துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019 :
துலாம் ராசிக்கு தற்போதைய கோச்சார நிலைகளே நல்ல பலனை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ குருவிற்கு உங்கள் ராசி ஆகவே ஆகாது.சனி தான் முழு ராஜ யோகாதிபதி என்றாலும் அவர் என்றைக்குமே நிறுத்தி நிதானமாக பலன்கள் கொடுப்பவர்.ஆனால் அவர் கொடுக்கும் பலன்கள் ஆயுளுக்கும் நன்மை அளிக்கும் வகையில் இருக்கும்.சரி குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி என்று பார்க்கலாம்.குரு 2ம் வீடான விருச்சிகத்தில் இருந்து மூன்றாம் வீடாகிய தனுசுவிற்கு செல்கிறார்.மூன்றாம் வீடு என்பது முயற்சி ஸ்தானம்.சகோதர ஸ்தானம்.முயற்சியை தான் சொல்கிறதே தவிர அதில் வெற்றி கிட்டுமா என்பதை சொல்லாது.
இது கொஞ்சம் சவால் மிகுந்த கால கட்டம்.ஏனெனில் குரு 3ல் நன்மைகள் செய்வார் என்று சொல்வதற்கு இல்லை.ஆனால் பழைய 2ம் பாவத்தில் செய்ய வேண்டிய பாக்கியே இன்னும் இருப்பதால் பெரும் சிக்கலும் இல்லை.உப செய ஸ்தானங்களில் பாப கிரகங்கள் மட்டுமே சிறப்பாக செயல்படும்.
குருவின் 5ம் பார்வை களத்திர ஸ்தானமாகிய 7ல் விழுவதால் திருமண யோகம் உண்டாகும். வாழ்க்கை துணைக்கு நன்மைகள் கிடைக்கும். இல்வாழ்க்கை இனிக்கும்.
குருவின் 7ம் பார்வை 9ம் பாவத்தில் விழுவதால் சில ஆன்மீக ரீதியான பயணங்கள் வழிபாடுகள் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
குருவின் 9ம் பார்வை 11ல் விழுவதால் வருமானம் கிடைக்கும்.உயர்வும் உண்டாகும்.ஆனாலும் குரு உங்கள் ராசிக்கு அள்ளி கொடுப்பவர் இல்லை கிள்ளி கொடுப்பவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் கை கொடுக்காது முயற்சிகள் தான் கை கொடுக்கும்.
ஆயினும் சனி உச்சம் பெறும் ராசியில் பிறந்த உங்களுக்கு உழைப்பு என்பது கை வந்த கலை.
குரு கொடுக்கா விட்டாலும் சனி பகவான் நிச்சயம் நன்மைகள் செய்வார்.அர்த்தாஷ்டம சனியாகவே இருந்தாலும் அவர் வழியில் கொடுக்க வேண்டிய நன்மைகளை கொடுக்கவே செய்வார்.ஏனெனில் அவர் உச்சம் பெறுவது உங்கள் ராசியில்.பெயர்ச்சி ஆகி சொந்த வீடான மகரத்திற்கு செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் சவால்களுக்கு தயாராகுங்கள்.வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள்.வெற்றியை நோக்கி செல்லுங்கள்.
பரிகாரம்:
தொடர்ந்து சிவ வழிபாடு செய்வது நல்லது. அதேபோல் திருவரங்கம் சென்று வருடம் ஒரு முறை வழிபாடு செய்து கொள்ள வேண்டும். நன்மைகள் கிட்டும்.
By
Ashwin Kumar
By TamiJothidamTips |  19:25
Learn Vedic Astrology Lessons Basics
0 comments: