-->

2016-01-14

லக்னம் வலுவா? ராசி வலுவா? |How to find strength of lagna and Rasi

லக்னம் வலுவா? ராசி வலுவா?


லக்னம் வலிமை யா என அறிவதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.
லக்னத்தில் நல்ல ஸ்தானத்தின் அதிபதிகள் அமர்ந்தால் லக்னம் வலு பெற்றதாக கொள்ள வேண்டும். லக்னத்தை நல்ல ஸ்தானத்தின் அதிபதிகள் பார்த்தால் லக்னம் அதிக வலுபெற்றதாகக் கொள்ள வேண்டும்.
...
இயற்கை சுபகிரகங்களான குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன், தனித்த புதன் இவர்கள் 6,8,12 வீட்டு அதிபதியாகாமல்,லக்னத்தில் அமர்ந்தாலோ,லக்னத்தைப் பார்த்தாலோ லக்னம் வலுபெற்றுள்ளதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இயற்கை பாவக்கிரகங்களான சனி,சூரியன், செவ்வாய் இவர்கள் நல்ல ஸ்தானத்திற்கு அதிபதியாகி லக்னத்தில் நின்றாலும் லக்னம் வலுவே.
அடுத்ததாக லக்னாதிபதியை நல்ல ஸ்தானாதிபதி சேர்ந்தாலோ பார்த்தாலோ ,நல்ல ஸ்தானத்தில் அமர்ந்தாலோ லக்னம் வலுவாகிறது.
லக்னாதிபதி நல்ல ஸ்தானங்களில் ஆட்சி, உச்சம்,நட்பு, பரிவர்த்தனை, நீச்சபங்கம் பெற்றிருந்தால் லக்னம் வலுத்ததாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
லக்னாதிபதி நவாம்சத்தில் நீச்சம் பெறாமல் இருந்தாலும் லக்னம் வலுவே.
எனவே,லக்னாதிபதி 3,6,8,12 ல் மறைவு பெறாமல் கேந்திர திரிகோணங்களில் அமர்ந்து,கேந்திர திரிகோணாதிபதிகளின் பார்வை பெற்றிருந்தாலும் லக்னம் வலுபெற்றதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.இதே போல சந்திர லக்னத்திற்கும் பலன் அறிந்துக்கொள்ளவேண்டும்.
லக்னத்திற்கு சூரியன் சுப கிரகமாகி லக்னாதிபதி அஸ்தங்கம் பெற்றிருந்தால் தோஷம் இல்லை.
உதாரணமாக தனுசு லக்னத்திற்கு குரு லக்னாதிபதி யாவார்.சூரியன் யோகாதிபதியாவார்.ஒன்பதாமிடம் யோகஸ்தானமாகும்.எனவே குருவும் சூரியனும் இணைந்து ஒன்பதாமிடத்தில் சிம்மத்தில் அமர்ந்தால் ஜாதகரின் தனுசு லக்கினம் வலுத்ததாகவே அர்த்தம்.
லக்னாதிபதி ராகு கேதுவோடு இணைவு பெறக்கூடாது.லக்னாதிபதி பகை கிரகங்களோடு இணையக்கூடாது.பார்வையும் செய்யக்கூடாது.லக்னாதிபதி ஆறாம் வீட்டு அதிபதியோடு சேரக்கூடாது.பார்வையும் பரிவர்த்தனை யும் கூடாது.
இந்த விதிமுறைகள் லக்னத்தோடு பொருந்தினால் லக்னம் வலுபெற்று லக்னத்தை வைத்தே பலன்கள் நடைபெறும்.
A.v.ஜோதிடம்

0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP