-->

2016-05-18

வீடுகட்டும் யோகம் யாருக்கு Who will have Own House?

வீடுகட்டும் யோகம் யாருக்கு  Who will have Own House?
============================
பிருகு நந்தி நாடி விதி மிக எளிமையாக வீடுகட்டும் யோகம் அமையும் உஒகம் பற்றி சொல்கிறது. ஜாதகத்தில் செவ்வாய் நிலத்தை குறிப்பவர். சுக்கிரன் சொகுசு வீட்டை குறிப்பவர். பலம் கொண்ட சுக்கிரன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் அல்லது அதே திசையில் அல்லது 2, 12 செவ்வாய் இருந்து சனி அல்லது குருவின் பார்வை பட, சொகுசு வீடு அமைகிறது. ராசிகள் குறிக்கும் திசைகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது பரிசோதனை செய்து சொல்லுங்கள்.
இங்கே பலம் என்பது ஆட்சி, உச்சம், சுய சாரம் மற்றும் நட்பு.
இந்த பலன் எப்போது நடக்கும்
=============================
மேற்கண்ட அமைப்பு இருந்து, ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரன் அல்லது செவ்வாய் இருக்கும் இடத்திற்கு கோசார குரு அல்லது கோசார சனி வரும் சமயம் இந்த பலன் கண்டிப்பாக நடக்கும்.
விதிவிலக்கு
============
சுக்கிரன் எதிரி கிரகமான கேது ஜாதகத்தில் சமந்தம் ஏற்பட்டால், மேற்கண்ட பலனில் சில சிக்கல்கள் ஏற்படும். அது போல செவ்வாய்க்கு கேது சமந்தம் பெற்று இருக்க கடன் பட்டு வீடுகட்டும் யோகம் அமையும்.

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP