-->

2015-03-20

How to select auspicious date - நல்ல நாள் தேர்ந்தெடுப்பது எப்படி

வணக்கம் நண்பர்களே ஒருவருக்கு சுபகாரியம் செய்ய வேண்டுமானால் நல்லநேரம் வேண்டும் அல்லவா அதற்கு என்ன செய்யவேண்டும் அந்த நேரம் தேர்ந்தெடுக்கும் முறை எப்படி தெரிந்து கொள்ளலாமா.......
சுபகாரியங்கள் செய்ய நல்லநாள் தேர்ந்தெடுக்கும் பொழுது கசரம் பார்க்கவேண்டும் அது எப்படி அதாவது சுபனால் அன்று சூரியபகவான் இருக்கும் நட்சத்திரம் முதல் சந்திரபகவான் இருக்கும் நட்சத்திரம் வரையில் எண்ணி ஒன்பதுக்கு மேல் போனால் ஒன்பதால் வகுக்கவேண்டும் அப்படி வகுத்த மீதி எண் 1,2,6,7,8,ஆகியவை வந்தால் சுபம் ஆகும் கசரம் இல்லை சுபகாரியங்கள் செய்யலாம்...
அப்படி வகுத்த மீதி எண் 3,4,5,9, ஆகியவை வந்தால் கசரம் யோகம் உள்ளது சுபகாரியங்கள் தவிர்க்கப்படவேண்டும் சுபகாரியங்கள் செய்யக் கூடாது.
நல்லநாள் தேர்ந்தெடுக்க அவசியம் பார்க்க வேண்டியது பஞ்சகம் .
அதையும் எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
1)ஞாயிற்றுக்கிழமை முதல் சுபனால் கிழமைவரையில் எண்ணி வரும் எண்.
2)பிரதமை திதி முதல் சுபனால் திதிவரையில் எண்ணி வரும் எண்.
3)அஸ்வினி நட்சத்திரம் முதல் சுபனால் நட்சத்திரம் வரையில் எண்ணி வரும் எண்.
4)மேஷம் இராசி முதல் சுபனால் செய்வதற்கு தேர்ந்தெடுக்கும் இலக்கினம் வரை எண்ணி வரும் எண்.
5)இலக்கின துருவ எண்.மேஷ லக்கினத்துக்கு 5. ரிஷபலக்கினத்திற்கு 7. மகரலக்கினத்திற்கு 2. கும்பலக்கினத்திற்கு 4. மீன லக்கினத்திற்கு 6.
ஐந்தையும் கூட்டி ஒன்பதால் வகுத்தால் வரும் மீதி 1,2,4,6,8, ஆக வந்தால் பஞ்சகம் இல்லை. 3,5,7,9. ஆக வந்தால் சுபகாரியங்கள் செய்யலாம். பஞ்சகம் அமையாவிட்டாலும் சில பொருள்களை தானம் செய்வதன்மூலம் பரிகாரம் செய்து சுபகாரியங்கள் செய்யலாம்.
கரிநாள் ,தனியநாள். தமிழகத்தில் இந்த நாட்களை சுபகாரியங்கள் செய்ய தவிக்கப்படுகிறது மற்ற மாநிலங்களில் கரிநாள் தனிய நாள் சுபகாரியங்கள் செய்ய அதிக முக்கியத்துவம் தருவதில்லை சுபகாரியங்கள் செய்கிறார்கள்...ஆடிமாதம்,புரட்டாசிமாதம், மார்கழிமாதம் ஆகிய மாதங்களில் அமாவாசைக்குப் பிறகு சுபகாரியங்கள் செய்கிறார்கள் சுபதிதி .சுபநட்சத்திரம்,சுபயோகம்,சேர்ந்தால் கரிநாள் ,தனிய நாட்களிலும் சுபகாரியங்கள் செய்யலாம் .
சுபகாரியங்கள் செய்ய நேரம் தேர்ந்தெடுக்கும்போது முக்குண வேலையைப் பார்த்து அனுசரித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
சுபகாரியங்கள் செய்யும் நேரத்தில் குருபகவான், சுக்கிரபகவான், புதபகவான், இலக்கினத்தை பார்த்தாலும் அல்லது இருந்தாலும், இலக்கினத்திற்கு பதினொன்னம் ஸ்தானத்தில் சூரியபகவான் இரும்தாலும் சகல தோஷங்களும் நீங்கும். சுபகாரியங்கள் செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் குருபகவான் ,சுக்கிரபகவான்,அஸ்தமனம் சமயங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் . முகூர்த்தம் நேரம் தேர்ந்தெடுக்கும் பொது இன்னும் சில விதிமுறைகள் உள்ளன அதனால் ஜோதிடர் அல்லாதவர்கள் ஜோதிடரிடம் சென்று சுபகாரியங்கள் செய்ய நேரம் தேர்ந்தெடுக்க வேண்டும்....நன்றி ...
ரா.ஆறு முகம் ஜோதிடர்

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP