-->

2016-01-08

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - சிம்ம ராசி | 2016 Rahu Ketu Transit Simha Rasi | Rahu Ketu peyarchi 2016 Simha Rasi

2016 - ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்: சிம்மம் ராசி
(Effect of Rahu transit in Leo for Simha Rasi)

வருகிற ஜனவரி  மாதம் 8 -ம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அப்போது ராகு  உங்கள்  ராசியிலும், கேது  கும்ப ராசியிலும் சஞ்சரிக்கவுள்ளார்கள். இப்படியாக ஜென்ம ராசியில் அமர்ந்துவிட்ட ராகு, தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 3-மிடமான விருச்சிகத்தையும், தனது 11ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11ம் இடமான கடத்தையும் பார்வையிடுகிறார். அதுபோல உங்கள் ராசிக்கு 7 ம் இடத்தில் அமர்ந்துள்ள கேதுபகவான், தனது 3 ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10ம் இடமான மிதுனத்தையும் பார்வையிடுகிறார்.
இது உங்களுக்கு சிறப்பான காலக் கட்டம் அல்ல. காரணமேயில்லாமல் அலைச்சல் இருக்கும். உடல்நலம் பாதிப்படையும். என்னவிதமான உடல்பாதிப்பு என்றும், என்ன வியாதியால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டுபிடிக்க முடியாமல் அரிய நோயாக படுத்தும். சிலருக்கு நுண்கிருமிகள் மூலம் விஷக் காய்ச்சல், வயிறு சம்பந்தமான பாதிப்புகள் அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு ஆகிய பாதிப்புகளும் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவுகூட ஏற்படலாம்.
அடிக்கடி பயணம் செய்யவேண்டி இருக்கும். ஆனால் அந்தப் பயணங்களால் எந்தப் பயனுமின்றி தேவையற்ற பயணங்களாக இருக்கும்.நீங்கள் மிகப் பெரிய அறிவாளியாக இருந்தாலும், எவ்வளவு படித்தவராக இருந்தாலும் இப்போது உங்கள் அறிவோ புத்திசாலித்தனமோ உங்களுக்கு கைகொடுக்காது. என்ன செய்யப்போகிறோம் என்ற மனக்குழப்பம் தீராமல் தவிப்பீர்கள். நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளும் உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்துவதாகவே இருக்கும். எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் உங்களால் தீர்க்க முடியாமல் போகும். தீர்வும் முடிவும் சரியாக எடுக்க முடியாமல் போகும். வருமானம் குறையும். தொழிலில் மந்தமான சூழ்நிலை காணப்படும். கொடுக்கல்-வாங்கல்கள் சிக்கலாகும். விரயச் செலவுகளும் மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். கட்டுப்படுத்த முடியாது. இந்தக்காலக்கட்டத்தில் வேற்று மதத்தினரை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கவேண்டாம். அவர்களால் ஆபத்து நேரும். சிலருக்கு வேற்று மதத்தினருடன் கூட்டுவியாபாரம் செய்யும் வாய்ப்பு தானாகவே அமையும். புத்திசாலித்தனமாக அதைத் தவிர்த்துவிடுங்கள். இல்லையென்றால், பணத்தையும் வாழ்க்கையையும் இழந்து கஷ்டப்படுவீர்கள்.
இந்தக் காலக் கட்டத்தில் தற்போது உள்ள நிலையிலேயே இருக்கலாமே தவிர புது முயற்சிகளைத் தவிர்க்கவேண்டும். புதிய தொழில் தொடங்கினால் பெருத்த நஷ்டத்தைச் சந்திக்க நேரும். சிலர் புதிய தொழிலில் முதலீடு செய்துவிட்டு, அந்தத் தொழிலைத் தொடரவும் முடியாமல், விட்டுவிடவும் முடியாமல் பெரிய சிக்கல்களில் சிக்கிக்கொண்டு அல்லாட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். சிலர் இருக்கும் வீட்டைவிட்டு வேறு வீட்டிற்கு மாறவேண்டிய சுழ்நிலை ஏற்படும். தங்களுடைய தொழில் ஸ்தாபனங்களை வேறு இடத்துக்கு மாற்றவேண்டிய கட்டாயம் உருவாகும். சிலருக்கு தங்கள் தொழிலையே இழக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.
அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு தற்போது கஷ்டமான சூழ்நிலை உருவாகும். வேலைப்பளு அதிகமாகும். மனதிலும் அமைதி இருக்காது. சக ஊழியர்கள் உங்களுடன் ஒத்துப்போக மாட்டார்கள். மேலதிகாரிகள் உங்கள் வேலையில் தொடர்ந்து,குறைகாண்பார்கள். உங்களுக்கு வேலைப்பளுவையும் அதிகப்படுத்தி தொந்தரவுகளை ஏறப்டுத்துவார்கள். மனக் கவலையில் ஏதாவது பேசிவிட்டீர்களானால், மிகவும் கஷ்டமான பணிக்கு மாற்றப்படுவீர்கள். அல்லது விருப்பமில்லாத இடத்துக்கு பணி மாற்றம் செய்யப்படுவீர்கள். அந்த இடமாற்றமும்கூட திடீரென அறிவிக்கப்பட்டு உங்களைத் திண்டாட வைக்கும். நேரான வழியில் நடந்து கஷ்டப்படுவதால், குறுக்கு வழியைத் தேடுவீர்கள். ஆனால், அந்தக் குறுக்கு வழியே உங்களுக்குப் பல பிரச்சினைகளைக் கொடுத்துவிடும். அதிலிருந்து தப்பிக்கவும் தொடர்ந்து தவறான வழியையே தேர்ந்தெடுப்பீர்கள். கடைசியில் எதுவும் முடியாமல், போட்டியாளர்களிடமே அவமானப்படநேரும்.
ராகு பகவான், உங்கள் ராசிக்கு 3ம் இடத்தைப் பார்ப்பதால்,உங்கள் சகோதரர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். சகோதரர்களுடன் கருத்துவேறுபாடுகள் விரோதங்கள் ஏற்படும். புதிதாகத் திருமணமானவர்களுக்கு பிரச்சினைகள் ஏறப்டும். கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்படும். உங்கள் எதிரிகள் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களைக் கவிழ்த்துவிடுவார்கள். யாருடனும் பழகுவதற்கு முன்னால் அவர் நல்லவரா கெட்டவரா என்று தெரிந்தகொண்டு பழகாமல் பழகியபின் அவர்களால் ஏற்படும் பிரச்சினைகளில் சிக்கி கஷ்டப்படுவீர்கள். சாதாரண செயலில்கூட தடைகள், இடைஞ்சல்கள் ஏற்படும். வீண் அலைச்சல்கள் பயனற்ற பயணங்கள் ஏற்படும்.குடும்பத்தில் ஒருவருடைய நிலை மிகவும் கலைக்கிடமாகும். குடும்பத்தாரின் உடல்நிலை மருத்துவச் செலவைக் கொடுக்கும். சில குடும்பங்களில் துக்க நிகழ்ச்சிகள் ஏற்படலாம். வறுமை, உணவுக்கே வழி இல்லாத நிலைகூட சிலருக்கு உருவாகலாம்.
கேதுபகவான் தற்போது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பது வாழ்க்கைத் துணையின் உடல்நிலையைப் பாதிக்கும். நண்பர்களிடமும் எச்சரிக்கையாகப் பழகாவிட்டால் நட்பு பகையாக மாறும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளியுடன் ரொம்பவும் அனுசரித்துப் போகாவிட்டால், கூட்டுத் தொழில் நசித்துப்போகும். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படுவதால் உங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலைக்கு ஆளாவீர்கள்.மனதில் பலவிதமான குழப்பங்கள் ஏற்படும். எந்த விஷயத்தையும் சிந்தித்து ஒரு முடிவெடுக்க முடியாமல் போகும். சிலர் சட்ட விரோதமான நூதனமான தொழிலை மேற்கொண்டு அதன் காரணமாக மோசம் போவார்கள். அல்லது அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவார்கள். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும்.
இந்தக் காலத்தில் கேதுபகவான உங்கள் ராசிக்கு 5ம் இடமான கும்பத்தையும் 9ம் இடமாகிய மிதுனத்தையும் பார்வையிடுகிறார். இதனால் தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. குழந்தைகள் விஷயத்தில் மனக்கவலை ஏற்படும். பூர்வீகச் சொத்தில் விவகாரங்கள் ஏற்படும். எதிலும் லாபத்தை எதிர்பார்க்க முடியாது. வருமானம் குறையும். விஷ ஜந்துக்களால் தீமை ஏற்படும். உறவுகள் பகையாகும். உறவினர்களிடம் விரோதம் ஏற்படும். இந்த சமயத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்களின் உதவி கிடைக்கும். யாருடனும் புதிதாகப் பழகவேண்டாம். புதிய நண்பர்களால் தொல்லைகள் ஏற்படும்.

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP