-->

2015-11-26

How to predict dasha results

தசா பலன்கள் அறிவது எப்படி
==============================

லக்னாதிபதி பலம் மற்றும் திசா நாதன் காரக பலம் மற்றும் அம்சத்தில் உள்ள பலம் கணித்து பின்னர் தசா பலன் அறிதல் நலம்.
1. தசாநாதன் நின்ற பாவதிபத்தியம்,
2. தசா நாதன் பெற்ற பாவதிபத்தியம்,
3. தசா நாதன் பார்க்கும் பாவதிபத்தியம்
4. தசா நாதன் நின்ற சார நாதனின் ஆதிபத்தியம்,
5. தசா நாதனுடன் சேரும் கிரகத்தின் பாவதிபத்தியம்,
6. தசா நாதன் நின்ற சாரநாதன் பெற்ற ஆதிபத்தியம்.
இவற்றில் அசுப ஆதிபத்தியம் (6, 8, 12) அதிகம் எனில் அசுப பலன்களையும், சுப ஆதிபத்தியம் அதிகம் எனில் நன்மையையும் தரும் என எடுத்து கொள்ளலாம்.
குறிப்பு - குரு பார்வை அசுப இடங்களான 6, 8,12 பட்டால், சுபமான இடங்களாக மாறும்.
இதில் கோசாரம் கருத்தில் முக்கியமாக கொள்ளவேண்டும்.
கீழே இருக்கும் உதாரண ஜாதகத்தை எடுத்துகொள்ளலாம். அதில் குரு திசை கணிப்போம்.
குருவின் ஆதிபத்தியம் - 6, 9
குரு அமர்ந்த ஆதிபத்தியம் - 12
குரு பெற்ற சாரனதனின் (சுய சாரம்) ஆதிபத்தியம் - 6, 9
குரு பார்க்கும் ஆதிபத்தியம் - 4, 6, 8 (குரு பார்வை என்பதால் ஆறு மற்றும் எட்டு சுப தன்மை அடைகிறது).
பன்னிரெண்டும் இடது அதிபதி உச்சம் பெற்று குருவின் சுப செயல்களுக்கு ஊக்கம் கொடுத்தார்.
மொத்த பாவங்கள் - 4, 6, 8, 9, 12
இதில் குரு தான் நிற்கும் பாவத்தை கெடுப்பார் என்பதால், பன்னிரெண்டாம் பாவத்தில் இருக்கும் குரு, அசுப விரயத்தை தடுத்து, சுப விரயமாக தன் ஒன்பதாம் வீட்டினை பார்க்கும் குரு செய்யவைத்தார். ஒன்பதாம் பாவ (9) செயல்களான வேத, பாட சாலைகள், இலவச கல்யாணம், மற்றும் கோவில் கட்டும் பணியை செய்யவைத்தது, நான்காம் (4) பாவ செயல்களான ஆரோக்கியம், வீடு மனை வாங்க சுப விரையம் செய்தது. குரு பார்வை ஆறாம் (6) இடமான எதிரிகள், கடன் மற்றும் எட்டாம் (8) இடமான அவமானம், விபத்தில் இருந்து காத்தது..
இங்கே, குரு திசையில் அனைத்தும் சுப பாவங்களே. மேலும் இவை அனைத்தும் கோசார குரு ஒன்பதாம் இடமான மேஷத்திற்கும், இரண்டாம் இடமான துலாதிற்கும் வந்த போது சுப விரையம் ஏற்பட்டது.
அன்புடன்,
மணிகண்டன் பாரதிதாசன் B.Tech., MBA

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP