-->

2016-04-16

தமிழ் புத்தாண்டு பலன்கள்- துர்முகி வருஷம்-2016-2017 மிதுன ராசி | Tamil New Year Palangal 2016 mithuna rasi


இந்த ஆண்டு சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-மிடத்தில்  சஞ்சரிக்கிறார். குரு பகவான் ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரையில் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதன்பின், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்துக்கு வருகிறார். சர்ப்பக் கிரகங்களான ராகுவும் கேதுவும் உங்கள் ராசிக்கு 3 மற்றும் 9-ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்கள்.
சனி பகவான்  உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு மிகவும் அனுகூலமான சஞ்சாரமாக இருக்கும். நீங்கள் இதுவரை அனுபவித்துவந்த வேதனைகளும் ஏமாற்றங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
எல்லா வகையிலும் பொன்னும் பொருளும் சேரும். தன் குடும்பத்தினரால் உதவிகள் ஏற்படும். சுகபோகம் ஏற்படும். சத்ருநாசம் ஆகும்.

புதுவீடு கட்டுதல் போன்ற எல்லாமே நல்லதாக நடக்கும். அந்தஸ்து, பதவி, கௌரவம், உத்யோகம் அல்லது அதில் உயர்வுஎல்லாமே தேடி வரும். சாதாரண உணவுக்குப் பதிலாக தினமும் உய்ர்தர உணவாகவே கிடைக்கும்.
தற்போது உங்களுக்கு ராஜயோகம்தான். (ஜாதகத்தில் ராஜயோகம் அமையாவிட்டாலும் ) இது யோக காலமாகவே இருக்கும். நிறைய பணமும் வாகன வகைகளும் கிடைக்கும்.

நீடித்த நோய்கள் நீங்கும். தேகம் திடம் பெறும். புத்தொளி பெறும். அதற்கேற்ப அதிக உணவே உட்கொள்ளலும், அதை செரித்துக்கொள்ளும் சக்தியையும் பெறலாம்.
பகைவர்களை வென்றுவிடுவர். எல்லா விதத்திலும் சுகமும் சௌகரியமும் உண்டாகும். குழந்தைப் பிறப்பும் உண்டாகும். எனவே சனி 6-ல் எல்லா வகையிலும் நல்ல பலனே தருகிறார்.

அரசியல்வாதிகளுக்கு பெரிய அளவில் அரசியல் சாதனைகளையோ, மாற்றங்களையோ உங்களால் நிகழ்த்துவது கடினம் என்றாலும், உங்களின் சொல்லாற்றல், மற்றும் செயலாற்றலால் உங்களுக்குக்கென்று ஒரு தனி இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்த கால கட்டத்தில் எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளின்றி உங்களின் அரசியல் பயணத்தை அமைதியாக நடத்திச் செல்ல முடியும். பணப் புழக்கம், மற்றும் சமூக அந்தஸ்து எப்போதும்போல உங்களுக்கு பக்க பலமாய்த் துணை புரியும்.

மாணவர்களுக்கு உங்கள் உழைப்பிற்கேற்ற நல்ல பலன்களை இந்த ஆறாமிடத்து சனி தவறாமல் செய்வார். எனவே நீங்கள் கல்வியில் ஓரளவு ஆர்வம் காட்டினாலும், பாதிக்கு மேல் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார். இதுநாள்வரை, பெற்றோர், ஆசிரியர் ம்ற்றும் உறவினர்களின் புத்திமதிக்கும் ஏச்சுபேச்சுக்களுக்கும் ஆளான நீங்கள் அவர்களே உங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு பாராட்டும் அளவுக்கு பெரிய அளவில் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். மேலும் பலரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். குருவின் சாதகமான நிலையும் மற்றும் சனியின் ஆறாமிடத்து சஞ்சாரமும் உங்களை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லும். தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக கலவியில் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். இதனால் நீங்கள் படிக்க நினைத்த அல்லது தேர்வு செய்ய நினைத்த பாடத்தை சுலபமாக படிக்கத் தக்கதொரு நேரம் சுலபமாக உருவாகியுள்ளது. மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு அதிக அளவில் நன்மை சேர்க்கும்.

பெண்களுக்கு அனைத்தும் சாதகமாகவே  நிகழும். சிலருக்கு வெகுநாட்களாக வரவேண்டிய தாய்வழிச் சொத்து, வசூலாகாமல் இருந்த கடன் ஆகியவை கைக்கு வந்து சேரும். மேலும் உங்களின் முயற்சியாலோ அல்லது கணவரின் உழைப்பாலோ உங்களுக்கு வீடு அல்லது நிலம் மற்றும் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை மற்றும் வாகன யோகம் ஆகியவை எளிதில் கிட்டும். அதிக அளவில் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த சனிப் பெயர்ச்சி நன்மை அளிக்கும்.
சனியின் சஞ்சாரத்தைப் போல், குருவின் சஞ்சாரம் சிறப்பாக அமையாது. தற்போதுள்ள குருவின் 3-மிடத்து சஞ்சாரமும் ஆகஸ்டு 11-ம் தேதிக்குப் பிறகு வரப் போகும் குருவின் 4-மிடத்து சஞ்சாரமும் உங்களுக்கு நற்பலன்களை வழங்க முடியாது. தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகள் தலைதூக்குவார்கள். அவர்கள் கொடுக்கும் தொல்லைகள் சில சமயம் உங்களுக்கு சாதகமாகவும் முடியும். தந்தையின் உடல்நலம் பாதிப்படையும். சிலருக்கு புதிய கடன்கள் ஏற்படும். சிலருக்கு பல், காது, கணுக்கால், கழுத்து, வாய், மூலம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். பயணங்களில் தொல்லைகள் ஏற்படும். உணவில் ஒவ்வாமை ஏற்படும். . குரு ஜூலை மாதம் 5-ம் தேதி முதல், 4ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வேண்டாம். அந்த வாக்கை காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு, அவைகளை குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வார்கள். கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள் அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகளில் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சனி பகவான் 7-ம் இடத்தில் சஞ்சரிப்பது உகந்தது அல்ல. பலன்கள் எப்படி இருக்கும்? குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாவதால், உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள் என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை ந்ம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும் உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்படும். உடல் நலம் குறையும் முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள் தங்கள் கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. 

கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள்உண்டாகும். குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயர்ச்சிமேற்கொண்டு வீட்டில் ஒரு திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் அலைச்சல் காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.
இந்த வருடம்,  ராகு சிம்ம ராசிக்கும், கேது கும்ப  ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதாவது ராகு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்துக்கும், கேது உங்கள் ராசிக்கு 9-ம் இடத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.
ராகு பகவான் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும்போது பல நன்மையான பலன்களையே கொடுப்பார். 3-மிடம் ராகுவுக்கு லாப ஸ்தானமாகும். எந்தப் பிரச்சினையானாலும் துணிவோடு சந்திக்கும் மனோபலம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருப்பீர்கள். பலவித காரியங்களை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சியிலும் வெற்றியே கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். உங்கள் முகத்தில் பொலிவு ஜொலிக்கும். உங்களுக்கு வேண்டாதவர்கள்கூட நீங்கள் கேட்டதும் உங்கள் உதவிக்கு வரத் தயங்க மாட்டார்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளவேண்டி வரும். அந்தப் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் கூட , அந்தப் பயணங்களால் உங்களூக்கு பல நன்மைகளும் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவும் வெற்றிகளும் உண்டாகும்.

செய்து வரும் சொந்தத் தொழில் பரிமளிக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் இணக்கமான சூழ்நிலை நிலவும். சிலருக்கு எதிர்பாராத திடீர் வருமானம் கிடைக்கும். பொருளாதார வசதி அதிகரிக்கும் வாழ்க்கையில் மேன்மை ஏற்படும். செல்வாக்கு, சொல்வாக்கு, கௌரவம் அந்தஸ்து மேன்மையடையும். சிலருக்கு புதிய பதவிகள், கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். அதுபோல புதிய அரசியல்வாதிகள், ,பிரமுகர்கள், அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். அது உங்கள் வாழ்ககை முன்னேற்றத்துக்கு பல வழியில் உதவும். இந்த சமயத்தில் நீங்கள் போட்டி பந்தயங்களில் வெற்றியடைவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிசெய்துகொண்டிருந்தவர்கள் வெளிநாட்டு வேலை கிடைக்கப் பெறுவார்கள். மேலும் சிலர் தங்கள் தொழிலை வெளிநாட்டிலும் விரிவுபடுத்துவார்கள். வெளிநாட்டவராலும் வெளிநாட்டுத் தொடர்புகளாலும் நன்மையடைவீர்கள். வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு வியாபாரம் முதலியவை பெருத்த லாபத்தை ஈட்டித் தரும். வாழ்க்கையில் நல்ல மதிப்பும் உயர்வும் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகளும், சக ஊழியர்களும் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய அதிகாரமும் பொறுப்புகளும் கிடைக்கும்.

மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபட்டு, நிறைய மதிப்பெண்களைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளிலும் ஈடுபட்டு மகிழ்வுறுவர். சிலருக்கு கலை, இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகி அதன்மூலம் புகழடைவர். கலையுலகில் இவர்களுக்கான ஒரு இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இவர்களுடைய திறமை வெளி உலகுக்கு தெரியும் காலம் இது. இவர்கள் திறமைக்குத் தகுந்த வெகுமதிகளும் பாராட்டும் கிடைக்கும்.
சகோதர சகோதரிகள் மேன்மையடைவார்கள். கடந்த காலத்தில் உங்களைவிட்டுப் பிரிந்துபோன உங்கள் உடன்பிறந்தவர்கள் தற்போது உங்களைத் தேடி வருவார்கள். வீட்டில் நடக்கப் போகும் சுப காரியங்களுக்கு அவர்கள் உதவியாக இருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு தகுந்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சொத்து சேர்க்கைகளும் ஏற்படும். சிலருக்கு எப்போதோ வாங்கிப்போட்ட சொத்து மதிப்பு பன்மடங்காக உயரும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கங்கள் தீர்ந்து உங்கள் கைக்கு வந்து சேரும். இதுவரை தாமதப்பட்டு வந்த நல்ல காரியங்கள் இப்போது தடையின்றி நடக்கும்.

ராகு பகவான் தனது 3-ம் பார்வையாக உங்கள் 11-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் பயனாக புத்திர புத்திரிகள் மேன்மையடைவார்கள். அவர்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் திருமணத்திலும் நல்ல நிலையை அடைவார்கள். குலதெய்வ வழிபாடினைத் தொடர்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மேலும் ராகு பகவான் தனது 11-ம் பார்வையினால், உங்கள் ராசியைப் பார்க்கிறார். இதன் பயனாக உங்கள் முகத்தில் பொலிவு கூடும். மனதில் உற்சாகமும் சுறுசுறுப்பும் உண்டாகும். மனக்கவலை நீங்கும். இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மக்கள் மத்தியில் உங்களுக்கு தனி மரியாதை கிடைக்கும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். கேதுவின் 9-மிடத்து சஞ்சாரம் இலக்கு எதுவுமின்றி சென்றுகொண்டிருந்த உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். வாழ்க்கை செம்மைப்படும். முன்னேற்றப்பாதையை நோக்கி வாழ்ககை செல்லஆரம்பிக்கும். கடவுளின் மேல் பக்தியும் நம்பிக்கையும் அதிகமாகும். வேதாந்த எண்ணங்களும் உயரிய சிந்தனைகளும் உருவாகும். 
தந்தையின் உடல்நலமும் நீங்கள் அக்கறை காட்டும் பெரியவர்களின் உடல்நலமும் பாதிப்படையலாம். சிலருக்கு தடைபட்டுப்போன குலதெய்வ வழிபாடு நல்லபடியாக நடைபெறும். மனம் ஞான விஷயங்களில் நாட்டம் கொள்ளும். கோவில்களிலும், மடங்களிலும் உயர் பதவிகள் கிடைக்கும். தர்மம், நீதி நிலைக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். ஞானிகள் ,பெரியோர்களின் ஆசிகளும் கிடைக்கும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்கள் திறமையை இப்போது பலரும் தெரிந்துகொண்டு பாராட்டுவர். வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான செல்வத்தைத் தேடவேண்டும் என்ற எண்ணத்தைவிட நல்ல பெயரும் புகழும் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதைப் பெரிதாக நினைப்பீர்கள். வாழ்க்கையில் பலவித வசதிகள் கிடைத்தாலும்கூட அவற்றை ஒரு நியதிக்கு உட்பட்டே அனுபவிப்பீர்கள். தொழில் வியாபாரம் காரணமாகவோ, அல்லது வெளிநாட்டு வேலை காரணமாகவோ குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல நேரும்.

கேது பகவான் 3-ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தைப் பார்க்கிறார். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். சகோதரர்களுக்கு இது சோதனையான காலம். மருத்துவச் செலவு கூடும். கேது பகவானின் 11-ம் பார்வை உங்கள் 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிப்படையலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்து அவர்களால் சில நன்மைகளும் கிடைக்கும். புதிய கூட்டுத் தொழில் அமையும்.

சிலருக்கு சற்றும் எதிர்பாராத வகையில் உறவினர்களின் சொத்து வந்து சேரும். பயணங்களால் லாபகரமான பலன்களே கிடைக்கும். தாய் தந்தையின் உடல்நலம் பாதிப்படையலாம். மருத்துவச் செலவு கூடும்.அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவும், மேலதிகாரிகளின் அரவணைப்பும் கிடைக்கும். சிலருக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சியோடிருக்கும்.


0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP