-->

2015-03-20

புத்தி,அந்தரம்,சூட்சுமம்

புத்தி,அந்தரம்,சூட்சுமம்:
தத்தத் கேட தஸாதஸா வினிஹதா மாஸா : புரோங்கஸ்தாதா ஸ்த்வன்தயாங்க ஸ்திரிகுணோ தினானி ஸத்தம் த்வேவம் வஹி சாந்தர்தஸா:! தத் பக்திஸ்து திநீக்ருதா கரஹ்ருதா தத்தத்த ஸாதாடிதா நாட்யாத்யா விதஸா வியத்ரஸ ஹருதா சேத்ஸா தினத்யா பவேத்!! தத்வாத் ஸுக்ஷ்ம தஸாத யோபி கதிதாஸ் சைகோ விஸேஷோ ஸ்திதத் க்ரஸ்ராத்யா கடிகாதி ரூபமிஹ சாதோ தோ வர்ஜந்தி க்ரமாத்!!!
ஒரு கிரகத்தின் தசையில் புத்தியைக் கணக்கிட அந்தகிரகத்தின் தசா வருடங்களை தேவையான புத்திக்குரிய கிரகத்தின் தசை வருடங்களால் பெருக்க வேண்டும் ..._______அவ்வாறு பெருக்கிவந்த தொகையின் கடைசி எண்ணை மூன்றால் பெருக்க வருவது நாட்களாகும் ...__மீதமுள்ள எண்கள் புத்தியின் மாதங்களாகும் .._____________இதுப்போல் ஒவ்வொரு கிரகத்தின் திசைகளுக்கும் புத்திகளையக் கணிக்கிட வேண்டும் ...__________
புத்தி நாட்களைத் திசா வருடத்தால் பெருக்கி 120 ஆல் வகுக்க வருவது அந்தரமாகும் ....இதுபோலவே சூட்சமம் கணக்கிட வேண்டும் ...________சூட்சும நாள்,நாழிகை,விநாடிகளாக மட்டுமே வரும் ....___________
உதாரணம்:
புத்தியை கணிப்போம் சனிபகவான் திசையில் இராகுபகவான் புத்தியைக் கணிப்போம்..__சனிபகவான் தசா வருடம்: 19 இராகுபகவான் தசா வருடம் 18 இவ்விரண்டையும் பெருக்க: 342 வரும் இதில் கடைசியில் உள்ள எண்ணை 2-ஐ 3-ல் பெருக்க 6 நாட்களாகும் மீதமுள்ள எண் 34 என்பது மாதங்களாகும் ..__இதுதான் சனிபகவான் தசையில் இராகுபகவான் புத்தியாகும்...___________அதாவது இராகுபகவான் புத்தி 34 மாதம் 6 நாள்..______
2 வருடம் 10 மாதம் 6 நாட்களாகும் ....._____________
இனி அந்தரம் கணிப்போம் :
கேதுபகவான் திசையில் இராகுபகவான் புத்தி 12 மாதம் 18 நாட்களாகும் ....இதை நாட்களாகக 378 வரும் இதனை இராகுபகவான் 18
திசையால் பெருக்கவேண்டும் 6804 இந்த எண்ணை 120-ல் வகுக்கவேண்டும்
120)6804(56
6720
மீதி 84 இதனை 60 ஆல் பெருக்கவேண்டும் 5040 வரும் இந்த எண்ணை 120-ல் வகுக்கவேண்டும் 120)5040(42 நாழிகையாகும் ...______
கேதுபகவான் திசையில் இராகுபகவான் அந்தரம் 1மாதம் 26 நாட்கள் 42 நாழிகையாகும் ...____
சூட்சுமம் கணிப்போம்:
குருபகவான் திசையில் சுக்கிரபகவான் புத்தியில் சனிபகவான் அந்தரத்தில் புதன்பகவான் சூட்சுமம் எவ்வளவு காலம் என்பதை கணிக்கலாம்....
சனிபகவான் அந்தரம் 5 மாதம் 2நாள் இதனை நாழிகையாக்க 9120
9120 புதன்பகவான் திசை 17 இவ்விரண்டையும் பெருக்க 155040 இதனை 120 ஆல் வகுக்க 120) 155040(1292 நாழிகை இதனை ஒரு நாள் நாழிகை 60ஆல் வகுக்க 21 நாள் 32 நாழிகை ...இதுதான் குருபகவான் திசையில், சுக்கிரபகவான் புத்தியில்,சனிபகவான் அந்தரத்தில், புதன்பகவான் சூட்சுமம் நாட்கள் ஆகும் ...இதுபோலவே ஒவ்வொரு கிரகத்திற்கும் கணித்து பார்க்கவும்...____நன்றி ..._____________
By
ரா.ஆறு முகம் ஜோதிடர்

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP