-->

2016-04-15

தமிழ் புத்தாண்டு பலன்கள்- துர்முகி வருஷம் 2016-2017 மேஷ ராசி

தமிழ் புத்தாண்டு பலன்கள்- துர்முகி வருஷம் 2016-2017 மேஷ ராசி
புத்தாண்டு பலன்கள்- துர்முகி வருஷம் 2016-2017 மேஷ ராசி
இந்த வருடம் குரு பகவான்  ஆகஸ்டு மாதம் 11ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் பிரவேசிக்கிறார். இது நல்ல சஞ்சாரமல்ல.  ராகு உங்கள் ராசிக்கு  5-மிடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 11ம் இடத்திலும் சஞ்சரிக்கிறாரக்ள். மேலும், இந்த வருடம்  சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் பிரவேசிக்கிறார். இதனை அஷ்டமச் சனிஎன்று கூறுவார்கள். அஷ்டமச் சனி, ஏழரைச் சனியைவிட அதிகம் தொல்லை தரும்.  இப்போது பலன்களைப் பர்க்கலாம்.
சனியின் 8-மிட சஞ்சரம் அஷ்டமச் சனிஎனப்படுகிறது.   தற்போது நீங்கள் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. மாறாக தொல்லைகளையும் அவமானங்களையும் சந்திக்க நேரும். உடல் நலம் கெடும். தீராத வயிற்று நோய் படுத்தும். பண நஷ்டம் உண்டாகும். தொட்டதெல்லாம் தோல்வி மயமே. நிலையற்ற வாழ்க்கை இருக்கும். கால்நடைகளுக்கு அழிவுண்டாகும். பலவையான நோய்கள் உண்டாகும். சந்ததிக்கு அரிஷ்டம் ஏற்படும். நண்பர்களுக்கும் தொல்லை உண்டாகும்.
அரசாங்கத்தால் தொல்லைகளும் சிறைத் தண்டனையும் ஏற்படலாம். மாரக தசை நடப்பவர்களுக்கு, உயிருக்கு பயம் உண்டாகும். மான கௌரவப் பிரச்சினைகள் உண்டாகும். மனைவியுடன் பகை உண்டாகும். பலவகை தடங்கல்கள், தண்டச் செலவுகள், வீண் செலவுகள், குற்றம் முதலியவற்றிற்கு அபராதத் தொகை செலுத்துதல் போன்றவைகளில் வீண் செலவு உண்டாகி, பணம் கரையும். வேண்டாத, வசதியற்ற ஊருக்கு மாற்றலாகி, அவதிப்படுவர். கண்நோய்கள் ஏறப்டும். இது சமயம் கூசாமல் பொய் பேசுவர். மீள்வதற்கு வழியில்லாமல் , கீழ்த்தரமான செயல்களிலும் இறங்குவர். வறுமை மிகுதியால், பட்டினி கிடக்கவேண்டி வரும். மனதை ஏதாவது துன்பமோ கவலையோ வாட்டிக்கொண்டே இருக்கும். ஒரு பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். யாருக்காவது அடிமையாக இருக்கவேண்டியது வரும். கடுமையான உழைப்பின் மூலம்தான் வயிறு நிறையும். ஆபத்துகள், விபத்துகள் ஏற்படும். வேளைக்கு சாப்பிட முடியாமலோ அன்றி உணவில்லாமலோ, அதிகம் பசியும் இருக்கும். மனக் கவலையும் இருந்துகொண்டே இருக்கும். 8ல் சனி அஷ்டமச் சனி எனப்படும். ஏழரைச் சனிக்கு நிகரான கஷ்டம் உண்டாகும். அஷ்டமச் சனியின்போது, இவர் பிள்ளைகள்கூட இவர் பேச்சைக் கேட்க மாட்டார்கள். இவர் வார்த்தைக்கு யாரிடத்திலும் மதிப்பிருக்காது என்று கொள்ளவேண்டும்.
பெண்களுக்கு குடும்பச் சுமை அதிகரிக்கும். வீட்டிற்கு வந்து செல்வோரின் சில தேவையற்ற விமர்சனங்களுக்கு நீங்கள் ஆளாக நேரும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும். அனுசரித்து நடந்துகொண்டால், குடும்பத்தில் குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்படுவதைத் தடுக்க முடியும். கிரக நிலை சரியில்லாததால், யார் எனன் சொன்னாலும் காதில் வாங்காமல், செய்யும் செயலில் கவனம் வைப்பது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு உங்களின் பொறுமையை சோதிக்கும் வண்ணமாக உங்களின் கீழ்ப்பட்டவரக்ளின் செயல்கள் தலை விரித்தாடும்.அதை நீங்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். மேலும் உனக்ளிடம் நெருங்கிப் பழகும் உறவினர்கள் மற்றும் ந்ண்பர்கள் உங்களுக்கு சில துரோகச் செயல்களைப் புரிவார்கள். அதன் காரணமாக சில அலைச்சல்களையும் அவமதிப்புகளையும் நீங்கள் தாங்க வேண்டியிருக்கும். வெகு நாட்களாகக் கட்டிக் காத்துவந்த மதிப்பு மரியாதையை வெகு சீக்கிரத்தில் இழக்க நேரிடும்.
மாணவர்களுக்கு வீட்டுச் சூழலாலும், சில தேவையற்ற கற்பனைகளாலும், மனதை அலையவிட்டு கல்வியில் போதிய ஆர்வத்தைக் குறைத்துக்கொள்ள நேரும். பெற்றோர்களும் உறவினர்களும் மற்றும் உங்கள் பள்ளி ஆசிரியர்களும் உங்கள் நிலையைக் குறித்து வருத்தம்கொள்ளூம் விதமாக உங்கள் நிலையானது மாறலாம். சில சமயங்களில் மன பாதிப்பால், எடுப்பார் கைப்பிள்ளையாக , யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பி செயல்படுவீர்கள்.உங்களின் சொந்த புத்தியைக்கூட சிலசமயம் அடகு வைத்துவிடுவீர்கள். எனவே கருத்துன்றிப் படிக்கவேண்டியது அவசியம்.
குருவின் 7-மிட சஞ்சாரத்தினால் ஓரளவுக்கு நற்பலன்கள் ஏறப்ட்டன. இவை இந்த வருடம் ஆகஸ்டு மடஹ்ம் 11-ம் தேதியோடு முடிவடைந்து குருவின் சாதகமற்ற சஞ்சரமான 6-மிட சஞ்சரம் ஆரம்பமகிறது.  . சனி, மற்றும் குருவின் சஞ்சாரங்கள் உங்களுக்கு  உகந்தது அல்ல. குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாகி, உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள்  என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும்.  திருமணத் தடை ஏற்படும். உயர் கல்வியில் சேர இருந்தவர்களுக்கு, பண முடை காரணமாகவோ அல்லது, வேறு குடும்பக் காரணங்களுக்காகவோ  கல்வியில் தடை ஏற்படும். ஆரோக்கியம் கெடும். மருத்துவ மனையில் சேர்ந்து வைத்தியம் செய்துகொள்ள நேரும்.  வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகி வருமானம் குறைய ஆரம்பிக்கும். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போகும். பூர்வீகச் சொத்தில் இழுபறி ஏற்படும். பிளைகளின் வேலைவாய்ப்பு, கல்வி முதலியவற்றில் தடை ஏற்படும். இப்படிப்பட்ட நேரத்தில் சனி, ராகுவின் சாதகமற்ற சஞ்சாரங்களும் சேர்ந்து கொள்கின்றன.
உங்கள் ராசிக்கு 11-ம் இடத்துக்கு கேதுவும், 5-ம் இடத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
ராகு பகவான் தனது 5-மிட சஞ்சாரத்தின் மூலம் பலவித கற்பனையான எண்ணங்களைத் தோற்றுவித்துக்கொண்டே இருப்பார். எதையாவது சாதிக்கவேண்டும் என்ற பரபரப்பு உங்களிடம் இருக்கும். செயல்பாட்டுக்கு வரமுடியாத எண்ண அலைகள் தொடர்ந்து உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கும். நினைத்தது அனைத்தையுமே அடைந்துவிடவேண்டுமென்ற ஆவல் உங்கள் மனதில் அதிகரிக்கும். அதனால் எப்போதும் புதிய சிந்தனைகளும் புதிய வழிமுறைகளும் தோன்றும் வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய வாகனங்கள் புதிய இயந்திரங்கள் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. புதிய நூதனமான தொழில் வாய்ப்புகளும் உருவாகும்.
இந்தக் காலத்தில், உங்களைவிட வயதில் சிறியவர்களானாலும் சரி, வயதில் பெரியவர்களானாலும் சரி, அவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவேண்டும். அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகக்கூடும். சிலருக்கு எதிர்பாராதவிதமாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நூதனமான தொழில் வாய்ப்புகள் ,வியாபாரம் அமையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் ஆகக்கூடும். பணிமாற்றம் ஏற்பட்டு புதிய பொறுப்புகளை ஏற்கும்படியும் இருக்கும். பிளைகளின் போக்கு கவலையளிக்கும் அவர்களின் முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும். உங்களை எதிர்ப்பார்கள். உங்கள் புத்திமதி எதுவும் எடுபடாமல் போகும்.
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை ராகு பார்க்கிறார். இந்தப் பார்வை உங்களுக்கு மன தைரியத்தைக் கொடுக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். சகோதரர்களுக்கு பாதிப்பு உண்டாகும். ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படும். தொழில் கூட்டாளியுடன் கருத்து வேறுபாடு தோன்றி தொழில் பாதிப்புகளை ஏற்படுத்தும். நெருங்கிய நண்பர்கள் உங்களைவிட்டுப் பிரிவார்கள். உறவினர்களுடனும் கருத்து வேறுபாடு ஏற்படும். வீணான மனக்கசப்பும் அலைச்சலும் ஏற்படும்.
திடீர் வருமானம் கிடைத்து நல்ல பொருட்சேர்க்கை ஏற்படும். போட்டி பந்தயங்கள் வெற்றியளிக்கும். கோர்ட் கேஸ்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். கணவன் மனைவி உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. மனக்கவலையும் அலைச்சலும் தவிர்க்க முடியாது.
கேது பகவான் உங்கள் ஜென்ம ராசியையும், உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தையும்,5-ம் இடத்தையும் பார்ப்பதால், உங்கள் செல்வாக்கு மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகம் ஆலயத் திருப்பணி அறக்கட்டளை தர்மகர்த்தா போன்ற பொறுப்பான பதவிகளும் கிடைக்கும். உங்கள் கௌரவம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்பும் அவர்களது ஆசிகளும் கிடைக்கும். பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். மூத்த சகோதரர்களால் நன்மை கிடைக்கும்.
எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளம் கூடும். சிலர் நூதனமான வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். காதில் விழும் விஷயங்கள் மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கும்.
சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நற்பெயரும் ஏறப்டும். சிலருக்கு பதவி உயர்வு ,வேண்டிய இட பணிமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் அரசுத் துறையில் உள்ளவர்களின் உதவியும் கிடைக்கும். உங்கள் தாய்க்கு நேரம் சரியில்லை.அவருடைய உடல்நலம் பாதிக்கப்படும். கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு வரும். வம்பு வழக்குகள், கோர்ட் கேஸ்கள் ஒரு முடிவுக்கு வந்து ஒருவழியாக முடிந்து போகும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள். அந்நிய தேசத்திலிருந்து வருமானம் கிடைக்கும். இதுவரை குடத்துக்குள் விளக்காக இருந்துவந்த உங்கள் பெருமை இப்போது குன்றின் மேலிட்ட விளக்காகும்.சிலருக்கு வண்டி வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். தந்தை மூலம் எதிர்பாராத அனுகூலம் கிடைக்கும்.
கேதுவின் 11-ம் இடத்து சஞ்சாரம் பெயரையும் புகழையும் தேடிக் கொடுக்கும். தொழில் மேன்மையடையும். மருத்துவச் செலவு குறையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொட்டதெல்லாம் பொன்னாகும். மேலதிகாரிகள், பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அரசு சம்பந்தமான நன்மைகள் கிடைக்கும். குடும்பத்துக்கு புதிய வரவாக ஒரு குழந்தை பிறக்கும். பயணங்கள் அதிகமாகும். பயணங்களால் நன்மை கிடைக்கும். சொத்து, நகை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சிநிறைந்ததாக இருக்கும். உற்றார் உறவினர் உதவி செய்வார்கள்.
குருவின் சாதகமற்ற சஞ்சாரத்தால், இந்த சமயத்தில், வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை நம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும்  உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டயம் ஏற்படும். உடல் நல்ம் குறையும் முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள் தங்கள் கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள் விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயற்சி மேற்கொண்டு வீட்டில் ஒரு  திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் ,காரணமாக  உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளி ஏற்படும். அவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே பெரிய சிரமம் உண்டாகும். கொஞ்சம் வருமானம் வந்தாலும் பின்னாலேயே செலவும் வந்து நிற்கும். அவசிய செலவுகளை மட்டும் பிரித்துக்கொள்ளாவிட்டால், கடன்படவேண்டியிருக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். கவனம் கல்வியில் செல்லாது. நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையாகப் போராடவேண்டியிருக்கும். குடும்பத்தில் வீண் சண்டை சச்சரவுகள், குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தாருடன் நீங்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வம்பை விலைக்கு வாங்குவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நியாயமான தேவைகளைக்கூட பூர்த்திசெய்யமுடியாமல் போகும். அதனால், குடும்பத்தாரின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படும். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு தனிக்குடித்தனம் சென்றுவிடுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போவதால், உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிகக்ப்படும். சிலருக்கு கண்களில் பாதிப்பு ஏற்படும். மனதில் விரக்தி ஏற்படும். சிலர் மன அமைதிக்காக வேதாந்த விஷயங்களில் மூழ்குவார்கள்.
ன் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.
நிகழும் திசாபுத்திப்படி அவரவர்க்கு பலன்கள் மாறுபடும் என்பதால், சுய ஜாதகத்தையும் பரிசீலித்துக்கொள்ளவும்.
பரிகாரம்:
ஆண்டு பிற்பகுதியில் குரு  6-ம் இடத்தில் சஞ்சரிப்பது ந்ல்லதல்ல. . தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை மாலை கொண்டும் வழிபடவும். சனியின் சஞ்சாரம் சரியில்லையாதலால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி , வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும், உதவி செய்யவும். கருப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ஹனுமான் சலீஸாவை பாராயணம் செய்யவும். ராகுவின்  சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும்.


0 comments:

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP