தமிழ் புத்தாண்டு பலன்கள்- 2016-2017 துர்முகி வருஷம் ரிஷப ராசி
ரிஷப ராசி துர்முகி வருஷம் தமிழ் புத்தாண்டு பலன்கள்- 2016-2017
Tamil New Year Palangal 2016 Rishaba Rasi
இந்த வருடம் சனி பகவான் உங்கள் ராசிக்கு 7-மிடத்தில் சஞ்சரித்து, கெண்டகச் சனியாக தொல்லைகளை
ஏற்படுத்துகிறார். வருகிற ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வருகிற குருப்
பெயர்ச்சியின்போது, குரு
பகவான் உங்கள் ராசிக்கு 5-மிடத்தில் சஞ்சரிக்கிறார். ராகு உங்கள் ராசிக்கு 4-லும் கேது 10லும் சஞ்சரிக்கிறார்கள். இனி
பலன்களைப் பார்க்கலாம்.
சனி பகவானின் 7-மிட சஞ்சாரத்தின்போது, நீங்கள் நற்பலன்களை எதிர்பார்க்க
முடியாது. ஏதாவது வகையில் கஷ்டம், மனைவிக்கு மாரக பயம் உண்டாகும். உங்களுக்கு பெரிய அளவில் பண
நஷ்டம் ஏற்படும். சேமித்த சேமிப்பு அழியும். தான் இருக்கும் இடத்தைவிட்டு
விருப்பத்துக்கு மாறாக வேறு இடத்துக்குப் போக வேண்டி வரும். பயணம் செய்யும்போது
வழியில் விபத்துப் பயம் ஏற்படும். கால்நடைச் செல்வம் பாழாகும். வேலையாட்கள், பணியாட்கள் விட்டுப் பிரிவர். மான
, கௌரவ
பங்கமும் , பதவி
நாசமும் ஏற்படலாம். தீராத தலை நோய் ஏற்படும் . சுமையும் தூக்கிப் பிழைக்க
வேண்டியதுகூட வரும்.
சரீரத்தில் ஏதாவது தோஷம், நோய் இருந்துகொண்டே இருக்கும். கெட்ட நடத்தையால், பெயர் கெடும். உடல் நலமும் கெடும். காரணமற்ற, குறிக்கோளற்ற பயணங்கள் ஏற்படும். மனத்தில், ஏதாவது பயம், திகில் இருந்துகொண்டே இருக்கும். சோகம், உறவினர் மறைவு போன்றவை இருந்துகொண்டே இருக்கும். பெரும் பசி காணும். மிகக் கீழ் நிலையில், அன்றாடப் பிழைப்புக்குக்கூட வழியின்றிப் பிறரிடத்தில் கையேந்த வேண்டியது வரும். ’ கண்டகச் சனி’ அசுப பலன்களைக் கொஞ்சம் அதிகமாகவே தருகின்றார். இருக்க இடமின்றி, ஒரு குறிக்கோளின்றி, பல இடத்திலும் அலைந்துகொண்டே இருப்பார். இது சமயம் வெளிதேச வாசமும் இவருக்கு ஏற்படும். ஆனால், அங்கும் இவருக்குப் பலவித கஷ்டங்கள் இருந்துகொண்டே இருக்கும். 7-ல் சனி எல்லா வகையிலும் அசுப பலன்களையே தருகின்றார்.
அரசியல்வாதிகளுக்கு இந்த சனி பகவானின் ஏழாமிட மாற்றம் உங்களது நீண்ட நாள் ஆசைக்கு அல்லது உங்களின் நியாயமான ஆசைக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும். உங்களது வெற்றிப் பாதைக்கு சில தடைக் கற்களை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு அவ்வப்போது தடைகளும் பிரச்சினைகளும் தோன்றி மறையும். உங்களுக்குக் கீழ் உள்ள தொண்டர்கள் உங்களை எதிர்த்துக்கொண்டு, எதிரியின் கூடாரத்துக்கு மாறக்கூடும். உங்களுடைய தலைமை உங்களை முக்கியமில்லாத இடத்துக்கு மாற்றக்கூடும்.
மாணவரகள் வீட்டிலுள்ள பெரியவர்களின் சொல்படி நடந்தால், பிறர் உங்களைக் குறைகூறும் அளவிற்கு அல்லாமல் ஓரளவு நற்பெயர் எடுக்க முடியும். பொதுவாக உங்கள் ராசிக்கு 7-மிடத்திற்கு வரும் சனிபகவானின் 10 -ம் பார்வை வித்யா ஸ்தானமான 4-ம் இடத்தில் விழுவதால், உங்களது முழு ஆற்றலைக் குலைக்கும். இதற்கு சிகரம் வைத்தாற்போல , நீங்கள் கல்வி விஷயத்தில் என்னதான் சாதிக்க நினைத்தாலும், , குரு மற்றும் ராகுவின் சாதகமற்ற சஞ்சாரத்தால், உங்களின் முயற்சிகள் தோல்வியைத் தழுவும். இதனால், பிறரின் ஏளனத்திற்கும், பரிகாசத்திற்கும் ஆளாக நேரும். எனவே மிகவும் கவனத்துடன் செயல்படவும். தன்னம்பிக்கையோடு, கடவுள் பக்தியையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.
பெண்களுக்கு இந்த 7-மிட சஞ்சாரம் உங்களது குடும்ப வாழ்வில் சிற்சில சோதனைகளைத் தர உள்ளார். ஏழாமிடம் கணவரைக் குறிப்பிடும் இடமாதலால், கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதோடு, மூன்றாம் நபர் தலையீடு இருக்கும். மாமியார், மாமனார்,மைத்துனர், நாத்தனார் போண்றோரின் தலையீடு ஏறபட்டு, உங்களது அமைதியான குடும்ப வாழ்வில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு பிரிவினைக்கு வழிவகுக்கும். மேலும் இந்த ஏழாமிடம் மாரக ஸ்தானம் என்பதால், உங்களுக்கோ அல்லது உங்கள் கணவருக்கோ சிற்சில உடல் உபாதைகளும் கண்டங்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே நீங்களாகவே வலிய சென்று வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். பிரச்சினைகள தரும் நபர்கள் அல்லது பிரச்சினை தரும் விஷயங்களை விலக்குவது நல்லது. அதேபோல நீங்கள் உங்கள் பங்கிற்கு வம்பு வளர்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும். வீண் வாதம் அல்லது தர்க்க வாதம் அல்லது கடுஞ்சொல் போன்றவற்றை உபயோகிக்காமல் விட்டுக்கொடுத்து செல்வது குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
சனியின் அசுப பலன்களால் அல்லல்படும் உங்களுக்கு, குருவின் 5-மிட சஞ்சாரம் ஆறுதல் தரும். குருவின் 5-மிட சஞ்சாரத்தால், இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளிலிருந்தெல்லாம் உங்களுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கஷ்டங்களும் வேதனைகளும் இருந்து வந்த நிலை மாறி, இனி நல்ல காலம் பிறக்கும். சிம்மத்துக்கு வருகிற குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் 1 வருட காலம் சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவான் தன்னுடைய புனிதமான 5-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தையும், 7-ம் பார்வையால் உங்களுடைய ராசிக்கு 11-ம் இடத்தையும் , தன்னுடைய 9-ம் பார்வையால் உங்களுடைய ராசியையும் பார்வையிடுகிறார். இதன் காரணமாக இந்த இடங்கள் எல்லாம் வலிமையடையும். இந்தக் குருப் பெயர்ச்சியினால் உங்களுக்கு சகல சம்பத்தும் கிடைக்கும். முகம் ஒளி பொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும் ஆளாவீர்கள்.
சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றி நீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள
தொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும்.
அலுவலகப் பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
உங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை காலம் அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இதன் காரணமாக குடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும். அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள். புத்திர-புத்திரிகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும்.
சிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சிலர் கோயில் கட்டும் பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது முடிவுக்கு வரும். அந்த வழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர் மேல்கோர்ட்டில் விடுதலையாவார்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்.
பொருளாதார மேம்பாடு இருக்கும். விரயச்செலவு குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் நலம் சிறக்கும். தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும்நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கட்ன்கள் அடைபடும். புதிதாக வங்கிக்கடன்கள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய மேம்பாட்டுக்கே வழிவகுக்கும்.
சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் மீண்டும் தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன் எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள். இதுவரை கிணற்றில்போடப்பட்ட கல்லாக மறைந்துகிடந்த பிரச்சினைகள் எல்லாம் தடை நீங்கும். .
இனி ராகு-கேது பலன்களைப் பார்க்கலாம். ராகு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்துக்கும், கேது உங்கள் ராசிக்கு 10-ம் இடத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இதற்குண்டான பலன்களைக் காணலாம்.
இந்தப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சில சோதனையான பலன்களே நடக்கும். தாயாரின் உடல்நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்களாலும், கால்நடைகளாலும் நஷ்டம் உண்டாகலாம். உங்கள் ஆரோக்கியம் பாதிப்படையும். நீங்கள் கட்டும் கட்டடங்கள் பணப் பற்றாக்குறையாலோ அல்லது எதிரிகளின் தொல்லைகளாலோ பாதியில் நின்று போகும். சிலர் குடியிருக்கும் வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு வீடுகளில் குடியேறுவார்கள்.. சிலர் சொந்த வீட்டைவிட்டு வாடகை வீட்டுக்கு குடி போவார்கள். வியாபாரம் தொழில் காரணமாக அடிக்கடி வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளநேரும். பயணங்கள் வெறும் அலைச்சலிலும் சுகவீனத்திலும் முடியும். வேறு பயன் இருக்காது. சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்த வேலையிலிருந்து ஊர் ஊராகச் சுற்றி அலையும் வேலைக்கு மாற்றம் வரும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். அதன் காரணமாக குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். ஒற்றுமை குறையும். உங்கள் மீது மற்றவர்களுக்கு வெறுப்பு ஏற்படும். விஷக்கடி ஏற்படக்கூடும்.
மாணவர்களுக்கு கல்வியில் கவனம் குறையும். கடும் முயற்சி செய்தால் மட்டுமே, தேவையான மதிப்பெண் பெற்று, உயர் வகுப்பிலோ வேலைக்கோ செல்ல முடியும். சில மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்காக வெளியூர் சென்று தங்கிப் படிக்க வேண்டி வரும். குடும்பத்திலுள்ள வயதானவர்களுக்கு உடல்நலம் பாதிப்படையும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். சிலருக்கு கேளிக்கை, விருந்துகளில் நாட்டம் அதிகரிக்கும். அதன் காரணமாக அந்த வகையில் பண விரயம் ஏற்பட்டு, அவசியத் தேவைகளுக்கு பணமில்லாமல் அல்லாட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.கடன் வாங்க வேண்டி வரும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் இப்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தவறான முடிவுகள் எடுக்க நேர்ந்து நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி வரும். முடிவெடுப்பதற்கு முன்பு ஆழமாக சிந்திக்கவேண்டும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அலுவலகத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. மேலதிகாரிகளிடம் கெட்ட பெயர் ஏற்படும். சக தொழிலாளர்களிடம் மேலதிகாரிகளிடம் உங்கள் மீது குறை கூறுவார்கள். சிலருக்கு விருமில்லாத இடத்துக்கு பணிமாற்றம் வரும். சிலர் அவர்கள் தகுதிக்குக் குறைந்த வேலையில் அமர்த்தப்படுவார்கள். தசா புத்தி சரியில்லாத சிலருக்கு வீட்டில் திருட்டுப் போகும்.
சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுற்றுலா செல்லவும் வாய்ப்புண்டு. சிலர் பொதுப் பணியாற்றி புகழ் பெறுவார்கள். ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், 6-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிரிகளின் தொல்லை குறைய வாய்ப்புண்டு. சிலருக்கு பழைய கடன்கள் அடைபடும். அதேசமயம் தேவைக்காக புதிய கடன்கள் ஏறப்டவும் வாய்ப்புண்டு. உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுக்கிருக்கும் கடுமையான நோய் பாதிப்புகள் நீங்கும். ஆனால், அலர்ஜி, தோல்நோய்கள் போன்ற சிறிய நோயகளின் உபத்திரவம் இருக்கும். ராகுவின் 11- ம் பார்வை உங்கள் 2-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்கள் சொல்வாக்கு, செல்வாக்கு சரிந்து உங்கள் கௌரவம் பாதிக்கப்படும். முக்கியத் தேவைக்கு வருமானம் இருக்காது. விரயச் செலவுகள் அதிகமாகும். வார்த்தையில் சாதுர்யம் இல்லாமல் போய் காட்டம் அதிகமாகும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகமாகும்.
எதிர்பாராத பணவரவு இருந்தாலும் கூட கையில் தங்காது.மனைவி மற்றும் சகோதரிகளால் தொல்லைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சிலர் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் கூடும். பெரியோர்களின் ஆசியும் கிடைக்கும். கணவன்-மனைவி சுமுகமாக இருக்கும்.
இனி கேதுவின் சஞ்சாரத்தால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம். தொழிலில் பின்னடைவு ஏற்படும். வியாபாரம் மந்த கதியில் இயங்கும். அதனால் கையில் பணப்புழக்கம் குறையும். கடும் பணத்தட்டுப்பாட்டில் சிக்கி சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அதுபோல் அலுவலக வேலையில் இருப்பவர்கள் வேலையை விட்டு விட்டு விருப்ப ஓய்வில் சென்று விடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு அலுவலகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். பண விஷயத்தில் நாணயம் தவறி அவமானப்படக்கூடும். சிலர் தங்களுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சிரமத்துக்குள்ளாவார்கள். சிலர் வீண் ஜம்பத்தை விட முடியாமல் தேவையற்ற கஷ்டங்களைத் தானே தேடிக்கொள்வார்கள். ராகுவின் 11-ம் பார்வை உங்கள் 8-மிடத்தில் பதிவதால், கோர்ட் கேஸ்கள், வீண் வம்பு வழக்குகள் தேடி வரும். தொலலைகள் வந்து சேரும்.
பொதுவாக கேதுவின் 10-ம் இடத்து சஞ்சாரம், எதிர்காலச் சிறப்புக்காக இப்போது அடித்தளம் அமைத்துக்கொடுக்கும். ஞானிகள் சாதுக்களின் தரிசனம் கிடைக்கும்.

.பரிகாரம்:
வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை மஞ்சள் மலர்கள் மற்றும் கொணட்க்கடலை மாலையிட்டு வழிபடவும். சனியின் சஞ்சாரம் சரியில்லாததால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி வழிபடவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லையாதலால், வெள்ளிக் கிழமைகளில் துர்கையம்மனை சிவப்பு மலர் கொண்டு வணங்கவும். கேதுவின் சஞ்சாரம் சரியில்லையாதலால், பரிகாரமாக வினாயகரை வணங்கி, அவர் கோவிலை சுத்தம் செய்யவும்.

By TamiJothidamTips |  10:57
Learn Vedic Astrology Lessons Basics
0 comments: