-->

2016-01-11

பன்னிரெண்டாம் பாவ காரகங்கள் | பன்னிரெண்டாம் பாவ பலன்கள் | 12th house in astrology

பன்னிரெண்டாம் பாவ காரகங்கள் | 12th house represents

காம விருப்பம் - சாதனை புரிதல்- பிறருடனான படுக்கை சுகம்- விரயம்- பணம் செலவழித்து அதனால் ஏற்படும் சுகங்கள்- மறைபொருள் மற்றும் அசாதரணப் பொருட்களைக் கண்டறியும் மனநிலைக்கு அடிமையாதல் - இரகசிய காதல் விவகாரங்கள் அல்லது பெண்களிடம் பகை ஏற்படும் அளவுக்கு சதி திட்டங்கள் தீட்டல்- செலவுகள் - மோசமான செய்கைகள் -வெகுதூரப் பயணங்கள் - வழக்கு விவகாரங்கள் - குற்றசாட்டுக்கள் - சிறைப்படுதல்- தண்டனை பெறுதல் - மோட்சம்- ஆத்ம விடுதலை- சொர்க்கம் - நரகம்- புண்ணியம்- தியாகம்- துறவு- தந்தைக்கு ஏற்படுகின்ற கவலைகள் - கஷ்டங்கள்-
குலமேன்மை- யாகம் போன்ற சுபகாரியங்கள்- பாவ காரியச் செலவுகள்- வெளிநாட்டில் தொழில் அமைதல்- பாதம் - இடதுகண் - இரகசிய எதிரி - மருத்துவ மனை - தற்கொலை - திருமணத்திற்குப் பின் பிறர்மேல் ஏற்படுகிற ஆசை- பாசம்- சொத்துக்கள்- பிரகாசமான - 12 ஆம் இடம் - கடகம்- விருச்சிகம்- அல்லது மகரமாகி அதில் சுக்கிரனிருக்க பிறருடன்- உடல் மற்றும் உணர்ச்சி பூர்வமான இன்பம் தூய்க்க தீவிரமான ஆசைகள் ஏற்படும்- இதில் அதிதீவிர ஈடுபாடு மனிதனைச் சீரழிக்கும்- பெண்களாயின் சமூகத்தைச் சீரழிக்கும் புல்லருவிகளாவர்- ஆண்களாயின் விபசாரவிடுதிகளை நடத்துபவர்களாய் இருப்பர் அல்லது பல பெண்களுடன் முறையில்லாத உறவு வைத்திருப்பவர்கள்.
சனியால் பாதிப்பு ஏற்பட பிரிவினை- விவாகரத்து- எதிர்பாலினரால் ஏற்படும் ஏமாற்றங்கள் - ஜாதகருக்கு மனக்கட்டுப்பாடும் - நல்ல ஆலோசனைகளும் அவசியமாகிறது- செவ்வாய் இரகசிய காதல்களையும்- மணவாழ்க்கையில் ஏற்படும் சலனங்கள்- சலசலப்புகள் - பொறாமைகள் மற்றும் கண்மூடித்தனமான காம விருப்புங்களையும் குறிகாட்டுகின்றன.

Svnarasimhan Rao

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP