-->

2016-01-28

கல்வி ஜோதிடம் | Astrology and Education | Education in Vedic Astrolgoy


கல்வி ஜோதிடம் |How Planets Affect Education Education Horoscope In Astrology


இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு தன்னுடைய ஜீவனத்தித்ற்கு , சுக போக எதிர்கால வாழ்விற்கு, சமூகத்தில் மதிப்புடன் வாழ மற்றும் நல்ல குணநலன்களை பெற்று வாழ்கையில் திருப்புமுனையாக அமைத்து கொடுப்பது இந்த கல்வி ஆகும். எனவே தற்போது இதற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களுடைய குழந்தைகளை முன்னணியில் உள்ள கல்வி நிறுவனத்தில் பல லட்சம் செலவழித்து படிக்க வைக்கின்றனர். ஆனால் இதெல்லாம் எதற்கு? தன் குழந்தைகளை DOCTOR,ENGGINEER,PROFESSIONAL மற்றும் இதர துறைகளில் படித்தவுடன் CAMPUS INTERVIEW ல் வேலை கிடைக்கவேண்டும் என்றா நோக்கத்தில் தான். ஆனால் இதெல்லாம் நடக்கிறதா? பலருக்கு தோல்வி ஏற்படுகிறது இதற்கு காரணம் பல உண்டு அவற்றில் ஒன்று ஜாதகத்தை ஆராயாமல் ஜாதகரின் திறமைகளை அறியாமல் செய்யப்படும் முடிவும் ஒன்று ஆகும்.
எனவே PRE KG சேர்க்கும் முதலே குழந்தைகளின் ஜாதகத்தினை ஆராய்ந்து அவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது, நல்ல நாள் பார்த்து ஆரம்ப கல்வியை கல்வி நிறுவனத்தில் ஆரம்பிப்பது, இதெல்லாம் கணக்கில் கொண்டு பெற்றோர்கள் செயல் படும் போது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வாய்ப்புகள் ஏற்படுகிறது

அதற்கு ஜாதகத்தில் ஆராயவேண்டியவைகள் :
• 2 மிடம் ஜாதகரின் ஆரம்ப கல்வியை குறிக்கிறது
• 4 மிடம் பட்டப்படிப்பையும்
• 8 மிடம் தொழில் நுணுக்கக் கல்வியையும்
• 9 மிடம் உயர் கல்வி – PG COURSE
• 12 மிடம் ஆராய்ச்சி கல்வி
• 5 மிடம் திறமை,புத்திசாலித்தனம், ஞாபக சக்தி ஆகியவை குறிக்கும்

• மேலும் கல்வி காரகன் புதனின் நிலை, மனோ காரகன் சந்திரனையும், மூளை காரகன் குருவையும் ஆராய்ந்து பலன் உரைக்க வேண்டும்

• புதன் நீசமாக கூடாது. அந்த நீசா புதனை பாவ கிரகத்தின் பார்வை இருக்க கூடாது. 2ல் நீசக்கிரகம் இருக்ககூடாது

• புதன் நீசமானாலும் சில கிரக அமைப்பினால் கல்வியை ஏற்படுத்தி கொடுத்து விடும் உதாரணம் : மீனத்தில் புதன் நீசமடைந்து அங்கு குரு பகவான் ஆட்சி பெறும் போது நீசபங்கம் ஆகி புதன் பலம் பெற்று கல்வியை அளித்து விடுவார்.

• புதன் 2 மிடத்தில் இருப்பது கல்வியை ஏற்படுத்தி கொடுத்து விடும் என்பது விதி. புதனுடன் சூரியன் அல்லது குரு சேர்ந்து இருந்தால் நல்ல கல்வியை ஏற்படுத்தி விடும். ஆனால் தீய கிரகங்கள் தொடர்பு கல்வியை கெடுத்து விடும் அல்லது தடங்கல்களை ஏற்படுத்திவிடும்.

• எந்த லக்கனமாக இருந்தாலும் புதன் கன்னியில் இருந்தால் கல்வியில் உயர்வு உண்டு ஆனால் பாவக சக்கரத்தில் மாறாமல் இருந்து பரலின் எண்ணிக்கை 24 க்கு குறையாமல் இருந்து பாவ கிரகத்தின் தொடர்ப்பு இல்லாமல் இருக்கவேண்டும்

• பாவகர்த்தாரி தோஷத்தில் புதன் இருக்ககூடாது

• காரகன் பலமாக இருந்தாலும் காரகத்தின் வீடுகள் கெட்டுவிடக்கூடாது.
எனவே இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு ஜாதகரின் கல்வி நிலையை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் கல்வி நல்ல சிறப்பையும் அதற்கு உண்டான உத்தியோகம் / தொழிலை ஏற்படுத்தி கொடுத்து அவர்கள் வாழ்க்கை சுமை இல்லாமல் சுமூகமாக சிறக்க வழிவகை செய்யும்

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP