ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016| Rahu Ketu Peyarchi Palangal 2016
இந்த வருடம் ஜனவரி மாதம் 8-ம் தேதியன்று ராகுபகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் ,கேது பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.இந்த ராசிகளில் சுமார் ஒன்றரை வருடம் தங்கிப் பலன் புரிவார்கள்.சாதாரணமாக மற்ற கிரகங்கள் எல்லாம் மேஷம், ரிஷபம்,மிதுனம் என்ற வரிசையில் சுற்றும். ஆனால், ராகு-கேதுக்கள் மட்டும், மேஷம், மீனம், கும்பம் என்ற எதிர்த் திசையில் சுற்றிவரும். அதனால் இவைகளை வக்கிரகதியில் சுற்றி வரும் கிரகங்கள் எனலாம். இந்த ராகு -கேது பெயர்ச்சி, வாக்கிய பஞ்சாங்கப்படி 20.6.2014 என்று கணிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் ராகு பகவான்- கேது பகவான்களுக்கான வழிபாட்டு பூஜைகளும், பரிகார பூஜைகளும் இந்த தேதியில்தான் நடைபெறும் என்பதால், ராகு-கேது பெயர்ச்சியை நாம் ஜனவரி மாதம் 8 -ம் தேதி என்று எடுத்துக்கொண்டு பலன்களைப் பார்ப்போம்.
ராகு கேது என்னும் இந்த இரண்டு பாம்புக் கிரகங்களுக்கும் சொந்த வீடு, ஆட்சி வீடு, உச்ச வீடு என்று எதுவும் கிடையாது. ஜோதிட நூல்களில் ராகுவுக்கும் கேதுவுக்கும் ரிஷபத்தை உச்ச வீடாகவும், விருச்சிகத்தை நீச வீடாகவும் கூறுவதுண்டு. இவ்விரு கிரகங்களும் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த ராசி அதிபதிகளின் குணத்தையும் எந்த கிரகங்களோடு சேர்ந்திருக்கின்றனவோ அந்த கிரகங்களின் குணத்தையுமே பிரதிபலிக்கும். உதாரணமாக மீன ராசியிலிருக்கும்போது குருபகவானின் குணாதிசயங்களையும், கும்ப ராசியிலிருந்தால், சனி பகவானின் குணத்தையும் ராகு -கேதுக்கள் பிரதிபலிக்கும். ராகு-கேது ஆகிய இரு கிரகங்களும் 3,7 ,11 ஆகிய இடங்களைப் பார்க்கும்.
பரிகார ஸ்தலங்களான காளஹஸ்தி கோவிலுக்கும், திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் எனும் ஊருக்கு அருகிலுள்ள மன்னார்சாலாவுக்கும் சென்று பரிகார பூஜைகள் செய்து வரலாம். மேலும், திருநீர்மலை, திருவண்ணாமலை, குமரன்குன்றம் மற்றும் பர்வதமலை ஆகிய ஸ்தலங்களில் ‘கிரிவலம்’ செய்வதும் சிறந்த பரிகாரமாகும். ராகு பகவானுக்கு சனிக்கிழமைகளிலும், கேது பகவானுக்கு செவ்வாய்க்கிழமைகளிலும் எலுமிச்சம்பழ விளக்கேற்றி, எலுமிச்சம்பழ சாதம் நைவேத்தியம் செய்து, ராகுகாலங்களில் ராகு ஸ்தோத்திரமும், எமகண்டங்களில் கேது ஸ்தோத்திரமும் பாராயணம் செய்து வந்தால், ராகு கேதுவால் வரும் தோஷங்கள் விலகும்.
ராகு ஸ்தோத்திரம்:
அர்த்தகாயம் மகாவீர்யம்
சந்திராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராகும் ப்ரணயாம் யகம்
கேது ஸ்தோத்திரம்:
பலாச புஷ்ப சங்காசம்
தாரகா கிரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம்
கோரம் தம் கேதும் ப்ரணமாம் யகம்
இனி ராகு -கேது கிரகங்களுக்குரிய பெயர்ச்சிப் பலன்களை ஒவ்வொரு ராசிக்கும் பார்க்கலாம்.
ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - மேஷ ராசி
moonramkonam
By TamiJothidamTips |  10:08
Learn Vedic Astrology Lessons Basics
0 comments: