-->
Showing posts with label கன்னி ராசி. Show all posts
Showing posts with label கன்னி ராசி. Show all posts

2016-01-08

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - கன்னி ராசி | 2016 Rahu Ketu Transit Kanni Rasi | Rahu Ketu peyarchi 2016 Kanni Rasi

2016 - ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்: கன்னி ராசி
(Effect of Rahu transit in Leo for Kanni Rasi)

வருகிற ஜனவரி மாதம் 8-ம் தேதி ஏற்படப்போகும் ராகு கேது பெயர்ச்சியின்போது ராகு பகவான் உங்கள் ராசிக்கு 12ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
ராகுவின் 12ம் இடத்து சஞ்சாரம் உங்களுக்கு அதிக அலைச்சலையும் பயணங்களையும் கொடுக்கும். வேலைப்பளு கூடும். உறக்கம் குறையும். சிலர் குடும்பத்தை விட்டு வெளியூரில் தங்க நேரும். உங்ககளுடைய பயணங்கள் அனைத்தும் பெரும்பாலும் வியாபார சம்பந்தமாகவோ அல்லது உத்தியோக சம்பந்தமாகவோதான் இருக்கும். பூர்வீகச் சொத்து பிரச்சினைக்குள்ளாகி ,பிறகு நீங்கும். குழந்தைகள் வழியில் செலவுகள் ஏறப்டும். சிலருக்கு அரசாங்கத்தாலும் அரசு அதிகாரிகளாலும் விரயச் செலவு ஏற்பட்டு மனக்கஷ்டங்கள் தோன்றும். மறைமுக எதிரிகளால் எப்போதும் தொல்லைகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும் அவர்கள் எதிர்ப்பு உங்களை ஒன்றும் செய்ய முடியாது. பெண்கள் அளவுக்கு மீறிய செலவைக் கட்டுப்படுத்தாவிட்டால், பற்றாக்குறை ஏற்படும்.வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். உறக்கம் என்பது ஆழ்ந்த தூக்கமாக இருக்காது. இந்தக் காலக் கட்டத்தில், உங்கள் ராசிக்கு குருபார்வை கிடைத்துள்ளதால், விரயத்தில் உள்ள ராகுபகவான், ஏதாவது ஒரு நல்ல காரியத்தை நடத்தி வைத்து, அதன்மூலம் சுப விரயச் செலவுகளை ஏற்படுத்துவார்.
ராகு பகவான் தனது 11ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10ம் இடத்தைப் பார்ப்பதால், தொழில் ரீதியாக சில பின்னடைவுகள் ஏற்படும். உற்பத்திப்பொருட்கள் விற்பனையின்றி தேங்கிக் கிடக்கும். உங்களிடம் கடன் பெற்ற வியாபாரிகளிடமிருந்து பணம் திரும்பக் கைக்கு வராது. ராகுபகவான் தனது 3-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தைப் பார்ப்பதால், உங்களால் நாணயத்துடன் நடந்துகொள்ளமுடியாமல் போகும். அது மட்டுமின்றி உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிப்படையும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவு ஏற்பட்டு மறையும். குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணம் இல்லாமல் போகும். வார்த்தைகளில் சிடுசிடுப்பு இருக்கும். கண்கள் சம்பந்தமான நோய் ஏற்படும். தேவையில்லாத அபவாதம் ஏற்படும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகலாம். கணவன்-மணைவி உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. புத்திர-புத்திரிகளின் போக்கு மனதுக்கு கவலையளிக்கும்.
கேது பகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தின்மூலம் நற்பலன்களாக நிகழும். உங்கள் ராசிக்கு குரு பகவானின் நற்பலன்களும் கூடுவதால், ராகுவின் தீய பலன்கள் பெருமளவுக்கு குறைய வாய்ப்புள்ளது. கேதுவின் சஞ்சாரம் தக்க முறையில் தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த போட்டியாளர்களையும் எதிரிகளையும் அழிக்கும். பழைய கடன்கள் அடையும். அதே சமயம் தொழிலைப் பெருக்க எதிர்பார்த்த புதிய கடனுதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் பண வரவு கிடைக்கும். சிலர் நூதனமான பொருள் விற்பனை மூலம் நல்ல லாபம் காண்பார்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நோயிலிருந்து விடுபடுவீர்கள். இதுவரை இருந்துவந்த மருத்துவச் செலவுகள் இனி இருக்காது. உங்கள் செல்வாக்கு உயரும். தாராள பணப்புழக்கம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் நல்ல நிலைமை ஏறப்டும். எடுக்கும் காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் உங்கள் புதிசாலித்தனத்தின்மூலம் வெற்றியடைவீர்கள். அரசியல்வாதிகள் , பத்திரிக்கையாளர்கள் ,மக்கள் பணி புரிபவர்கள் ஆகியோர் மேன்மையடைவார்கள். புதிய பட்டம் பதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து வளர்ச்சி காண்பீர்கள். சேவைத் துறையில் உள்ளவர்கள் மேன்மையடைவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களில் இதுவரை நிலவிவந்த தடைகளும் தாமதங்களும் நீங்கி, இப்போது சுப கார்யங்கள் நடந்தேறும்.
அரசியலில் இருப்பவர்கள் பிரபலமாகும் வாய்ப்புள்ளது. கேது பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தை தனது 3ம் பார்வையால் பார்ப்பதால், இதுவரை தொல்லை கொடுத்து வந்த பிரச்சினைகள் யாவும் அமுங்கிப்போகும். வேலைப்பளு அதிகமாகும். ஆனால் அதற்கேற்ற வருமானமும் இருக்கும். கேது பகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடத்தைப் பார்வையிடுவ்தால் தாயாரின் உடல்நலம் சிறக்கும். தாய்வழி உறவினர்கன் உதவி கிட்டும். சிலர் புதிய வண்டி வாகனத்தை வாங்குவார்கள். சிலர் வீடு மனை வாங்குவார்கள். விருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவீர்கள். தீர்த்த யாத்திரை செல்வீர்கள். பூர்வீகச்சொத்து மேன்மையடையும். கேதுபகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தால், மனதிற்குள் அசாத்திய துணிச்சல் ஏற்படும். மிகவும் சுறுசுறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்பட்டு வெற்றியை அடைவார்கள். கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். கணவன்-மனைவி உறவு சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். ராகுவின் கெடு பலன்கள் குறையும்.


ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - மேஷ ராசி 

2015-12-31

2016- புத்தாண்டு பலன்கள்- கன்னி ராசி | 2016 Rasi palan Kanni Rasi | New Year Palangal 2016 Kanni Rasi

2016 - புத்தாண்டு பலன்கள் : கன்னி ராசி 2016


கன்னி ராசி 2016
இந்த 2016-ம் ஆண்டின் துவக்கத்தில்  ஆகஸ்டு மாதம் வரை   குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திலும், அதன் பிறகு, குரு உங்கள் ஜென்ம  ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். இரண்டு சஞ்சாரங்களுமே நன்மை தராது. சனியின் 3-மிட சஞ்சாரம் நற்பலன்களை  நிகழ்த்திக் காட்டும். ராகு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திலும், கேது உங்கள் ராசிக்கு    6-மிடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். ராகுவின் சஞ்சாரம் நற்பலன்களைத் தராது. கேதுவின் சஞ்சாரம் மூலம் சுப ப்லங்களாக நிகழும்.
இந்த ஆண்டு துவகக்ம் முதல்  குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், எதைத் தொட்டாலும் விரயமாகவே இருக்கும். இதுவரை கூறப்பட்ட பலன்களுக்கு எதிரிடையான பலன்களாகவே நடக்கும். குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுடைய ஊக்கம் குறையும். அலுப்பும் சலிப்புமே அதிகரிக்கும். ஊட்டம் குறைந்து உடல் பலவீனமாகும். உடல்நலத்தில் சின்ன சின்னக் குறைகள் தோன்றும். ஈரல் கோளாறுகளும், செரிமானக் கோளாறுகளும் ஏற்படும். சர்க்கரை வியாதி, கொலாஸ்ட்ரல் முதலிய வியாதிகள் வரும். சிகிச்சையின்மூலம் பணம் கரையும். வேலை நெருக்கடிகளையும் அலைக்கழிப்புகளையும் சந்திப்பதால், நேரா நேரத்துக்கு சாப்பிட முடியாமல் போகும். கடினமான உழைப்பால் உடம்பில் உளைச்சல் உண்டாவது சகஜம் என்றாகிவிடும்.  பணம் ஏராளமாக செலவாகும். பணம் ஒன்றுக்கு இரண்டாக செலவழியும். வழக்கமான செலவுகளே வரம்பு மீறிவிடும். புதிய செலவினங்களும்  கிளம்பி, வாட்டி வதைக்கும். குடும்பசெலவுகள், பிள்ளைகளுக்கான பலவித செலவுகள், உறவினர் வகையில் விஷேஷங்களுக்கான செலவுகள் என்று சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வரவேண்டிய   பணம் சரியான சமயத்தில் கைக்கு வராததால், ஏகப்பட்ட நெருக்கடிகளில் சிக்கி ,அவஸ்தைக்குள்ளாவீர்கள். உங்கள் மதிப்பு  மரியாதை குறையும் அளவுக்குப்  போய்விடும். சொந்த பந்தங்களின் சுபகாரிய சீர்வரிசைக்கெல்லாம் செலவு செய்யவேண்டி நேர்வதால் திணறுவீர்கள். பொன்னாபரணங்களை அடமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். வட்டிகட்ட முடியாமல் நகைகளை விற்கும் நிலை ஏற்படும். கூடிவந்த திருமணம்கூட தடைப்படும். தம்பதியர் ஒற்றுமை குறையும். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பிள்ளைகளால் சஞ்சலம் உண்டாகும். தூர தேசங்களில் பிள்ளைகளைப் பிரிந்திருக்க  நேரும். மனதில்  நிம்மதி இருக்காது. புகழ் மங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். திருமணத் தடை, பிள்ளைகள் பிரச்சினை, பணியிடத்தில் அவமானம் வியாபார நஷ்டம் என்று தொல்லைகள் பல இருக்கும
குருவின் 12-மிட  சஞ்சாரத்தால் நீங்கள் பலவிதத்தில் சிரமப்பட நேர்ந்தாலும்  சில நன்மைகளையும் அடைவீர்கள். 12-மிடத்தில் சஞ்சரிக்கும் குருபகவானின் அருள் நிறைந்த பார்வைர்களில் ஒரு பார்வை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் விழுகிறது. இதனால் கல்வி மேம்படும். வித்தைகள் விருத்தியாகும். தாயாருக்கு உடல்நலம் சிறக்கும். இடம்,குடியிருப்பு, மனை, வீடு, தோட்டம், இதர சொத்துக்கள் ஆகியவற்றை பெருக்கிக்கொள்ள முடியும். குருபகவானின் மற்ற பார்வைகள் 6 மற்றும் 8 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், வியாதிகள் மட்டுப்படும். கடன், நோய்கள் குறையும். வழக்கு, விவகாரங்களை எதிர்கொண்டு  வெற்றிகொள்ள முடியும். எனவே ஒரேயடியாக துவண்டுபோகவேண்டிய அவசியமில்லை. அவ்வப்போது குருவின் சுபப் பார்வை ஒளி வீசும்.
இனி, ஆகஸ்டு 2016 மாதத்தில் நிகழப் போகும்  குருவின் ஜென்ம சஞ்சாரமும் பெரிய வித்தியாசத்தைக் காட்டப் போவதில்லை. நடை,உடை, பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். விரக்தியும் சோர்வும் சலிப்பும் உங்களிடம் சொந்தம் கொண்டாடும். அடிக்கடி உங்கள் மனம் துவண்டுபோகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. ஒருமாதிரியாயிருக்கு அசத்துது; கிறுகிறுப்பாயிருக்கு என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பீர்கள். பித்தமயக்கம், தலைச் சுற்றல், சர்க்கரை, கொலாஸ்ட்ரல் ஈரல் கோளாறு, செரிமானப் பிரச்சினை என்றபடி அசௌகரியங்கள் மேலோங்கியிருக்கும்.
ஜென்ம குருவும் பொருளாதார வசதியைக் கொடுப்பார் என்று சொல்லமுடியாது. வரவேண்டிய பணம் தடைப்படும். வந்து சேர்வதும் அரையும் குறையுமாக வரும். ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டி, தவணை என்று வருமானத்தில் பெரும்பகுதி கடனுக்கே போய்விடும். பற்றாக்குறைப் பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதும் சமாளித்து சரிக்கட்டுவதும், வழக்கமான பிரச்சினையாகிவிடும். இதுமட்டுமல்லாமல் பணத்தை முன்னிட்ட கருத்துவேற்பாடுகள், மனஸ்தாபங்கள் என்று ஒன்று மாற்றி ஒன்று குடும்ப அமைதியை சீர்குலைக்கும். வீண்தகறாறும் அவப்பெயரும் ஏற்படும்.
ஜென்ம குரு சுப காரியங்களையும் நடக்கவிடாது. காரணம் சட்டுப்புட்டென்று, பணம் புரட்ட முடியாது. தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. ஏற்கெனவே கல்யாணமான தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினை இருந்தவண்ணம் இருக்கும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலைக்கழிப்பு என்று தம்பதியரிடையே இணக்கம் குறையும். பிள்ளைகளைப் பற்றிய பொறுப்பும் கவலையளிக்கும்.
சிலர் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்வார்கள். சிலர் இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. அவருடைய உடல்நலத்தில் ரத்தம் சம்பந்தமான வியாதிகள், மற்றும் விஷம் சம்பந்தமான வியாதிகளும் ஏற்படும். சிலர் ஒழுக்கக் குறைவான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு உடல்நலத்தையும் ,கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துக்கொள்வர். தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். வீண்பயம் மனதில் இருக்கும்.. சதா சரவ காலமும், ஏதோ ஒரு சோகம் மனதில் இருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள், எண்ணங்கள் யாவும் அப்போதைய சூழ்நிலைக்கு தேவையற்றதாகவே இருக்கும். உடல்நல்த்தில் கவன்ம் தேவை. உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள், காயங்கள், அலர்ஜி மற்றும் தோல் நோய்கள் தோன்றும்.
மனதைப் பக்குவப்படுத்தி தியானம் , இறைவழிபாடு என்ற பாதையில் சென்றால், ஆன்மீக குருமார்களின் தரிசனம், சாதுக்களின் நட்பு, பெரியோர்களின் தொடர்புகள் அவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்படும். சிலர் தனது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படும். மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக கடின உழப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். நீங்கள் என்னதான், படிப்பில் புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் திறமைகள் எல்லாம் இப்போது உங்களுக்கு பயன்படாமல் போகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடங்கல்கள் வரும். தொழிலாளர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். மின்சாரம், நெருப்பு, விஷம், ஆயுதம் இவற்றில் ஈடுபட்ட தொழில் செய்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.  மனதைரியம், மன பலம் குறைய வாய்ப்புண்டு.சகோதர சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
எச்சரிக்கையோடிருந்தாலும் , கடவுள் பக்தியோடிருந்தாலும், இந்த கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். தேவையற்ற காரியங்களில் உங்கள் முகத்தைக் காட்டாமல் இருப்பது நல்லது.  இனி இத்தனை கஷ்டங்களுக்கும் மருந்தாக,  குரு பார்வைகளும் , சனியின் பார்வைகளும் மிகவும் ஆறுதலான விஷயமாக இருக்கும். குருவின் சாதகமற்ற நிலை சனி பார்வையினால் மாறும். குருவின்  அசுப குணம் மர்றுபட்டு  சில சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும். நீங்கள் தொழில் தொடங்குவதற்கு நண்பர்கள் கை கொடுத்து உதவுவார்கள். ஆரோக்கியம் சிறப்படையும். பாயில் படுத்திருந்தவர்கள் பமபரமாக சுழல்வார்கள். எதையும் சமாளித்து ஏற்றம் பெறும் வழியை சனி காட்டுவார்.                         .
இந்த வருடம் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-மிடத்தில் சஞ்சரிக்கிறார். நற்பலன்கள் மிகுந்திருக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும். எல்லாக் காரியங்களும் வெற்றியடையும். உத்தியோகம், பதவி உயர்வு ஏற்படும்.எல்லாம் முழு நன்மையாகவே நடக்கும். இவரது ஊரில் இவருக்கு தலைமைப் பதவிகள் ஏற்படும். தினமும் பால் சோறும் உய்ர்தர உணவும் வேளை தவறாமல் கிடைக்கும். அஷ்ட லக்ஷ்மி கடாட்சமும் ஏற்படும். பெரிய ராஜயோகமும் , எடுத்த காரியமெல்லாம் வெற்றியடைதலும் கைகூடும். உயர்தர வாகன வகைகளும் ஏற்படும். உடன்பிறப்புக்கு ஏதாவது அதிர்ஷ்டம் ஏற்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆளடிமையும் பணியாட்களும் அமைவர். இருக்க வசதியான வீடும் அமையும். ஒருவர் கோழையாயினும் 3ல் சனியுள்ள இந்த சமயத்தில் வலிமையான பகைவனையும் சீறிப் பாய்ந்து வெல்லும் சிங்கமாக மாறிவிடுவர். பாக்கிய விருத்தி ஏற்படும். போக சுகம் முழுமையாகக் கிடைக்கும். யானை, குதிரை, எருமை போன்ற வாகன கால்நடைச் செல்வம் ஏற்படும். கார் போன்றவை கிட்டும். எல்லா வகையிலும் கலப்பற்ற பூரண் சுப பலன் சனி 3ல் உள்ளபோது ஒருவருக்கு ஏற்படுகின்றது. பெண்கள் இதுநாள்வரை பட்ட கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் வகையில் இந்த சனியின் மாற்றம் உங்களுக்கு சாதகமான முறையில் செயல்படும். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் விலகி உங்களுக்கும் அவருக்கும் இடையே நெருக்கமும் நல்லிணக்கமும் ஏறப்டும். பிள்ளைகளும் தங்களின் சொற்படி நடந்து உங்களுக்கு நற்பெயரையும் பாராட்டையும் வாங்கித் தருவார்கள். குடும்ப ஒற்றுமை ஓங்கும். மொத்தத்தில் உங்கள் வீடு ஒரு அமைதிப் பூங்காவாகக் காட்சியளிக்கும். சிலருக்கு அலுவலகத்தில் நற்பெயரும் பாராட்டும் கிடைக்கும். அதேபோல் ஊதிய உயர்வும் பணிமாற்றமும் கிடைக்கும். சிலர் புது அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து பணிபுரியும் யோகமும் கிட்டும். நெடுனாளாக குழந்தைப்பேறு இன்றித் தவித்த உங்களில் சிலருக்கு அந்த பாக்கியம் எளிதில் கிடைக்கப் பெறும். ஏனெனில் சனிபகவான் உங்களுக்கு புத்திர ஸ்தானாதிபதியாவதால், இந்த நல்ல விஷயத்திற்கு பெரிதும் உதவுவார்
மாணவர்கள்  சோதனைகளைக் கடந்து பல சாதனைகளைப் படைக்கும் விதமாக இந்த சனிய்ன் 3-மிட சஞ்சாரம் உங்களுக்கு துணை புரியும். தேர்வில் அமோக வெற்றி மற்றும் நீங்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்து படிக்க இந்த சனியின் சாதகமான நிலை உங்களுக்கு பெரிதும் துணை நிற்கும். உங்களின் ஆர்வம் மற்றும் செயல்திறனைக் கண்டு உங்கள் பெற்றோர்கள், உங்கள் ஆசிரியர்கள் மற்றும் உங்களின் நண்பர்கள் வியந்து பாராட்டுவார்கள். இந்த திருப்திகரமான நிலை  இந்த ஆண்டின் இறுதிவரை நீடிப்பதால், கல்வித் துறையில் நீங்கள் நினைத்ததை நினைத்தபடி சாதிக்க அதிக வாய்ப்புகள் கிட்டும். மேலும் உங்களுக்கென்று ஒரு தனியிடத்தை மாணவர்களாகிய நீங்கள் தக்கவைத்துக்கொள்ளவும் முடியும். இருப்பினும் குருவின் பனிரண்டாமிட மாற்றம் மற்றும் ராகு கேதுவின் 1 மற்றும் 7மிட சஞ்சாரமும் உங்கள் மன உறுதியை சற்று அசைத்துப் பார்க்கும் விதமாய் செயல்படும். இருப்பினும் சனியின் சாதகமான சூழல், அதற்கு இடமளிக்காமல் மேலோங்கி நிற்கும். இதனால் உங்கள் இலக்கை நீங்கள் எளிதில் அடைய முடியும். இந்த சனிப் பெயர்ச்சி சாதனைகளை நிகழ்த்த வல்லதாக நிகழும் என்பதில் சந்தேகமேயில்லை. அரசியல்வாதிகளுக்கு சனி பகவானின் மூன்றாமிட மாற்றம் உங்களின் அரசியல் துறையில் உங்களால் முடியாத அதாவது சாத்தியமற்ற பல செயற்கரிய சாதனைகளைச் செய்ய உங்களைத் தயார்படுத்துவார். இதுநாள்வரையில் உங்களுக்கு உங்கள் துறையில் இருந்துவந்த குறுக்கீடுகள் மெல்ல மெலல் மறையும். உங்களை எதிர்த்தவர்களும், உங்களை ஏளனப்படுத்தியவர்களும் உங்களிடம் மண்டியிடுவார்கள். அல்லது தங்களின் வேற்றுமையுணர்வுகளைக் களைந்துவிட்டு அவர்களும் உங்களுடன் சேர்ந்து, உங்களின் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் பாடுபடுவார்கள். அரசியல் வட்டாரத்தில் உங்களுக்கென்று தனிப் பெயரோ அல்லது அந்தஸ்தோ கிடைக்க இந்த சனிபகவான் பெரிதும் துணை புரிவார். புகழோடு, பணமும் அந்தஸ்தும் கௌரவமும் உங்களை வந்தடையும். இந்த சஞ்சரத்தின் மூலம் உங்கள் துறையில் நீங்கள் நினைத்த எல்லாவற்றையும் நடத்திக்காட்ட உங்களால் கண்டிப்பாக முடியும்
இந்த வருடம் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 12ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.ராகுவின் 12ம் இடத்து சஞ்சாரம் உங்களுக்கு அதிக அலைச்சலையும் பயணங்களையும் கொடுக்கும். வேலைப்பளு கூடும். உறக்கம் குறையும். சிலர் குடும்பத்தை விட்டு வெளியூரில் தங்க நேரும். உங்ககளுடைய பயணங்கள் அனைத்தும் பெரும்பாலும் வியாபார சம்பந்தமாகவோ அல்லது உத்தியோக சம்பந்தமாகவோதான் இருக்கும். பூர்வீகச் சொத்து பிரச்சினைக்குள்ளாகி ,பிறகு நீங்கும். குழந்தைகள் வழியில் செலவுகள் ஏறப்டும். சிலருக்கு அரசாங்கத்தாலும் அரசு அதிகாரிகளாலும் விரயச் செலவு ஏற்பட்டு மனக்கஷ்டங்கள் தோன்றும். மறைமுக எதிரிகளால் எப்போதும் தொல்லைகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும் அவர்கள் எதிர்ப்பு உங்களை ஒன்றும் செய்ய முடியாது. பெண்கள் அளவுக்கு மீறிய செலவைக் கட்டுப்படுத்தாவிட்டால், பற்றாக்குறை ஏற்படும்.வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். உறக்கம் என்பது ஆழ்ந்த தூக்கமாக இருக்காது. இந்தக் காலக் கட்டத்தில், உங்கள் ராசிக்கு குருபார்வை கிடைத்துள்ளதால், விரயத்தில் உள்ள ராகுபகவான், ஏதாவது ஒரு நல்ல காரியத்தை நடத்தி வைத்து, அதன்மூலம் சுப விரயச் செலவுகளை ஏற்படுத்துவார்.
ராகு பகவான் தனது 11ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10ம் இடத்தைப் பார்ப்பதால், தொழில் ரீதியாக சில பின்னடைவுகள் ஏற்படும். உற்பத்திப்பொருட்கள் விற்பனையின்றி தேங்கிக் கிடக்கும். உங்களிடம் கடன் பெற்ற வியாபாரிகளிடமிருந்து பணம் திரும்பக் கைக்கு வராது. ராகுபகவான் தனது 3-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தைப் பார்ப்பதால், உங்களால் நாணயத்துடன் நடந்துகொள்ளமுடியாமல் போகும். அது மட்டுமின்றி உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிப்படையும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவு ஏற்பட்டு மறையும். குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணம் இல்லாமல் போகும். வார்த்தைகளில் சிடுசிடுப்பு இருக்கும். கண்கள் சம்பந்தமான நோய் ஏற்படும். தேவையில்லாத அபவாதம் ஏற்படும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகலாம். கணவன்-மணைவி உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. புத்திர-புத்திரிகளின் போக்கு மனதுக்கு கவலையளிக்கும்.
கேது பகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தின்மூலம் நற்பலன்களாக நிகழும்.  ராகுவின் தீய பலன்கள் பெருமளவுக்கு குறைய வாய்ப்புள்ளது. கேதுவின் சஞ்சாரம் தக்க முறையில் தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த போட்டியாளர்களையும் எதிரிகளையும் அழிக்கும். பழைய கடன்கள் அடையும். அதே சமயம் தொழிலைப் பெருக்க எதிர்பார்த்த புதிய கடனுதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் பண வரவு கிடைக்கும். சிலர் நூதனமான பொருள் விற்பனை மூலம் நல்ல லாபம் காண்பார்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நோயிலிருந்து விடுபடுவீர்கள். இதுவரை இருந்துவந்த மருத்துவச் செலவுகள் இனி இருக்காது. உங்கள் செல்வாக்கு உயரும். தாராள பணப்புழக்கம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் நல்ல நிலைமை ஏறப்டும். எடுக்கும் காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் உங்கள் புதிசாலித்தனத்தின்மூலம் வெற்றியடைவீர்கள். அரசியல்வாதிகள் , பத்திரிக்கையாளர்கள் ,மக்கள் பணி புரிபவர்கள் ஆகியோர் மேன்மையடைவார்கள். புதிய பட்டம் பதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து வளர்ச்சி காண்பீர்கள். சேவைத் துறையில் உள்ளவர்கள் மேன்மையடைவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களில் இதுவரை நிலவிவந்த தடைகளும் தாமதங்களும் நீங்கி, இப்போது சுப கார்யங்கள் நடந்தேறும்.
அரசியலில் இருப்பவர்கள் பிரபலமாகும் வாய்ப்புள்ளது. கேது பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தை தனது 3ம் பார்வையால் பார்ப்பதால், இதுவரை தொல்லை கொடுத்து வந்த பிரச்சினைகள் யாவும் அமுங்கிப்போகும். வேலைப்பளு அதிகமாகும். ஆனால் அதற்கேற்ற வருமானமும் இருக்கும். கேது பகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடத்தைப் பார்வையிடுவ்தால் தாயாரின் உடல்நலம் சிறக்கும். தாய்வழி உறவினர்கன் உதவி கிட்டும். சிலர் புதிய வண்டி வாகனத்தை வாங்குவார்கள். சிலர் வீடு மனை வாங்குவார்கள். விருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவீர்கள். தீர்த்த யாத்திரை செல்வீர்கள். பூர்வீகச்சொத்து மேன்மையடையும். கேதுபகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தால், மனதிற்குள் அசாத்திய துணிச்சல் ஏற்படும். மிகவும் சுறுசுறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்பட்டு வெற்றியை அடைவார்கள். கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். கணவன்-மனைவி உறவு சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். ராகுவின் கெடு பலன்கள் குறையும்.
பரிகாரம்:
குருவின் சஞ்சாரங்கள் சரியில்லை என்பதால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை ஆலயம் சென்று வழிபட்டு, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து கொண்டக்கடலை மாலையிட்டு வணங்கவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லையாதலால், வெள்ளிக் கிழமைகளில் துர்கையம்மனை சிவப்பு மலர்கள் கொண்டு அர்ச்சித்து வழிபடவும்.

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP