லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் ஆகாத நட்சத்திரத்தில்.அதாவது லக்னாதிபதி புதன் நட்சத்திரத்தில் நின்றால் செவ்வாயின் நட்சத்திரம் ஆகாது
சூரியன் நின்றால்:- தந்தை வழி ஆதரவு சுகம் சொத்து வீடு கிடைப்பது கடினம். அரசாங்கத்தால் தொல்லைகள் கண், எலும்புகளில் பாதிப்பு அரசு வகை தொழில் இல்லாமை நீடிக்காமை.
சந்திரன் நின்றால் :- தாய் வழி உறவு, சுகம் சொத்து வகைகளா கிடைப்பது கடினம். மனக்கலக்கம், பயம், உடல் பாதிப்பு, ஜலகண்டம், தொழில் வகையில் பல துன்பங்கள், எதிலும் பிடிப்பற்ற நிலை.
செவ்வாய்நின்றால்:- சகோதரர்கள் இல்லாமை, ஒற்றுமைக்குறைவு, பிரிந்து வாழ்வது, இரத்த சம்பந்தமான நோய் தொல்லைகள், நிலம், விவசாய விசயங்களின் பாதிப்பு எதிர்பாராத விபத்து நெருப்பால் பயம்.
புதன் நின்றால்:- மாமன் வர்க நாசம், அவர்களால் நன்மை இல்லாத நிலை கல்வியில் தடை, கற்ற கல்வி கைகொடுக்காத சூழ்நிலை, நரம்பு, தோல் சம்பந்தமான நோய் பயம், தொழில் வியாபாரங்களால் பாதிப்பு.
குரு நின்றால்:- பிள்ளைகள் பாதிப்பு அவர்களால் நன்மை இல்லாமை அவர்களால் அவமானம், பொருளாதாரத்தில் சீர்குலைவு, அடிக்கடி பணத்தட்டுப்பாடு, மூளை வளர்ச்சி குறைவு, உயர்ந்த பதவிகளில் வீழ்ச்சி இறக்கம்.
சுக்கிரன் நின்றால்:- திருமண வாழ்வு சிறப்பில்லாமை, கணவன், மனைவி ஒற்றுமைக் குறைவு, விவாக தடை, தாய் வகை பாதிப்பு, மேக ரோகங்கள், பெண்கள் கையில் அபகீர்த்தி பாதிப்பு, துர்நடத்தையால் அவமானம்.
சனி நின்றால்:- ஆயுளுக்கு பங்கம் கடுமையான சோதனைகளுக்கு ஆளாகுதல், தோல் – வாதம் போன்ற நோய் தொல்லை சிறை பயம் அபராதம், தகாத நடவடிக்கைகளால் அவமானம் எதிரிகளால் வரும் ஆபத்துக்கள்.
ராகு, கேது நின்றால்:- தாய், தந்தை வர்காதிகளுக்கு குற்றம், தரித்திர தன்மை, பிற மதத்தினரால் பயம், துர்தேவதா தேவதைகளால் பாதிப்பு, மது, மங்கை போன்ற ஈடுபாடுகள் அதிகம். வெளியிடங்களில் ஏற்படும் அவமானம்.விஷத்தால் கண்டம்.
ஜம்பு மகரிஷி வாக்கிய ஜோதிட நிலையம்
ஜம்பு மகரிஷி வாக்கிய ஜோதிட நிலையம்
By TamiJothidamTips |  19:26
Learn Vedic Astrology Lessons Basics
0 comments: