-->

2016-01-14

ராகுவின் பாதிப்புகள் | Effects Of Rahu In Jothidam

ராகுவின் பாதிப்புகள்.

-----------★------------
ராகு கேது என்றாலே அலறும் மக்கள் இருக்கிறார்கள்.அதில் ஞாயம் உள்ளதா?என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
"வட்ட வான்மதிக்கு இரண்டில்
பனிரெண்டில் திட்டமாய்
அரவு தனியாய் இருந்திடில்
அட்டமாதிபன் தரும் இடர்
அணைத்தையும் அரவு கவர்ந்து
தொல்வினை விதியெல்லாம்
இணைந்து துயர் செய்வானே"
அதாவது ராகுவானவர் சந்திரனுக்கு இரண்டிலோ, பனிரெண்டிலோ இருந்தால் அஷ்டமாதிபன் அளிக்கும் துன்பத்தையெல்லாம் முன் ஜென்ம பாபகர்மத்திற்கேற்ப ராகுவே தந்துவிடுவார்.என ஒரு ஜோதிட பாடல் மிரட்டுகிறது.
இன்னொரு பாடல்...
"தீதில்லா ஏழுபத்தில் அரவு நின்றால்
துன்பமுண்டு மனைவியினால் திண்ணமாக
பாங்கில்லா களத்திரத்தால் பதைப்புமுள்ளான்
பலபேரைக் கூடிடும் தன்மையுமுண்டு
உள்ளதோர் தொழில் வழியில் நிலையில்லாதான்
வளமில்லா அடிமைத்தொழில் செய்பவனாவான்
இங்கிவர்க்கு பொருள்பலவும் உண்டென்றாலும்
இவனுக்கு சுகமில்லை என்றே கூறுவாயாக."
என்று ஒரு பாடலில் 7மிடத்தில் ராகு இருந்தால் மனைவியும்,குடும்ப வாழ்வு நிம்மதி தராது என்றும்.10மிடத்தில் ராகு இருந்தால் தொழில் எதுவும் நிலைக்காமல் அடிமைத் தொழில் ஏற்படும் என அச்சுறுத்துகிறது.சரி பனிரெண்டு பாவங்களிலும் ராகு என்ன பாதிப்புதான் ஏற்படுத்திவிடுவார் என பார்ப்போம்.

Effects of RAHU in different Houses

1,லக்னத்தில் இருந்தால்.
----------- --------- -------
ராகுவானவர் பொதுவாக குணக்கோடுகளை உருவாக்குபவர்.இவர் லக்னத்தில் இருப்பது சிறப்பாகாது.துஷ்ட குணம்,கெட்ட சகவாசம், கெடு புத்தி, பிறரை கெடுக்கும் குணம்,ஏமாற்று தல்,பொய்பேசல்,முரட்டுத்தனம், பிடிவாதம், மறுத்து பேசுதல்,சுயநலம், மறைத்து பேசுதல்,குழப்பநிலை,விஷஜந்துக்களால் பாதிப்படைதல்,மணவாழ்வில் பிரச்சனை, மனைவியை சந்தேகித்தல்,வேறு பெண்ணுடன் தொடர்பு,திருமண தடை, போன்ற தீயப் பலனைச் செய்வார்.லக்னத்தில் இவரோடு வேறுகிரகங்கள் சேர்ந்தாலும் இவரை கட்டுப் படுத்த இயலாது.
ராகு பகை,நீச்சமாக இருந்தால் மட்டும் வலிமை குறைவதால் பிற கிரகங்கள் வலிமை பெறும்.ராகு நீச்சபங்கமாகிவிட்டாலும் வலிமை பெற்றுவிடும்.குருவின் பலத்தையே குறைத்துவிடுவார்.ஆனால் குருவின் 5,9ம் பார்வையால் மட்டும் ராகு கட்டுபடுவார்.ஆக லக்ன ராகு தோஷமே.
2,இரண்டில் ராகு இருந்தால்.
------------- ------ ------------
இரண்டாம் பாவத்தில் ராகு இருந்தால்,வாக்கு,வருமானம், சுய குடும்பம்,கல்வி ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவார்.
பேச்சில் தடுமாற்றம், பொய்பேசல்,விதண்டாவாதம்,கடுமையாக பேசுதல்,பேசி ஏமாற்றுதல் ஆகிய வாக்கு பாதிப்பையும்.
வருமானம் சீராக இருக்காது ஏற்றதாழ்வுடன் இருக்கும்.குறுக்கு வழியில் சம்பாதிக்க தூண்டும்,அடிமைத்தொழில் மூலம் வருமானம் ஈட்டும்படி செய்யும்.
சுய குடும்பம் அமையத்தடை,சண்டை,பிரிவு,உண்டாக்கும்.
3,மூன்றாம் பாவம்.
----------- -----------
குருட்டு தைரியத்தையும்,சகோதர தோஷத்தையும் உண்டு பண்ணும்.
காது நோய்
4,நான்காம் பாவம்.
------------ ----------
நான்காம் பாவம் தாயார் ஸ்தானமாகும்.எனவே தாயார் நிலையை பாதிப்பு செய்வார்.4ம் இடம் கேந்திரமாகும்.கேந்திரத்தில் பாவர்க்கு பலம் அதிகம்.எனவே பாதிப்பு அதிகம் காட்டுவார்.தாய்க்கு உடல் நலபாதிப்பு,தாய் பிரிவு ஏற்படுத்துவார்.
வீடு,மனை,வாகனத்திலும் பாதிப்பை தருவார்.ரேஸ்,லாட்டரி என செலவினம் வைப்பார்.
சுகத்தை கெடுப்பார்.நண்பர் உறவினர்களுடன் விரோதம் உண்டாக்குவார்.குடும்ப வாழ்வு சண்டை சச்சரவு ஏற்படும்.
5,புத்ரபாக்யம்,பூர்வ புண்ணியம்.
---------------- -------------------
குழந்தை பாக்யத்திற்கு தோசமும்,
பூர்வீக சொத்து,பாட்டன்,தாய் மாமன் ஆகியோருக்கு பாதிப்பு தரும்.
6,ஆறாம் பாவம்.
--------- ---------
ராகு ஆறாம் பாவத்தில் கெடுபலனே இல்லை.நற்பலன்தான்.நோய்,கடன்,எதிரிகள் இல்லாமல் உயர்த்திவிடுவார்.
7,ஏழாம் பாவம்.
---------★------
ஏழாம் இடத்து ராகு திருமணவாழ்வை தடைபடுத்துவார்.
7ல் எந்த நிலையில் இருந்தாலும்,
காலதாமதமான திருமணம்,டைவர்ஸ்,தாம்பத்ய சுகக்கேடு,இருதாரம்,மனைவிக்கு நோய்,போன்ற பாதிப்பை தருவார்.
8,எட்டாம் பாவம்.
----------- --------
ஆயுள் பாதிப்பு ஏற்படுத்தும்,விஷபாதிப்பு,விபத்து,மாங்கல்ய பலம் பாதிப்பு உண்டாக்குவார்.
9,ஒன்பதாம் பாவம்.
------------ ----------
ஒன்பதாம் பாவம், தந்தையார்,தர்ம,பாக்ய பாவமாகும்.
தந்தையார்க்கு பாதிப்பும் பிரிவும்,தந்தை மகன் உறவு கெடுதல்,பூர்வீக சொத்து இழத்தல்,சந்ததி தடைபடல்,எதையும் அனுபவிக்க நேரமின்றி அலையவிடும்.
10,பத்தாம் பாவம்.
------------ --------பத்தில் ராகு இருந்தால் அடிமைத் தொழில்தான்.
பல தொழில் மாற வைக்கும்.நிலையில்லாத வேலை,தொழில்.நஷ்டம்.
11,பதினொன்றாம் பாவம்.
----------------- -------------
லாப ஸ்தானம் ஆதலால் பாதிப்பை அதிகம் தராது.
12,பனிரெண்டாம் பாவம்.
----------------- -------------
பனிரெண்டாமிடம் அயன,சயன,போக,மோட்ச ஸ்தானமாகும்.இவற்றில் சிறிதளவு பாதிப்பு தருவார்.அவ்வளவே!.


A.v.ஜோதிடம்

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP