-->
Showing posts with label Rasi. Show all posts
Showing posts with label Rasi. Show all posts

2016-03-03

Rashi | Rasi |இராசி

இராசி:
இராசி என்பது அவாவர்கள் ஜனன காலத்தில் கிரகங்கள் இருக்கும் இராசிகளை தெரிவிக்கும் சக்கரமாகும்...இந்த இராசிச் சக்கரத்தின் உதவியோடுதான் ஜனன காலத்தில் கிரகங்கள் இருக்கும் இராசி,ஆட்சி,உச்சம்,நட்பு,பகை,நீச்சம் என்பவைகளைத் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

மற்றும்கேந்திரம்,திரிகோணம்,பணபரம்,ஆபோக்கிலீபம்,ஓஜை,உக்குமம்,சரம்,ஸ்திரம்,உபயம்,ஆகியவற்றைத தெரிந்துக்கொள்ள உதவதுதான் இராசி சக்கிரம் . இந்த இராசிச்சக்கிரம் பாவகபலன், தசாபலன் சொல்வதற்கு உகந்தது அல்ல . பாவகசக்கரமே முக்கியமாக பார்க்கவேண்டும் இராசிச்சக்கரத்தில் உள்ள கிரக நிலைகள் உறுதியானதுதானா என்பதை பாவகஸ்புடம் செய்து பாவகச்சக்கரம் மூலமாகத்தான் பலன்களை நிர்ணயம் செய்யவேண்டும் ...

இராசிச்சக்கரத்தில் கிரகங்கள் எந்த பாவங்களில் இருக்கிறது என்றுத் தெரிந்துக் கொள்வதுதான் பாவஸ்புடம் என்று பெயர் கிரகஸ்புடம் என்பதற்குக் கிரகங்கள் இருக்கும் சரியான இடம் என்பது பொருள் .

அதாவது ஒரு இராசியில் கிரகம் இருப்பது சாதாரணமாக தெரிவது .அதேக் கிரகம் எந்த இராசி-பாகை-கலையில் இருக்கிறது என்றுத் தெரிந்துக் கொள்வது துல்லியமானது ஆகும் .

இதைத்தான் ஸ்புடம் என்று சொல்கிறோம் .ஆகையால் பாவச்சக்கிரம் அடிப்படையில்தான் பலன்களை முடிவுச்செய்யவேண்டும் .பாவஸ்புடத்தில் ஒரு பாவகம் இரண்டு இராசியில் இருக்குமானால் இதில் இரண்டு இராசிக்குரிய கிரகம் எந்தகிரகம் வலுவுடன் உள்ளதோ அந்தக்கிரஹத்தின் பலன்தான் ஜாதகருக்கு தரும் . அதுப்போல் பாவக சந்திப்பில் ஒருகிரகம் இருந்தால் அந்தகிரகத்தின் தசாபலன் நன்மைகள் தராது .

ஆகையால் பாவச்சக்கிரம் என்பது மிகவும் அவசியமாகும். வெறும் இராசியை பார்த்துப் பலன் சொன்னால் பலன் தவறாகத்தான் வரும் .


2016-01-14

லக்னம் வலுவா? ராசி வலுவா? |How to find strength of lagna and Rasi

லக்னம் வலுவா? ராசி வலுவா?


லக்னம் வலிமை யா என அறிவதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.
லக்னத்தில் நல்ல ஸ்தானத்தின் அதிபதிகள் அமர்ந்தால் லக்னம் வலு பெற்றதாக கொள்ள வேண்டும். லக்னத்தை நல்ல ஸ்தானத்தின் அதிபதிகள் பார்த்தால் லக்னம் அதிக வலுபெற்றதாகக் கொள்ள வேண்டும்.
...
இயற்கை சுபகிரகங்களான குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன், தனித்த புதன் இவர்கள் 6,8,12 வீட்டு அதிபதியாகாமல்,லக்னத்தில் அமர்ந்தாலோ,லக்னத்தைப் பார்த்தாலோ லக்னம் வலுபெற்றுள்ளதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இயற்கை பாவக்கிரகங்களான சனி,சூரியன், செவ்வாய் இவர்கள் நல்ல ஸ்தானத்திற்கு அதிபதியாகி லக்னத்தில் நின்றாலும் லக்னம் வலுவே.
அடுத்ததாக லக்னாதிபதியை நல்ல ஸ்தானாதிபதி சேர்ந்தாலோ பார்த்தாலோ ,நல்ல ஸ்தானத்தில் அமர்ந்தாலோ லக்னம் வலுவாகிறது.
லக்னாதிபதி நல்ல ஸ்தானங்களில் ஆட்சி, உச்சம்,நட்பு, பரிவர்த்தனை, நீச்சபங்கம் பெற்றிருந்தால் லக்னம் வலுத்ததாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
லக்னாதிபதி நவாம்சத்தில் நீச்சம் பெறாமல் இருந்தாலும் லக்னம் வலுவே.
எனவே,லக்னாதிபதி 3,6,8,12 ல் மறைவு பெறாமல் கேந்திர திரிகோணங்களில் அமர்ந்து,கேந்திர திரிகோணாதிபதிகளின் பார்வை பெற்றிருந்தாலும் லக்னம் வலுபெற்றதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.இதே போல சந்திர லக்னத்திற்கும் பலன் அறிந்துக்கொள்ளவேண்டும்.
லக்னத்திற்கு சூரியன் சுப கிரகமாகி லக்னாதிபதி அஸ்தங்கம் பெற்றிருந்தால் தோஷம் இல்லை.
உதாரணமாக தனுசு லக்னத்திற்கு குரு லக்னாதிபதி யாவார்.சூரியன் யோகாதிபதியாவார்.ஒன்பதாமிடம் யோகஸ்தானமாகும்.எனவே குருவும் சூரியனும் இணைந்து ஒன்பதாமிடத்தில் சிம்மத்தில் அமர்ந்தால் ஜாதகரின் தனுசு லக்கினம் வலுத்ததாகவே அர்த்தம்.
லக்னாதிபதி ராகு கேதுவோடு இணைவு பெறக்கூடாது.லக்னாதிபதி பகை கிரகங்களோடு இணையக்கூடாது.பார்வையும் செய்யக்கூடாது.லக்னாதிபதி ஆறாம் வீட்டு அதிபதியோடு சேரக்கூடாது.பார்வையும் பரிவர்த்தனை யும் கூடாது.
இந்த விதிமுறைகள் லக்னத்தோடு பொருந்தினால் லக்னம் வலுபெற்று லக்னத்தை வைத்தே பலன்கள் நடைபெறும்.
A.v.ஜோதிடம்

2015-11-13

Rasi - Love - and - Marriage - Astrology

காதலில் அதிக ஈடுபாடுள்ள ராசிகள்
காதல் என்று வரும் போது, அதில் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசிக்காரர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும்.
சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வார். அதுவே சுக்கிரன் மோசமான நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் காதல் தோல்வி அல்லது திருமணத்திற்கு பின் துணையை விரைவில் பிரியக்கூடும்
எந்த ஒரு ராசி அல்லது லக்னமாக இருந்தாலும், களத்திர ஸ்தானம் என்னும் 7, 8 ஆம் வீடுகளைக் கொண்டே எந்த மாதிரியான திருமணம் நடைபெறும் என்று கூற முடியும்
திருமணம் ஒருவரின் ஜாதகத்தில் 7, 8 ஆம் அதிபதிகள் நல்ல நிலையில் இருந்து, கெட்ட கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால், அந்த ஜாதகருக்கு பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம் நடைபெறும்.
ஒருவரின் ஜாதகத்தில் களஸ்திர மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானங்கள் மிகவும் வலிமையாக இருந்தால், அவர் அத்தை, மாமன் முறையிலேயே திருமணம் நடைபெறும்.
ஜாதகத்தில் கேந்திர பகுதியான ஏழாமிடம் சிறப்பாக அமைந்து விட்டால் மனிதனின் இல்லறம் நல்லறமாக இருக்கும் நல்லறமான இல்லறத்தில் பிறக்கும் குழந்தைகளே சமூக வளர்ச்சிக்கு தூண்களாக இருப்பார்கள்.
இல்லறம் கெட்டுவிட்டால் குடும்பம் மட்டுமல்ல நாடும் கெட்டு விடும். அதனால் தான் தராசு போல் நீதி வழியில் நின்று காம உணர்ச்சியை பயன்படுத்த வேண்டும் என்பதே நம் முன்னோர்களின் விருப்பம்.

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP