-->

2016-02-14

பன்னிரண்டு கிரகங்களின் பொது குணம் | General Characteristics of 12 planets in Vedic astrology

12 Planets in Astrology | Significance of Planets in Astrology


சூரியன்  General Characteristics of planet Sun - Suriyan

ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும். சூரியனை வணங்கி ஆதித்திய ஷிருதய மந்திரத்தால் இராமன் இராவனனை வெல்லும் ஆற்றல் பெற்றான். வேதங்களில் தலைசிறந்த மந்திரம் காயத்ரீ. காயத்ரீ மந்திரத்துக்கு உரியவன் சூரியன். சூரியநமஸ்காரம் என்ற ஓரு விசேஷமான வழிபாடு முறை உண்டு. இதை செய்வதில் ஆன்மீக பலமும் சரிர பலமும் அடையமுடியும் என்பது அனுபவம் கண்ட உண்மை. சுயநிலை,சுய-உயர்வு, செல்வாக்கு கௌரவம், ஆற்றல், வீரம், பராகிரமம், சரிர சுகம், நன்நடத்தை நேத்திரம், உஷ்ணம், ஓளி அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரன் சூரியன்.
சூரியன் அக்கினியை அதிதேவதையாக கொண்டவன். கதிரவன், ரவி, பகலவன் என பல பெயர்கள் உண்டு. தகப்பனை குறிக்கும் கிரகம் சூரியன். உத்திரம், உத்திரட்டாதி, கார்திகை நட்சத்திரக்கு உரியவன். சூரியனுக்கு சொந்த வீடு சிம்மம். உச்ச வீடு மேஷம், நீச்ச வீடு சுக்கிரன்.
  
செவ்வாய் General Characteristics of planet Mars - Sevvai
  
அங்காரகன், குஜன்,மங்களன் என்ற பெயர்களும் உண்டு. முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், நாட்டு தளபதிகள், நீதிபதிகள், பொரியியல் வல்லுனர்கள் முதலானோர்களின் ஜாதகங்களில் செவ்வாயின் பலம் இருந்தே தீரும் என்பது உறுதி.
பெருந்தன்மை அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரை வெல்லும் பராக்கிரம் இவற்றை வழங்குபவன் செவ்வாய் கிரகம். ரத்தத்திற்க்கும், சகோதரத்திற்க்கும் காரகன். மேஷம், விருச்சிகம் ஆட்சி வீடுகள். மகரம் உச்ச வீடு, கடகம் நீச வீடு.
அவிட்டம், மிருக சீரிடம், சித்திரை நட்சத்திரங்கள் செவ்வாய்க்கு உரிய நட்சத்திரங்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுடையவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆவதில்லை. லக்னத்திற்கு 2,4,7,8,12 இவைகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு. ஆனால் செவ்வாய் குருவோடு சேர்ந்தாலும், சனி, ராகு, கேதுவோடு சேர்ந்தாலும் செவ்வாய் தோஷம் பரிகாரம் ஆகிவடும். செவ்வாய் குருவோடு சேர்ந்தால் குருமங்கள யோகம் உண்டாகும். செவ்வாய் சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம் உண்டாகும்.

சந்திரன் General Characteristics of planet Moon - Chandran

மனதிற்க்கும், உடலுக்கும் காரகன் சந்திரன். உலக வாழ்வுக்கு சரிர பலம் முக்கியம். சரிர பலத்திற்க்கு மனவளம் அடிப்படை. ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் இரண்டையுமே அடைய முடியும். ரோகினி அஸ்தம் திருவோணம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன் சந்திரன். தாய்க்கு காரகன் சந்திரன். கடகம் ஆட்சி எனும் சொந்த வீடு, ரிஷபம் உச்ச வீடு, விருச்சிகம் நீச வீடு. திருமண பொருத்தங்கள் சந்திரன் சஞ்சாரம் செய்யும் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டே உறுதிபடுத்தபட்டு வருகின்றன. சுபமுகர்தங்கள் நிச்சயிக்கபடுவதும் சந்திரனைக் கொண்டுதான். நாம் பிறக்கும் போது சந்திரன் இருந்த வீட்டை வைத்துதான் கோச்சார பலன்கள் நிர்ணயிக்கபடுகின்றது. சந்திரன் ஜாதகத்தில் அமைந்த வீடு தான் இராசி எனப்படுகிறது.

சூரியனோடு கோச்சார ரீதியாக சேரும் பொழுது அமாவாசை ஆகின்றது.

சூரியனும், சந்திரனும் ஓன்றுக்கொன்று பார்வையிடும் பொழுது அதாவது நேர்கோட்டில் 180 பாகையில் சந்திக்கும் பொழுது பௌர்ணமி ஆகின்றது.

புதன் General Characteristics of planet Mercury - Bhudha

சுபகிரக வரிசையில் புதனும் சேரும். ஆனால் புதனோடு பாவகிரகங்கள் சேர்ந்தால் பாவி ஆகிவிடும். புதன் அலிக்கிரகம். எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அந்த கிரகத்தின் தன்மை பிரதிபல்க்கும். கேட்டை, ஆயில்யம், ரேவதி இந்த மூன்று நட்சத்திரங்களின் நாயகன். முதுன ராசிக்கும், கன்னி ராசிக்கும் அதிபதி புதனே.

புதன் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்று சூரியனோடு சேர்ந்தால் புதஆதித்ய யோகம் உண்டாகும். இதனால் கல்வி மூலம் பெரிய அந்தஸ்த்தை ஏற்படுத்தும். புதன் -வித்யாகாரகன். கல்வி வித்தை, தொழில் இவைகளின் மூலம் சிறப்பை ஏற்படுத்துபவன். நாடகம் மற்றும் நடன அமைப்புகளுக்கு புதனுடைய பலமே காரணம்.

நகைச்சுவை ததும்பும் நயமான பேச்சு, பளிச்சென்ற உச்சரிப்பு, புத்தக வெளியீடு இவைகளுக்கு புதபலமே காரணம். புதன் வாக்குஸ்தானத்தில்- 2 ஆம் இடத்தில் ஆட்சி உச்சம் பெற்றால் சிறந்த பேச்சுதன்மை இருக்கும்.

குருபகவான் General Characteristics of planet Mercury - Bhudha

குருவருள் திருவருள் என்பார்கள். குருபகவான் என்று சிறப்பித்து கூறப்படும் குருபார்க்க கோடி நன்மை. குருபார்வை அதாவது வியாழ நோக்கம் வந்தால் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் செய்யலாம் என்ற வழக்கம் உள்ளது. சுபகிரக வரிசையில் முதன்மையாக பேசபடும் குருபகவான் ஆட்சி வீடுகள் மீனம், தனுசு. உச்ச வீடு கடகம், நீச வீடு மகரம்.

குருபகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சூரியனோடு இனைந்நு 6,8,12 வது இடங்களில் மறைவு பெறாமல் அமைந்தால் ராஜயோகம். கோடிஸ்வர யோகம் அமையும். மேதைகளையும்> ஞானிகளையும் உருவாக்குவது குருபகவான். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள் இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும்.

விவேகத்தையும், அந்தஸ்தையும், ஆற்றலையும், புத்திர பாக்கியத்தையும் வாரி வழங்குவார். பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான். கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ- சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும்.

குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும். ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார். அறிவு வாயந்த குழந்தைகளை பெறுவதும் குருபகவான் அருள்தான்.

சுக்கிரன் General Characteristics of planet Venus - Shukra

கலைக்கு காரகன் சுக்கிரன். பரணி, பூரம், பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன். ரிஷபம், துலாம் ஆட்சி வீடுகள், மீனம் உச்ச வீடு, கன்னி நீச வீடு.சுக்கிரன் சந்திரனுடன் கூடி பலமுடன் 10ல் இருந்தால் நடிப்புகலையில் தேர்ச்சிபெற்று, குறிப்பிட்ட ஜாதகர் அல்லது ஜாதகி நட்சத்திர ஸ்தானம் பெற்று அவ்வகையில் அதிர்ஷ்டசாலியாக திகழ முடியும்.

லக்னம் எதுவானாலும் சரி சுக்கிரன் 10வது வீட்டில் தனித்திருப்பாரானல் நிச்சயமாக கலைத்துறை ஓன்றில் பாண்டித்யம் பெற்று அதனால் மற்றோரை பரவசபடுத்துகின்ற ஆற்றல் அமைந்து அவ்வகையில் அதிர்ஷ்டம் பெற முடியும்.

பொருட்களை வாங்குவதும், விற்பதும் இன்றைய வாழ்வியலில் முக்கியமான தொழில் ஆகும். இந்த தொழில் வளமையை ஏற்படுத்துவார் சுக்கிரன். சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் காதலில் வெற்றிகிடைக்கும். ஓருவரது ஜாதகத்தில் சுக்கிரன் தசாகாலம் நடக்கும் போது நல்லமுறையில் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சிற்றின்ப, பேறின்பங்களுக்கு வழிவகுப்பார்.

குறிப்பிட்ட ஓரு நபரை பார்த்து இவர் ஜென்டில்மேன் என்று சொன்னால் அவர் ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பாக அமைந்துள்ளார் என்று அர்த்தம். லக்னத்திற்க்கு 4ல் ஆட்சி, உச்சம், நட்புப்பெற்று அமர்ந்தால் வண்டி, வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து ஆகியவை அற்புதமாக அமையும

சனிபகவான் General Characteristics of planet Saturn - Sani

மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி. அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சந்திரங்களுக்கு நாயாகன். துலாம், சனிபகவானுக்கு உச்ச வீடு. மேஷம் நீசம், நீசம் பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டார். உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாரி வழங்குவார்.

சனிபகவான் பார்வை கொடியது. சனிபகவானுக்கு சுபகிரகங்கள் பார்வை நன்மை செய்யும் இடமான 3,6,10,15,9 அகிய இடங்களில் இருந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை.

நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்க்கும் காரகன் சனிபகவான். வாகனம் காகம். கலி,காரி,முடவன் என்ற பல பெயர்கள் உண்டு.

ஓருவர் ஜாதகத்தில் சனி நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் பலம் இழந்த நிலையில் இருந்தால் வாத நோயை ஏற்படுத்தும். சனிபகவான் பலம் பெற்ற ஜாதகர் சர்வ சக்திகளையும் பெறவாய்ப்பு உண்டு.

ஜாதகத்தில் நல்ல நிலையில் சனி இருந்தால், அந்த ஜாதகர் ஓரு நாட்டுக்கே தலைவராகவும் வாய்ப்பு உண்டு. வறுமை, நோய், கலகம், அவமரியாதை, இரும்பு, எண்னை, கருமைநிறம், பெரிய இயந்திர தொழிற்சாலை, தொழிலாளர் வர்க்கம் இவைகளுக்கு காரகன். சனிபகவான் பலம் பெற்று அமைந்தால் ஜாதகருக்கு அவர் சம்மந்தபட்ட இனங்களில் பொன்னையும், பொருளையும் வாரி வழங்குவார்.

இராகு General Characteristics of planet Rahu - Rahu

சதயம், சுவாதி, திருவாதிரை இம்மூனறு நட்சத்திரங்களும் இராகு பகவானுக்கு உரியது. இவருக்கு சொந்த வீடுகள் கிடையாது. உச்ச வீடு விருச்சிகம், நீச வீடு ரிஷபம். எந்த நட்ச்த்திரத்தில் அல்லது வீட்டில் அமர்கிறாரோ அந்த அந்த பலன்களை வழங்குவார். இராகுவை போல கொடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பலமொழி.

சனியை போல ராகுவும் பலன்களை தருவார். வெளிநாடு. வெளிபாஷை, வெளிமனிதர்கள், வேறு மதம் சார்ந்தவர்களோடு நட்பு-அதன் மூலம் நன்மை இவைகளை வழங்குவார் இராகு. 7-வது, 8-வது வீட்டில்,இராகு இருந்தால் சங்கடங்களை கொடுப்பார்.

இராகு சர்ப தோஷம், கால சர்ப தோஷம் முதலியன ஏற்படும். இராகு பலம் பெற்று ஓருவர் ஜாதகத்தில் இருந்தால்- ஸ்பெகுலேஷன்-லாட்டரி, பந்தயம் மூலமாக ஓரு மனிதரை கோடிஸ்வரர் ஆக்குவார்.

பலமிழந்த இராகு- ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், கள்ள வழியில் நடத்தல் ஆகியவைகளுக்கு காரணங்களாக அமையும். அரசாங்கத்தில் பதவி-புகழ் பெறுவதற்கு, எதிரிகள் அஞ்சி நடப்பதற்க்கு இராகு பலமே காரணம்.

இராகு லக்ன கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானமான 5,9 ல் இருந்தால் சிறப்பு பலன்கள் தருவார். 6,12 ல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.

கேது General Characteristics of planet Ketu - Ketu

இவருக்கு ஞானகாரகன் என்று பெயர். வேதாந்த அறிவு நுட்பங்களுக்கும், மோட்சத்திற்க்கும், எந்த ஓரு பிரச்சனையிலிருந்து விமோச்சனம் பெறுவதற்க்கும் காரகத்துவம் உள்ளது கேது.

எளிமை, கடுமை இரண்டுக்கும் உடையதும், உலக பந்தங்களில் இருந்து விடுபட வைப்பதும் கேதுவே. வியாதியில் இருந்து நிவாரணம் தருவதும், பகைவரை முறியடிக்க செய்வதும் கேது. கோபத்தில் நடைபெறும் தவறுகளுக்கும் கேதுவே காரணம். கேதுவைப்போல கெடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பழமொழி.
  

விபத்துகளையும். தாகாத சகவாசத்தையும் வழங்குவதும் கேதுவே.ரிஷபத்தில் நீசம், விருச்சிகத்தில் உச்சம். பஞ்ச பூதங்களில் ஜலம். கேது ஞானமாரக்கத்தில் ஆன்மீகத்தை வழங்குபவர்.

2016-02-11

பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் | Houses in Vedic Astrology

ஜாதகத்தில் வீடுகள் : Houses in Vedic Astrology




ஜாதகத்தில் முக்கியமானவை ராசி சக்கரம், நவாம்ச சக்கரம் மற்றும் பாவ சக்கரம் ஆகியனவாகும். இதில் ராசி சக்கரம் அடிபடையானது. இதை வைத்தே பெரும்பாலான பலன்கள் கணிக்கப்படுகின்றன. இதில் லக்கினம் முதல் வீடாக கருதப்படுகிறது. நவாம்சம் என்பது ராசியை ஒன்பதாக பிரிப்பதாகும். பாவ சக்கரம் என்பது துல்லியமான கணக்கீடாகும். இதில் ஒரு வீடு என்பது ஒரு முழு ராசி அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட ராசிகளில் ஒரு பாவம் வியாபித்திருக்கலாம்.

2016-02-10

பன்னிரண்டு ராசி பொது குணங்கள் | General Characteristics of 12 signs in Vedic astrology

General Characteristics of 12 Signs in Vedic Astrology : பன்னிரண்டு ராசி பொது குணங்கள்


மேஷ ராசியில் பிறந்தவர் களின் பலன்கள் ( General Characteristics of Mesha Rasi - Aries Sign ) : 
மேஷ ராசியில் ( Aries sign ) பிறந்தவர் களின் பலன்கள் அசுவினை-பரணி-கிருத்திகை 1ம் பாதம் இந்த நக்ஷத்திரங்களில் அதாவது, மேஷராசியில் பிறந்தவர்கள்-பூமி,காணி,நிலபுலங்கள் ( land) ,வீடு (house, apartment ),விவசாயத் ( agriculture ) தொழிலில் மேன்மை, ஆள்,அதிகாரங்களுடன் இருப்பார்கள். அரசாங்கத்தாரால்

2016-02-07

புதன் குணமும் கிரகங்களின் சேர்க்கை | Effects of Mercury conjunct with other Planets


‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். நவகிரகங்களில் புத பகவானின் அனுக்கிரகம் வாய்ப்பதும் அப்படித்தான்! ஒருவர் சீரும்சிறப்புமாக வாழவும், வித்யைகளில் சிறந்து விளங்கவும் புத பகவானின் திருவருள் தேவை. அவரு டைய அருள் பரிபூரணமாகக் கிடைப்பது எப்போது? எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்திருக்கும்போது புதன் என்னென்ன பலன்களைத் தருவார்? தெரிந்துகொள்வோமா!

புதன்  பிற கிரகங்களுடன் சேர்க்கை

( Mercury conjunction with other Planets )

சூரியனுடன் புதன் : Mercury  conjunct Sun 

தெய்விக அருளைப் பெற்றிருப்பார்கள். தனவந்தனாக இருப்பதுடன் புத்தியால் பெயரும் புகழும் பெற்றிருப்பர். அற்பமான எண்ணங்களும் மற்றவர்களைப் பற்றிப் புறம்பேசும் குணமும் கொண்டவர்களாக இருப்பர். புராணங்கள், இதிகாசங்கள்,

2016-02-06

ஜாதகத்தில் கேது அமர்ந்திருக்கும் பலன்கள்! | Ketu in various houses in Birth Chart

ஜாதகத்தில்  கேது அமர்ந்திருக்கும் பலன்கள்
Ketu in various houses in Birth Chart
ஜென்ம லக்கினத்திற்கு 12 பாவங்களில்  கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்


லக்கினத்தில்  கேது இருந்தால்: Ketu in Lagna | Ketu in 1st house
ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான்.
பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத
விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள்
சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும்

2016-02-05

ஜாதகத்தில் ராகு அமர்ந்திருக்கும் பலன்கள்! | Rahu in various houses in Birth Chart

ஜாதகத்தில்  ராகு அமர்ந்திருக்கும் பலன்கள்
Rahu in various houses in Birth Chart
ஜென்ம லக்கினத்திற்கு 12 பாவங்களில்  ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்


லக்கினத்தில்  ராகு இருந்தால்: Rahu in Lagna | Rahu in 1st house

 லக்கினத்தில் ராகு ஜாதகன் சோம்பல் உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும், வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும்

2016-02-04

ஜாதகத்தில் சனி அமர்ந்திருக்கும் பலன்கள்! | Saturn in various houses in Birth Chart

ஜாதகத்தில் சனி அமர்ந்திருக்கும் பலன்கள்
Saturn in various houses in Birth Chart

ஜென்ம லக்கினத்திற்கு 12 பாவங்களில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்

லக்கினத்தில் சனி  இருந்தால்: Saturn in Lagna | Saturn in 1st house

லக்கினத்தில் சனி இருப்பது பொதுவாக நல்லதல்ல. துரதிர்ஷ்டம் எனலாம்.
ஜாதகனின் உடல் நலத்திற்குக் கேடு. குழந்தைப் பருவத்தில் ஜாதகனுக்கு
உடல் நலமின்மை இருந்திருக்கும். சோம்பேறித்தனத்தை உண்டாக்கும்

2016-02-03

ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் பலன்கள்! | Venus in various houses in Birth Chart

ஜாதகத்தில் சுக்கிரன்  அமர்ந்திருக்கும் பலன்கள்

Venus in various houses in Birth Chart

ஜென்ம லக்கினத்திற்கு 12 பாவங்களில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்


லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால்: Venus in Lagna | Venus in 1st house


சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும். சுக்கிரன் பலம் இழந்தால் நல்லது அல்ல.

2016-02-02

ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் பலன்கள்! | Mars in various houses in Birth Chart

Effects of planets in different houses in astrology: 

ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் பலன்கள்!  Mars in various houses in Birth Chart


லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்: Mars in Lagna | Mars in 1st house

ஜாதகன் கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்!
உக்கிரமானவன். சிலருக்கு அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும்.
சிலருக்கு (ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் சரியாக இல்லாவிட்டால்)
குறைந்த ஆயுள்.
ஒரு வியாதி போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு
உடனே வரும்!
ஜாதகன் சலனபுத்திக் காரணாக இருப்பான். மூர்ககனாக இருப்பான்

இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: Mars in Second house | Mars in 2nd house

மற்றவர் பேச்ச கேட்கமாட்டாங்க.
குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்வியும் குறைந்த அளவே
இருக்கும். சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள். வாக்குவாதம்
செய்பவர்கள் (argumentative)
செவ்வாயின் இந்த அமைப்பு, கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல!
இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் அது செல்வத்திற்குக்
கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே வந்தாலும் தங்காது
அல்லது நிலைக்காது!

மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: Mars in Third house | Mars in 3rd house

ஜாதகன் பிடிவாதக்காரன். சாதனையாளன்.செல்வச்சூழல்களை
அனுபவிக்கக்கூடியவன். புகழ் பெறுவான். எல்லா வசதிகளும்
வந்து சேரும். தனித்தன்மை வாய்ந்தவன்.நீண்ட ஆயுளை
உடையவன்.
தர்ம, நியாயங்கள், நன் நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டுவான்.சகோதர தோசம் உள்ளவன்..

நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: Mars in Fourth house | Mars in 4th house

தாய் வழி தாய் நலம் பாதிக்கும்.
உறவுகள், வீடு வாசல், சொத்துக்கள், தாய்ப்பாசம், வாகனவசதி
போன்றவைகள் இல்லாத அல்லது கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக
ஜாதகன் இருப்பான்.
இது அத்தனையும் எனக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் இந்த
அமைப்பின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை பட்டுக் கொண்டிருக்கும்
ஜாதகன் பெண்களின்மேல் அதீதமான ஈர்ப்பு உள்ளவன். சிலர் மனப் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம்.

ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: Mars in Fifth house | Mars in 5th house

பெண்குழந்தைகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கை வசதிகள், சொத்துக்களில்
குறைபாடுகள் இருக்கும். அல்லது சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும்.
சிலர் மனம் வெறுக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். தர்ம, நியாயங்கள்,
நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு வாழ நேரிடும்.
சிலர் குறுகியமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர்
எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்ளுகின்ற குணத்தை உடையவர்களாக
இருப்பார்கள்.
பூர்விக சொத்து உண்டு.

ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: Mars in Sixth house | Mars in 6th house

நல்ல கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும்
ஜாதகன் ஊராக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, எதிரிகளை
துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான்.
மனதில் பயமே இருக்காது. சிலருக்கு அதீத பெண் ஆசை இருக்கும்
அதாவது ஆதீதமான காம உணர்வுகள் இருக்கும். எப்போதும் காம
சிந்தனைகள் இருக்கும்.
சிலர் தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள்

ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: Mars in Seventh house | Mars in 7th house

களத்திர தோசம்,
தர்ம நியாயம் இல்லாத காரியங்களைச் செய்பவான ஜாதகன் இருப்பான்.
சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் அது குறையும்.
சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சண்டைபிடிக்கும்,
அல்லது சண்டை போட்டு சட்டையைப் பிடிக்கும் மனப்பான்மை இருக்கும்
அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும். மனையாளும் அதனால்
பாதிக்கப்படுவாள்.

எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: Mars in Eighth house | Mars in 8th house

மாங்கல்ய தோசம்.
உடலும், உள்ளமும் நலமாக இருக்காது. சொத்து சேராது. சுகம்
எட்டிபார்க்காது.
சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும். ஜாதகத்தில் வேறு அம்சங்கள்
நன்றாக இல்லாவிட்டால் ஜாதகன் இறந்து விடுவான்.
தர்ம, நியாயங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டான்..

ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:  Mars in Ninth house | Mars in 9th house

தந்தையோடு நல்ல உறவு இருக்காது. தந்தை மேல் அன்பு பாசம்
இருக்காது. கடுமையான ஆள்
ஜாதகன் கண்களுக்குப் புலப்படாத கலைகளில் ஆர்வம் உள்ளவனாக
இருப்பான். அதில் தேர்ச்சியும் பெறுவான்.வெளிநாடு செல்வான்.

பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: Mars in Tenth house | Mars in 10th house

செவ்வாய் நமக்கு நன்மைகளை அள்ளித் தரும் இடம்.
ஜாதகன் ராஜ அந்தஸ்துடன் இருப்பான். வெற்றியாளன்
ஆற்றல் உடையவன்.ஆர்வம் உடையவன்.
மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ் எல்லாம் கிடைக்கும்

பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: Mars in Eleventh house | Mars in 11th house

மகான்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ், வளம் எல்லாம் இருக்கும்
ஆண்மை உணர்வு அதிகமாக இருக்கும்
மன உறுதி இருக்கும்.
நிறைய நண்பர்கள், கூட்டாளிகள் இருப்பார்கள். ஜாதகன் உண்மையிலேயே
தனித்தன்மை வாய்ந்தவனாக இருப்பான்.
ஜாதகன் எதையும் தெளிவாகப் பேசக்கூடியவனாக இருப்பான்

பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: Mars in Twelfth house | Mars in 12th house

கண்களில் குறைபாடுகள் ஏற்படும். பயப்பட வேண்டாம். கண் நோய்கள்
ஏற்படலாம். ஜாதகன்
சோம்பல் உடையவன். சோம்பல்தான் அவனுடைய முதல் மனைவி
பொருளாதார இழப்புக்கள் இருக்கும். பல சொத்துக்களைத் தொலைப்பான்
துன்பங்கள், துயரங்கள் என்று எல்லாமே ஜாதகனுக்கு எதிராகக் கொடிபிடிக்கும்
சிலர் படு கருமியாக இருப்பார்கள்.

ஜம்பு மகரிஷி வாக்கிய ஜோதிட நிலையம்

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP