-->
Showing posts with label ராகு கேது. Show all posts
Showing posts with label ராகு கேது. Show all posts

2016-01-08

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2016 | Rahu Ketu Peyarchi Palangal 2016


ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016| Rahu Ketu Peyarchi Palangal 2016

இந்த வருடம் ஜனவரி மாதம் 8-ம் தேதியன்று ராகுபகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் ,கேது பகவான் மீன ராசியிலிருந்து கும்ப  ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.இந்த ராசிகளில் சுமார் ஒன்றரை வருடம் தங்கிப் பலன் புரிவார்கள்.சாதாரணமாக மற்ற கிரகங்கள் எல்லாம் மேஷம், ரிஷபம்,மிதுனம் என்ற வரிசையில் சுற்றும். ஆனால், ராகு-கேதுக்கள் மட்டும், மேஷம், மீனம், கும்பம் என்ற எதிர்த் திசையில் சுற்றிவரும். அதனால் இவைகளை வக்கிரகதியில் சுற்றி வரும் கிரகங்கள் எனலாம். இந்த ராகு -கேது பெயர்ச்சி, வாக்கிய பஞ்சாங்கப்படி 20.6.2014 என்று கணிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் ராகு பகவான்- கேது பகவான்களுக்கான வழிபாட்டு பூஜைகளும், பரிகார பூஜைகளும் இந்த தேதியில்தான் நடைபெறும் என்பதால், ராகு-கேது பெயர்ச்சியை நாம் ஜனவரி மாதம் 8 -ம் தேதி என்று எடுத்துக்கொண்டு பலன்களைப் பார்ப்போம்.
ராகு கேது என்னும் இந்த இரண்டு பாம்புக் கிரகங்களுக்கும் சொந்த வீடு, ஆட்சி வீடு, உச்ச வீடு என்று எதுவும் கிடையாது. ஜோதிட நூல்களில் ராகுவுக்கும் கேதுவுக்கும் ரிஷபத்தை உச்ச வீடாகவும், விருச்சிகத்தை நீச வீடாகவும் கூறுவதுண்டு. இவ்விரு கிரகங்களும் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த ராசி அதிபதிகளின் குணத்தையும் எந்த கிரகங்களோடு சேர்ந்திருக்கின்றனவோ அந்த கிரகங்களின் குணத்தையுமே பிரதிபலிக்கும். உதாரணமாக மீன ராசியிலிருக்கும்போது குருபகவானின் குணாதிசயங்களையும், கும்ப ராசியிலிருந்தால், சனி பகவானின் குணத்தையும் ராகு -கேதுக்கள் பிரதிபலிக்கும். ராகு-கேது ஆகிய இரு கிரகங்களும் 3,7 ,11 ஆகிய இடங்களைப் பார்க்கும்.
பரிகார ஸ்தலங்களான காளஹஸ்தி கோவிலுக்கும், திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் எனும் ஊருக்கு அருகிலுள்ள மன்னார்சாலாவுக்கும் சென்று பரிகார பூஜைகள் செய்து வரலாம். மேலும், திருநீர்மலை, திருவண்ணாமலை, குமரன்குன்றம் மற்றும் பர்வதமலை ஆகிய ஸ்தலங்களில் ‘கிரிவலம்’ செய்வதும் சிறந்த பரிகாரமாகும். ராகு பகவானுக்கு சனிக்கிழமைகளிலும், கேது பகவானுக்கு செவ்வாய்க்கிழமைகளிலும் எலுமிச்சம்பழ விளக்கேற்றி, எலுமிச்சம்பழ சாதம் நைவேத்தியம் செய்து, ராகுகாலங்களில் ராகு ஸ்தோத்திரமும், எமகண்டங்களில் கேது ஸ்தோத்திரமும் பாராயணம் செய்து வந்தால், ராகு கேதுவால் வரும் தோஷங்கள் விலகும்.
ராகு ஸ்தோத்திரம்:
அர்த்தகாயம் மகாவீர்யம்
சந்திராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராகும் ப்ரணயாம் யகம்
கேது ஸ்தோத்திரம்:
பலாச புஷ்ப சங்காசம்
தாரகா கிரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம்
கோரம் தம் கேதும் ப்ரணமாம் யகம்
இனி ராகு -கேது கிரகங்களுக்குரிய பெயர்ச்சிப் பலன்களை ஒவ்வொரு ராசிக்கும் பார்க்கலாம்.

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - மேஷ ராசி 

moonramkonam

2015-12-26

Rahu ketu yoga and dosha | ராகு-கேது தருவது யோகாமா... தோஷமா ....?

ராகு-கேது தருவது யோகாமா... தோஷமா ....?
***********************************************************************

ஜனன ஜாதகத்தில் குரு இருக்கும் ராசியில் கோசார குரு நுழையும் போது ஜாதகர் செய்த தவறுகளை அவனுக்கு உணர்த்தி அதற்குண்டான தண்டனையை அனுபவிக்க செய்வான். அதன் பிறகு அதே ராசியை விட்டு வெளியேறும் போது அந்த ஜாதகனுக்கு புதிய பதவியை தந்து அவனை உயர்த்தி விட்டு செல்வான்.
குருவின் மாண்பும் மேன்மையும் தங்களின் இன்று ஒரு தகவலில் தெரிய வந்தது ஐயா...தங்களுக்கு வணக்கங்களும் நன்றிகளும்🙏

ஒருவர் ஜாதகத்தில், இரண்டுக்குடையவனும், குருவும் பலமாக இருந்து சுக்கிரன் பார்வை பெற்று இருப்பின்,அந்த ஜாதகர் சிறந்த பேச்சாளர் ஆவார்.
சனி
சூரி +கேது=தோசம்
சந் +கேது=தோசம்
செவ் +கேது=தோசம்
புதன் +ராகு=யோகம்
குரு + ராகு=யோகம்
சுக் +ராகு=யோகம்
சனி
சூரி+ராகு,சந்+ராகு,செவ்+ராகு =தோசம் அதிக படுத்துதல்.
புத+கேது.குரு+கேது,சுக்+கேது =யோகம் குறைத்தல்.
ஒரு சாதகத்தில் இந்த கிரகங்களின் சேர்க்கை இருந்தால் சனி பகவான் கோட்சார ரீதியாக வரும் போது தோசத்தை முன்னேயும்,யோகத்தை பின்னேயும் தருவார்.
பிருகு நந்தி நாடி ஆய்வு
குரு+ புதன் சேர்க்கை
இந்த இணைவு உள்ள ஜாதகர் தாய்மாமனுக்கு மிகவும் பிடித்த நபர் .....
ஜாதகர் வியாபார தந்திரம் நிறைந்தவர் ....
நல்ல புத்திசாலி ஜாதகர் இளமையான தோற்றம் நிறைந்தவர் .....
விகட கவி போல் ஹாஸ்யம் நிறைந்தவர்....
வீமகவி போல் ஜோஸியம் தெரிந்தவர்......
நான்காம் அதிபன் ஏழில் இருந்தால் நல்ல படிப்பு இருக்கும். ஆனால் சபை கூச்சம் இருக்கும். நான்கும் ஏழும் பரிவர்த்தனை ஆனால் பூர்வீக சொத்தை தன் சுகத்திற்காக விரயம் செய்து விடுவார்கள்.

4 ம் மாதி புதன் 7 ல் உச்சம் .குரு 7 ஆம் பார்வையாகப்பார்க்கிறார்.நன்றி ஐயா.🙏🏾.பூர்வீக சொத்து உண்டு .ஆனாலும் அதன்மேல் ஆர்வமில்லை.நிறைய விஷயங்கள் அறிந்து கொள்கிறேன்.

Vellore Bala Jothidar

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP