-->

2015-12-17

Vedic Astrology Buying Vehicle - Vahana Yoga in Vedic Astrology | Tamil Jothidam Tips

வாகனம் வாங்கும் சூட்சுமம் ( Vahana Yoga in Vedic Astrology )
============================
ஜோதிடத்தில் ராசிகள் மூன்று வகையாக பிரிக்க படுகிறது. அவையாவன:
1. இரட்டை கால் ராசிகள் - மிதுனம், மீனம், கன்னி, தனுசு
2. நான்கு கால் ராசிகள் - மேஷம், ரிஷபம், சிம்மம்
3. பல கால் ராசிகள் - கடகம், விருச்சகம்
ஒருவர் எத்தகைய வாகனம் வாங்குவார் என இந்த ராசிகளின் அதிபதிகள் வைத்து கணிக்கலாம்.
4 வீடு அதிபதி ஒருவர் வாங்கும் வாகன யோகம் தருபவர். நான்காம் வீட்டு அதிபதி, மேற்கண்ட ராசிகளில் சமந்தபட, அதற்கு ஏற்றவாறு வாகன யோகம் அமையும்.
இதில் நான்காம் அதிபதி பலம் பெற, அதிக வாகனங்களும். ராகு கேது மற்றும் லக்ன பாவிகள் சமந்தபட, வாகனம் வாங்குவதில் சிரமங்களும், அப்படி வாங்கினாலும், நிலையின்மையும் ஏற்படும்.
சனி சமந்தபட்டால் ஏற்கனேவே பயன்படுத்திய வாகனமும், இல்லையேல், வாகனம் வாங்கி தான் பயன்படுத்தாத நிலை ஏற்படும் (அ) கடன் வாங்கி வாகனம் வாங்கும் நிலை ஏற்படும்.
இரண்டு கால் ராசிகள் சமந்தபட - இரண்டு சக்கர வாகனம்.
நான்கு கால் ராசிகள் சமந்தபட - நான்கு சக்கர வாகனம்.
பல கால் ராசிகள் சமந்தபட - பல சக்கரம் கொண்ட வாகனங்கள் (பேருந்து, லாரி மற்றும் பல)
வாகனங்களின் அதிபதியாக விளங்கும் சுக்கிரன், நான்கில் திக் பலம் பெற, ஜாதகர் பல வாகனங்களுக்கு அதிபதியாவர். சுக்ரனின் சாரம் ராகு, புதன் அல்லது செவ்வாய் சாரம் பெற்று, பத்தாம் இடத்தை பார்க்க, தொழில் இடத்தின் மூலமும் அல்லது அதன் லாபம் மூலமும் வாகன யோகம் பெறுவார்.
நான்கில் ராகு அமர்ந்து, ராகு அமர்ந்த வீடு நீர் ராசியாக இருந்து, அதன் அதிபதி லக்னத்தில், கேந்திரத்தில் மற்றும் தன வீட்டை பார்க்க, தீடிர் வாகன யோகம் உண்டு.
மகரம் கும்பம் மற்றும் துலாம் இவைகள் கால் இல்லா ராசிகள் எனவே, இவற்றின் பலன் மற்றவரை சார்ந்து வாகனம் வாங்கும் யோகம் அமைவதாக கொள்ளலாம்

By மணிகண்டன் பாரதிதாசன் 

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP