரகம் நின்ற இராசியிருந்து அதற்கு கொடுத்துள்ள ஸ்தானத்தில் அந்த கிரகம் எந்தனை பரல்கள் கொடுத்துள்ளதோ அதை அந்த கிரகத்தின் ஏகாதி பரல்களால் பெருக்கு வேண்டும் அதை 27 ஆல் வகுத்தல் வரும் ஈவை விட்டு மீதியை அஸ்வினி நட்சத்திரம் முதல் எண்ண வேண்டும் இதில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திரங்களின் (ஜென்ம, அனுஜென்ம திரிஜென்ம) திருகோண நட்சத்திரங்கள் உள்ள இராசியில் பாபர்கள் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு சிரமமான கெடுதலான பலன்களை கொடுக்கும். .

உதாரணம் சனிபகவான் கடகத்தில் உள்ளார் என்று வைத்துகொள்ளலாம் அதன் 8 ஆம் இராசி கும்பம் அதன் ஆதி பரல் 4 ஏகாதி பரல் 19 ஆல் பெருக்கி 27 வகுக்க வேண்டும் 22 ம் நட்சத்திரம் திருவோணம் வரும் அதன் அனுஜென்ம திருஜென்ம நட்சத்திரங்களி சுபர்கள் சஞ்சரிக்கும் போது இலக்கின சுபர்களின் பார்வை இணைவுகள் இருந்தால் அந்த வர்க்கத்துக்கு சுபமான நல்ல பலன்கள்களையும் . பாபர்கள் சஞ்சரிக்கும்போது பாபர் பார்வை இணைவு ஏற்படும்போது ஜாதகருக்கு நல்ல பலன்கள் செய்ய மாட்டார்கள் .


அஷ்டவர்க்க கணித ரீதியாக கோசாரத்தில் எந்தெந்த இராசிகளில் கிரகங்கள் அதிக பரல்கள் கொடுத்துள்ளதோ அந்த இராசிகளில் கிரகங்கள் சஞ்சரிக்கும்போதும் சுபர் பார்வை இணைவுகள் இருந்தால் தங்கள் தசா புத்தி அந்தர காலங்களில் நல்ல பலன்களை கொடுக்கும்.
எந்தெந்த இராசிகளில் கிரகங்கள் குறைவான பரல்கள் கொடுத்துள்ளதோ அந்த இராசிகளில் சஞ்சரிக்கும்போது தங்கள் சுபர்களாக இருப்பினும் கூட தசா புத்தி அந்தர காலங்களில் நல்ல பலன்களை செய்ய மாட்டார்கள். நன்றி ...

ரா.ஆறு முகம் ஜோதிடர்

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP