-->

2016-04-17

தமிழ் புத்தாண்டு பலன்கள்- துர்முகி வருஷம்- 2016-2017 கடக ராசி | Tamil New Year Palangal 2016 Kataka rasi


இந்தப் புத்தாண்டில், குரு பகவான் ஆகஸ்டு  மாதம் 11-ம் தேதி முதல், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் அதாவது கன்னி  ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு 5-லும் ராகு உங்கள் ராசிக்கு 2-லும், கேது 8-லும் சஞ்சரிக்கிறார்கள்.  இனி பலன்களைப் பார்க்கலாம்.

தற்போதுள்ள குருவின் சாதகமான பலன்கள் ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரை தொடரும். குருபார்வை உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையை   இதுவரை பாதித்து வந்த பிணி நீங்கும். வாழ்க்கைத் துணை நலம் பெறுவார். சிலருக்கு கூட்டுத் தொழில் சிறக்கும். தொழிலுக்கு நல்ல கூட்டாளி கிடைப்பார். சிலருக்குப் புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால் உங்களுக்கு சில உதவிகள்  கிடைக்கும். சிலருக்கு மனைவி மற்றும் மனைவிவழி உறவினர்களால் சில உதவிகள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக சிலர் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாலும்கூட சிலருக்கு திடீர் என்று பண வரவுகள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். தந்தை பற்றிய கவலையும் நீங்கும்.   உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் விழும் குரு பார்வையால், உங்கள் தந்தை மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும்.

புதிய ஆடைகள் வாங்குவீர்கள். வெளியிடங்களில் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். ஆனால் வீட்டில் அது கிடைக்காமல் போகும்.  குரு பகவானின் பார்வையால் நல்ல வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால் அவை அனைத்தும் அவசிய காரியங்களுக்கு பயன்படாமல், விரயமாகும். சிலருக்கு மனைவிவழிப் பூர்வீகச் சொத்தின்மூலம்  பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.உங்கள் தந்தையும் தந்தை வழி உறவினர்களும் கை கொடுக்க தயங்க மாட்டார்கள்.  இனி குரு பகவானின் மூன்றாம் இடப் பெயர்ச்சியால் உண்டாகும் அனுகூலமற்ற பலன்களையுப் பார்க்கலாம்.

இனி  குருவின் 3-மிட சஞ்சரத்தால் நிகழப்போகும் நிகழப்போகும் கெடு பலன்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். இந்த சமயத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் செய்யும் செயல்கள் அனைத்திலும் தடைகளும் இடைஞ்சல்களும் ஏற்படலாம். சிலர் தங்களது தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் நிமித்தமாக் அதனது சொந்த ஊரைவிட்டு வெளியே சென்றுவிடுவார்கள். உங்கள் உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை. உடல்நலம்  பாதிக்கப்படலாம். இளைய சகோதரர்களின் நல்லுறவு , அவர்களுடன் சண்டைகள் ஏற்படும்.

பணமில்லாததால் கல்வியைத் தொடர முடியாமல் போகும். உங்களுடைய கல்வி கேள்விகளில்,தடைகள் ஏற்படும். படிப்பில் கவனம் இல்லாமல் போய் கல்வித் தடை ஏற்படும். மனதில் தைரியம் குறைவதால், எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள தயங்குவீர்கள். பேச்சில் உஷ்ணம் தெறிக்கும். யாரிடமும் பேசும்போது கோபத்தோடு [ப்ஏசுவதால், பல பிரச்சினைகளையும் விரோதங்களையும் சந்திக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாவீர்கள்.

எதிரிகளிடம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போக வேண்டாம். உங்கள் மனதிடத்தைக் குலைக்கும் அளவுக்கு இப்போது உங்கள் எதிரிகள் தலை தூக்குவார்கள். அவர்களால், உங்களுக்கு, உங்கள் தொழிலுக்கும், உங்கள் உறவினர்களுக்கும், சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். காது, கணுக்கால் சம்பந்தமான பிரச்சிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சொல்வாக்கும், செல்வாக்கும் குறையும்.  இச்சமயம் யாருக்கும் வாக்குறுதி கொடுத்தால் அதைக் காப்பாற்ற முடியாமல் அவமானம் ஏற்படும். நாணயம் தவறும். வருமானம் ஓரளவுக்கு இருந்தாலும் கையில் செலவுக்களுக்கு காசு தங்காது. அவசியமானதைவிட தேவையற்ற செலவுகள் உங்களை அவசரப்படுத்ட்ய்ம்
நிம்மதியின்மை உங்கள் தூக்கத்தையும் கெடுக்கும். குடும்பத்தில் அமையின்றி அல்லாடுவீர்கள். அமைதி இருக்காது. சண்டை சச்சரவுகள் சலசலப்புகள் தோன்ற ஏதுவாகும். கோயில் கட்டுமானப் பணிகளும் தீர்த்த யாத்திரை தட்டிப்போகும். உங்களுக்கான வேலை வாய்ப்புகள் தள்ளிப்போகும். சிலர் அவசிய தேவைகளை சமாளிக்க தங்கள் கையில் உள்ள தங்க நகைகளை விற்கவோ அல்லது அடகு வைக்கவோ செய்வார்கள். குல தெய்வ வழிபாடு தட்டிப்போகும். ஞானிகள், சாதுக்களின் கோபத்திற்கு ஆளாக நேரலாம். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாகும். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படும். தொழில் மந்தமாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் இருப்பது நல்லது. தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருவ்து நல்லது. சிலருக்கு பிள்ளைகளின் போக்கு கவலையளிக்கும். அவர்களது கல்வியில் தடை ஏற்படக்கூடும். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் தடை ஏற்படக்கூடும்.
ராகு உங்கள் ராசிக்கு 2-ம் இடமான சிம்ம  ராசியிலும், கேது உங்கள் ராசிக்கு 8-ம் இடமான கும்பத்திலும் சஞ்சரிக்கவுள்ளார்கள். ஜோதிட விதிப்படி, 2,8-ம் இடத்து சஞ்சாரம் உகந்ததல்லஎன்றாலும்,  இங்கு கூறப்போகும் ராகு கேதுவின் சஞ்சார பலன்களைப் படித்து நீங்கள் பீதியுறவேண்டாம். அந்தந்த கிரகங்களுக்குரிய பலன்கள்தான் இங்கே கொடுக்கப்படுகின்றன. உங்கள் ராசிக்குரிய ராகு-கேதுக்களின் கடுமையான பலன்கள் மிகவும் குறைய வாய்ப்புள்ளது என்பதை மறக்கவேண்டாம். இனி பலன்களைப் பார்க்கலாம்.

தற்போது சிம்ம ராசியான 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானின் சஞ்சாரம் உங்களை குடும்பத்துக்காக அதிகம் உழைக்கச் செய்யும். குடும்பப் பொறுப்புகள் அதிகமாகும். சிலருக்கு குடும்பம் ஒரு சுமையாகத் தெரியும். குடும்பம் நடத்துவதே சிரமமாக இருக்கும். உங்களுக்கு ஏற்படும் டென்ஷன் அனைத்தும் உங்கள் வார்த்தைகளில் வெளிப்பட்டு, குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டியது மிகவும் அவசியம். வருமானக் குறைவு ஏற்படும். வருமானம் வரப்போகிறதே என்றெண்ணி எந்த செலவையும் திட்டமிட முடியாது. எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேராது. எந்த வழியிலாவது உங்களுக்குப் பணம் வருமா என்றும் தெரியாது. பணப்பற்றாக்குறை காரணமாக குடும்பத்தில் உள்ளவர்களின் நியாயமான தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் போகும். எனவே குடும்பத்தாரின் கோபத்துக்கு ஆளாக நேரும். திடீர் வருமானங்கள் வரும் என்றாலும், அந்த வருமானத்திற்கு தயாராக செலவுகள் காத்திருக்கும். எனவே உங்களுக்கு சேமிப்பு என்பதே இருக்காது.இந்தக் காலத்தில் சிலர் நேர்மையான வழியில் நடக்க முடியாமல் போகும். சில நேரங்களில் பொய் புரட்டுகளும் பித்தலாட்டங்களும் சிலருக்கு தவிர்க்க முடியாததாகிவிடும். பணத்தேவை தவிர்க்க முடியாததாகிவிடுவதால், , பணம் கிடைக்காத சூழ்நிலையில் சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிக்கப்படும். யாரிடமும் நாணயத்துடன் நடந்துகொள்ள முடியாது. அதன் காரணமாக கொடுக்கல்-வாங்கலில் சிக்கலான சூழ்நிலை ஏற்படும்.

ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். முக்கியமாக கண்களில் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. புதல்வர்களுக்கு சில தொல்லைகள் ஏற்படலாம். அவர்கள் தங்கள் கல்விக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் கடுமையாக போராட வேண்டியிருக்கும். கஷ்டங்கள் பல வந்தபோது, அவர்கள் கடுமையாகப் போராடி கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். சிலர் அடிக்கடி பயணம் மேற்கொள்வார்கள். அந்தப் பயணங்களால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் மிகுந்த மனவேறுபாடு தோன்றும். எனவே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது எச்சரிக்கையுடன் பேசவேண்டியதும் விட்டுக்கொடுக்கவேண்டியதும் அவசியமாகிறது. இல்லையென்றால் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்து , சிலர் குடும்பத்தைவிட்டு தற்காலிகமாகப் பிரிய வேண்டி வரும்.

அரசுத் துறையிலோ அல்லது அதிகாரிகளாகவோ இருப்பவர்களில் சிலர் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்படுவதற்கோ அல்லது தண்டனை அனுபவிப்பதற்கோ வாய்ப்புண்டு. திருமண ஏற்பாடுகள் தடைப்பட நேரலாம். ஆனால் குருவின் சஞ்சாரம் குருபலம் கொடுத்து, நிலைமையை மாற்றக்கூடும்.எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தடைப்படநேரும்போது, டென்ஷன் ஏற்படுவதால்,யாரிடமும் சுமுக சூழ்நிலை இருக்காது. யாரிடமும் வாக்குக் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம் மற்றவர் பிரச்சினைகளில் குளறுபடிகளும் குதர்க்க வாதங்களும் அதிகமாகும். இத்தனை பிரச்சினைகள் மலிந்திருந்தாலும் மற்றவர்கள் நலமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு மேலோங்கி இருக்கும். எதிர்பாராதவிதமாக ,சிலருக்கு நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். புதிய தொழில் மற்றும் அதற்கான ஒப்பந்தங்கள் ஏற்படலாம். கடும் முயற்சியினால், குடும்பத்தில் ஒரு சுப நிகழ்ச்சியை செய்து முடிப்பீர்கள்.

ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தைப் பார்ப்பதால், உங்கள் தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படும். வீடு கட்டிக் கொண்டிருந்தீர்கள் என்றால் அந்த கட்டடப் பணிகள் தடைப்படும்.வண்டி வாகனங்கள் ரிப்பேர் செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவை ஏற்படுத்தும். மேலும் ராகு பகவான் தனது 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தைப் பாப்பதால், விரயச் செலவும் அலைச்சல்களும் ஏற்படும். அதன்காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. தேவையற்ற செலவுகள் ஏற்படும். வருமானம் வரும் வழி தெரியாவிட்டாலும், செலவினங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தான தருமங்களில் நாட்டம் ஏற்படும். திடீர் பண வரவு கிடைத்தாலும் அது கையில் தங்காது. மனதை ஆன்மீக வழியில் செலுத்தினால் மட்டுமே நல்ல பலன்களை அடைய முடியும்.

இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைக் காணலாம். பயணங்களின்போது எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் பல தொல்லைகள் உருவாகிவிடும். சிலர் அடுத்தவ்ர் பிரச்சினையில் தலையிட்டு அவர்கள் பிரச்சினை இவர்களையும் தொற்றிக்கொள்வதால், அதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பார்கள். அடிக்கடி ஏதாவதொரு துக்க செய்தி வந்தவண்ணம் இருக்கும். அதன் காரணமாக மனதில் கலக்கங்களும் வேதனைகளும் நிறைந்திருக்கும். சொந்த பந்தங்களால், பொருள் இழப்பும், பகைகளும் தேவையற்ற வம்புகளும் வந்து சேரும். சிலருக்கு உயிர்பயமும் ஏற்படும். .இதையெல்லாம் படித்து யாரும் பயப்படத் தேவையில்லை.சரியான பரிகாரங்களையும் தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டால்,கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு நடக்கும் தசா புத்தியையும் கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் சனியின் சஞ்சாரம் நன்மை செய்யும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

இந்தச் சமயத்தில் பொருளாதாரத் தட்டுப்பாடு அதிகம் ஆகும். சிலர் தங்கள் பூர்வீகச் சொத்தை விற்றோ அல்லது எதிர்பாதவிதமாகவோ பண வரவினைப் பெறக்கூடும். இந்த சமயத்தில் கூட்டுத் தொழில் முயற்சிகள் பலனளிக்காமல், கைப்பொருளையும் இழக்க நேரும். அதே சமயம் உங்கள் பணத்தை யாரிடமாவது கொடுத்து வைத்தால், அது திரும்ப கைக்கு வராது.

கேது பகவான், தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10 இடத்தைப் பார்க்கிறார். இதன் மூலம் தொழில் வியாபாரம் பாதிக்கப்படும். முதியவர்களுக்கு தொல்லைகள் ஏற்படும். அலுவலர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது குடும்பம் மற்றும் அலுவலகச் சூழ்நிலை உங்களுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தும். மேலும் கேது பகவான் தனது 11-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன்மூலம் சிலருக்கு பழைய கடன்கள் அடைபடும். உங்கள் எதிரிகள் இயற்கையாகவே பாதிப்புக்குள்ளாவார்கள். உங்களுக்கு அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் உண்டாகும். விஷக்கடி ஏற்படலாம். பெண்களால் தொல்லைகளும் பொருள் நஷ்டமும் ஏற்படும். மனைவி மற்றும் மனைவிவழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் உண்டாகும். தொழிலில் மன அமைதி கெடும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். அவற்றால் எந்த லாபமும் இருக்காது. தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால், குடும்பத்தில் மன அமைதி ஏற்படுவதுடன் மனைவி மக்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும்.
இந்த வருடம்  சனி பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். ராசிக்கு 5-ல் சனி வரும்போது, சந்ததிக்கு அரிஷ்டம் ஏற்படுகின்றது. புத்தி சரியாகச் செயல்படாமல், தகுந்த முடிவு எதுவும் எடுக்க முடியாமல், சில முக்கிய திட்டங்கள் நிறைவேறாமல் பாழாகும்.

ஏதாவது விபத்து முதலியவற்றால், அங்கஹீனம் ஏற்படும். பணம் கரையும். வறுமை மேலிடும். ஏதாவது இழிசெயல் செய்தாவது பிழைக்க நேரிடும். மனக் கலக்கமும் ஏற்படும்.

நடத்தை கெட்ட பெண்களின் உறவால், பொருளும் பணமும் கெடும். பலருடன் பலவகைச் சண்டைகளில் ஈடுபட நேரிடும். அன்றாடச் செலவுக்குக்கூட பணம் இல்லாமல் அவதிப்படலாம். எந்த ஸ்திரமான உருப்படியான காரியமும் நிறைவேறாது.

குழந்தைகள் யாருக்காவது மாரகம் ஏற்படலாம். பந்து ஜனங்களைப் பகைத்துக்கொள்வர். குழந்தை குட்டிகளை விட்டுப் பிரிவார். சோகம் , புத்திரஹானி போன்றவை ஏற்படலாம். எனவே எல்லா வகையிலும் சனி அசுப பலனையே தருகிறார்.

அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரையில்  உங்கள் அரசியல் வாழ்வில் பெரிய அளவில் உங்களால் சாதிக்க முடியவில்லை. மேலும் உங்களின் வெளிவட்டார உறவுகளும், இதுநாள்வரை திருப்திகரமாகவும் மதிப்புடனும் இல்லை. உறவினர்கள் மத்தியில் கூட நீங்கள் பிறருக்கு எவ்வளவு நன்மைகள் செய்தாலும், நல்ல பெயரோ அல்லது பாராட்டோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு இதுவரை கஷ்டப்பட்டீர்கள். இந்த அவல நிலை இப்போது அடியோடு மாறுகிறது. முன்பு உங்களை உதாசீனம் செய்தவர்கள் இப்போது உங்களை சுற்றிச் சுற்றி வந்து உங்களுக்கு புகழாரம் சூட்டுவார்கள். உங்கள் திறமையையும் ஆற்றலையும் பலவாறு புகழ்வார்கள். அதன்பிறகு ஓராண்டு காலம் சிற்சில அவலநிலைக்கு நீங்கள் ஆளாக நேரிடும். மேலும் சனியின் 10-மிட பார்வை தன ஸ்தானத்தில் விழுவதால், இந்த சனியின் 5-மிட மாற்றம் உங்களின் முன்னேற்றம் அல்லது சாதனைக்கு வழிவகுக்குமேயன்றி உங்களின் பொருளாதார மற்றும் தன நிலையில் பெரிய அளவில் மாற்றங்களையோ அல்லது ஏற்றங்களையோ ஏறப்டுத்தாது.
மாணவர்களுக்கு உங்கள் ராசிக்கு இந்த 5-மிட சனியின் பெயர்ச்சியால், உங்களது கல்வி நிலையில் ஓரளவு மாற்றம் அல்லது ஏற்றம் ஏற்படும். கல்வியில் ஓரளவு ஆர்வமும் செயல்திறனும் உங்களுக்கு அதிகரிக்கும். கல்வியில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பாதிக்குமேல் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் .
பெண்களுக்கு, லாபஸ்தானமான 11-ம் இடத்துக்கு சனியின் 7ம் பார்வை ஏற்படுவதும் களத்திர ஸ்தானத்துக்கு சனியின் மூன்றாம் பார்வை ஏற்படுவதும் நல்லதல்ல. உங்களது கணவருக்கும் உங்களுக்கும் இடையேயான அந்நியோந்நியம் குறைந்து குடும்பத்தில் அமைதியைப் பறிக்கும். புகுந்த வீட்டினரின் பாராட்டைப் பெறுவது சற்று கடினம். அதேபோல அவர்கள் மூலமாக உங்களுக்கு நடக்க இருக்கும் நல்ல விஷயங்கள் தாமதப்பட அல்லது மறுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் மூலமாக சொத்து சேர்க்கை, பண வரவு போன்றவை நிகழ இந்த 5-மிட சனி தடையை ஏறப்டுத்தும். மேலும் 5-மிடமான புத்திர ஸ்தானத்தில் சனி பகவான் வீற்றிருப்பது உங்கள் பிள்ளைகளின் கல்வியில் ஆர்வக் குறைவு அல்லது அவர்களின் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் போன்றவை ஏற்பட்டு விலகும். மேலும் சனிபகவானின் 10-ம் பார்வை குடும்ப ஸ்தானமான 2-ம் இடத்தில் விழுவதால், உங்களுக்கும் கணவருக்குமிடையே சன்டை சச்சரவு ஏற்படும். மொத்தத்தில் இந்த 5-மிட சனி பாதிப்புகளையே அதிகம் கொடுக்கும்.
பரிகாரம்:

குருவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால் . தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை கொண்டும் மாலையிட்டு வழிபடவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும். கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால், வினாயகர் கோவிலுக்குச் சென்று சேவை செய்யவும். சனியின் அருள் பெற சனிக் கிழமைகளில், சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று எள் தீபம் ஏற்றவும்.




0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP