ஜாதகபலன்கள் பாகம் 1:
ஒரு ஜாதகத்தில் பலாபலன்களை சொல்லவேண்டுமானால்
குறிப்பிட்ட காரக பாவத்தையும் காரக கிரகத்தையும் பார்த்து பலன்கள் சொல்லவேண்டும் ஸ்தானங்கள் சுபருடைய ஸ்தானங்களா பாபருடைய ஸ்தானங்களா , அந்த ஸ்தானாதிபதிகளும் காரக கிரகமாகிய கிரகமும் சுபர் இராசியில் உள்ளதா அல்லது பாபா இராசியில் உள்ளதா பாபரால் பார்க்கப்பட்டிருக்கின்றார்கள சுபருடன் அல்லது பாபர்களுடன் செர்ந்துவுள்ளர்களா என்றுபார்த்து சொல்லவேண்டும்.
குறிப்பிட்ட காரக பாவத்தையும் காரக கிரகத்தையும் பார்த்து பலன்கள் சொல்லவேண்டும் ஸ்தானங்கள் சுபருடைய ஸ்தானங்களா பாபருடைய ஸ்தானங்களா , அந்த ஸ்தானாதிபதிகளும் காரக கிரகமாகிய கிரகமும் சுபர் இராசியில் உள்ளதா அல்லது பாபா இராசியில் உள்ளதா பாபரால் பார்க்கப்பட்டிருக்கின்றார்கள சுபருடன் அல்லது பாபர்களுடன் செர்ந்துவுள்ளர்களா என்றுபார்த்து சொல்லவேண்டும்.
1)உடல்பற்றி தெரியவேண்டுமானால் 1ம் ஸ்தானம் 6ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் சூரியபகவான் இவர்கள் நல்ல நிலைகளில் இருந்தால் அதற்க்கு தகுந்தவாறு உடல் பலம் இருக்கும்.
2)கண்களை பற்றி தெரியவேண்டுமானால் 2ம் ஸ்தானம் 12ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் சந்திரபகவான் சூரியபகவான் இவர்களின் சுப பாபா நிலைகள் தெரிந்து சொல்லாம் 2வது ஸ்தானம் சூரியபகவான் வலதுபக்கம் கண், 12வது ஸ்தானம் சந்திரபகவான் இடதுபக்கம் கண்.
3)காதுகள் பற்றி தெரியவேண்டுமானால் 3ம் ஸ்தானம் 11 ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் குருபகவான் செவ்வாய்பகவான் இவர்களின் சுப பாபா நிலைகள் தெரிந்து சொல்லாம் 3வது ஸ்தானம் செவ்வாய்பகவான் வலதுபக்கம் காது ,11 வது ஸ்தானம் குருபகவான் இடதுபக்கம் காது.
4)வித்தைகள் (அல்லது கலைகள்) பற்றி தெரியவேண்டுமானால் 2ம்ஸ்தானம் 4ம் ஸ்தானம் 5ம் ஸ்தானம் 11ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் குருபகவான் புதபகவான் சுப பாபா பலத்தையும் தெரிந்து சொல்லாம்.
5)வாகனம் பற்றி தெரியவேண்டுமானால் 4ம் ஸ்தானம் 11ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் சுக்கிரபகவான் சுப பாபா நிலைகள் தெரிந்து சொல்லாம். சர்ப்பா கிரகம் என்பதால் இராகுபகவானையும் கவனத்தில்கொண்டு பார்க்கவேண்டும்.
6)வீடு பூமி பற்றி தெரியவேண்டுமானால் 2ம் ஸ்தானம் 4ம் ஸ்தானம் 10ம் ஸ்தானம் 11ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் செவ்வாய்பகவானின் சுப பாபா பலம் அறிந்து பூமி பற்றி சொல்லவேண்டும். 4ம் ஸ்தானம் 10ம் ஸ்தானங்களின் பலத்தையும் சுக்கிரபகவானின் சுப பாபா பலம் அறிந்து வீடு பற்றி சொல்லவேண்டும்.
7)தாய் பற்றி தெரியவேண்டுமானால் 2ம் ஸ்தானம் 4ம்ஸ்தானம் 7ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரபகவானும் பகலில் பிறந்தவர்களுக்கு சுக்கிரபகவானையும் கொண்டு சுப பாபா பலம் அறிந்து சொல்லவேண்டும்.. சுக்கிரபகவானும்,
8)மாமன் (மாதுலன் )பற்றி தெரியவேண்டுமானால் 5ம் ஸ்தானம் 6 ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் புதபகவானின் சுப பாபா பலம் அறிந்து சொல்லவேண்டும்.
9)பங்காளி, சத்துரு பற்றி தெரியவேண்டுமானால் 6ம் ஸ்தானாதிபதி இலக்கினாதிபதியையும் சுப பாபா பலம் அறிந்து சொல்லவேண்டும் .
By TamiJothidamTips |  21:22
Learn Vedic Astrology Lessons Basics
nandru..
ReplyDeletehttp://www.dhivyarajashruthi.in
http://filminstitutechennai.in