-->

2015-04-02

திக்பலம் பலன்கள் :



திக்பலம் பலன்கள்:
1.இலக்கினம் உதயம் கிழக்கு என்றுச் சொல்லக்கூடிய முதல் பாவம் காரகம் அறிவு,தோல்,கெளரவிக்கப்படுதல்,செயலாற்றும் திறமை ஆகியவைகள் உள்ளது... குருபகவான், புதபகவானும் 1 மிடத்தில் திக்பலம் பெறுவார்கள் அவர்களின் காரகம் புதபகவானின் காரகம்- வித்தைகள்,கணிதம்,கல்வி,அறிவு, விவேகமான பேச்சாற்றல் அல்லது சொற்பொழிவு, நகைச்சுவை உணர்வு ஆகியவை புதபகவானின் காரகத்துவங்கள்....குருபகவானின் காரகம்- தனம்,அரசாங்க

சன்மானம்,ஆசிரியர்,சமுதாய மதக்கடமைகள்,தர்க்கம்,வேதாந்தம்,நடுநிலைமை,அறிவுத்திறமை,நீதி சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆகியவை குருபகவானின் காரகத்துவங்கள்....ஒரு ஜாதகத்தில் குருபகவான் புத்தபகவானும் திக்பலத்தில் பலமுடன் இருந்தலேப்போதும் அந்த ஜாதகர் அரசாங்க காரியத்தில் வெற்றி, புத்திசாலித்தனம்,கல்வி, தனம் ஆகியவைகள் அந்த ஜாதகரிடம் இருக்கும் திக்பலத்தொடு இருக்கும் கிரகம் தனது காரக பலன் நல்லப்படியாக தரும் ......
இவர்கள் இலக்கினத்தில் பாவத்தில் இருக்கவேண்டியதில்லை இவர்கள் நீசம், பகை பெற்று இருந்தாலும் திக்பலம் பெரும் பாவமாக இருந்தால் நல்ல பலன்கள் கொடுக்கும்..... இலக்கின சுபர்களாக இருந்து திக்பலம் பெற்ற கிரகம் அம்சத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் அதிக நன்மைகள் தரும்....குருபகவான் புதபகவானும் திக்பலம் குறைந்தது இருந்தால் அவர்களின் காரகம் அந்த ஜாதகரிடம் குறைவாகவே காணப்படும் .......உதயம் இலக்கினம் என்று சொல்லப்படும் கிழக்கு திக்பலம் பெரும் கிரகங்களான குருபகவான்,புதன்பகவானும் பலம் இழந்து இருந்தாலும்கூட திக்பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் கல்வி பெற்று இருப்பார், சிறந்த அறிவாளியாகவும்இருப்பார் , பணம் தட்டுப்படும் இருக்காது

by தமிழ் ஜோதிடம்

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP