-->
Showing posts with label Mesha Rasi. Show all posts
Showing posts with label Mesha Rasi. Show all posts

2017-12-12

சனி பெயர்ச்சி பலன்கள் மேஷ ராசி 2017

சனி பெயர்ச்சி பலன்கள் மேஷ ராசி 2017 - 2020

 Sani Peyarchi Palangal Mesha Rasi

திருக்கணிதப்படி :

கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்
தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி தனுசுக்கு வந்து விட்டார்.

வாக்கியப்படி :

வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்
இதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து வைத்திய செலவு, தொழில் பிரச்சினை, துக்க செய்திகள், விபத்து, கண்டம், அறுவை சிகிச்சை, நெருங்கிய உறவினர் மரண செய்தி, தன நஷ்டம், வம்பு வழக்கு, களவு, மனைவி மக்கள் பகை இப்படி பல வகையில் பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள்
இனி இந்த பிரச்சினைகள் எல்லாம் மறையும் காலம் சனிபகாவன் அடுத்து உங்கள் பாக்கிய ஸ்தானம் எனப்படும் ஒன்பாதமிடத்துக்கு பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 11, 3, 6 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது
அட்டம சனியில் பட்ட அவஸ்தைகள் அனைத்தும் குறையும் காலம். வருமானம் தேவைக்கேற்ப வந்து உதவும். தெய்வீக வழிபாடு,தானதருமங்கள், ஆன்மீக முயற்சிகளுக்கு உகந்த காலம், தூர தேச பயணம் உண்டாகும், ஒப்பந்த தொழிலில் மேன்மை தரும், லாபங்கள் உண்டாக்கும் காலம், திருமணம் மற்றும் சுப காரியம் தடை நீங்கி கூடிவரும் காலம், திருப்பணி , யாத்திரை செல்ல வாய்ப்பு உண்டாகும், தகப்பானாருக்கும், பிறந்த விட்டீர்க்கும் சில தொல்லைகள் உண்டாகும், பூர்வீகத்தில் சொத்து பகை ஏற்படும்

உடல் ஆரோக்கியம் :

இது வரை கடந்த இரண்டரை ஆண்டில் சந்திந்து வந்த உடல்நல பிரச்சினைகள் மன நல பிரச்சினைகள் சரியாகும் முழுவதும் உடல்நலம் தேறும். அறுவை சிகிச்சைகள் பலன் தரும், நீண்டகாலம் மருத்துவமனையில் தங்கி இருந்தவர்கள் வீடு திருப்பும் காலம், நீண்ட நாள் நோய் பிரச்சினைகளும் தீர்வு கிட்டும், தூக்கமின்னைமையால் அவதி பட்டவர்கள் நல்ல உறக்கம் ஏற்படும், மர்ம ஸ்தானத்தில் இருந்த நோய்கள் நீங்கும்

உத்தியோகம் / வருமானம் :

புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், வேலை மாற்றம் சம்பள உயர்வுடன் அமையும், வேலை செய்யுமிடத்தில் சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிட்டும், கௌரவ பதவிகள் வந்து சேரும், பாக்கி சம்பளம் வந்து சேரும், புதிய பொறுப்புகள் வந்து சேரும் காலம், உயர் அதிகாரி / முதலாளி / கீழ் பணியாளர்கள் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும், புத்தி யுக்தி கையாண்டு பணியில் வெற்றி பெற்று நல்ல நிலை, கவுரவம், பணமுடிப்பு, ஊக்க தொகை கிடைக்கும். பதவி மூப்பு அடிப்படையில் நல்ல நிலையில் இடமாற்றம் உண்டாகும். சொந்த ஊருக்கு இடமாற்றம் கிட்டும், அரசு வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்து ப்ளாக் மார்க் எல்லாம் மறையும் காலம் ஆதரவும் கிட்டும் பணி பதவி உயர்வும் கிட்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி செய்தவர்கள் நிரந்திர பணியாக மாறும் காலம் மொத்தத்தில் சுபமான பலன் தரும் காலம்

தொழில் / வியாபாரம் / வருமானம் :

இதுவரை தொழில்/வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை/ முடக்கம் மாறும் வேகம் பெறும், வருமானங்கள் உயரும் காலம், புதிய வழிகளில் வருமானம், தொழில் விரிவாக்கம் மூலம் நல்ல வருமானம் உயரும் காலம், பாக்கிகள் வசூல் ஆகும், கடன் அடையும் காலம், புதிய தொழில் நன்மை தரும், தொழில் / வியாபாரம் மாற்றம் செய்ய நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கும் இது உகந்த காலமாக அமையும் நல்ல பல மாற்றங்கள் சந்தித்து மகிழ்ச்சியாக இருக்கும் காலமாக அமையும்

பெண்கள் :

இளம்பெண்களுக்கு தடைப்பட்டு கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும் விவாகம் நடைபெறும், விவாகரத்து பிரச்சினைகள் தீரும், மர்ம ஸ்தானத்தில் இருத்த நோய்கள் மருத்துவம் மூலம் கட்டுக்குள் வரும் தீர்வும் கிட்டும் இல்லற உறவும் செழிக்கும், புதிய வேலை / தொழில் வாய்ப்புகள் கிட்டும், கடன் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும், புதிய தாலி மாற்றி கொள்ளும் வாய்ப்புகள் வரும், பிரிந்திருந்த கணவன் ஒன்று சேரும் காலம், பிரிவினைகள் நீங்கி சுகம் ஏற்படும் காலம்

அரசியல்வாதிகள் :

அருமையான கால கட்டம், புதிய பதவி கிட்டும், புதிய கட்சி பொறுப்புகள் வந்து சேரும், தலைவரின் / மேல் மட்ட தலைவரின் அன்பு ஆதரவுகள் கிடைக்கும், பணவரவு / பண புழக்கம் அதிகரிக்கும். நண்மையான காலமாக இருக்கும் பயன் படுத்தி கொள்வது சிறப்பை தரும்

விவசாயிகள் :

விவாசாயம் செழிக்கும் காலம், வாங்கிய கடன் முழவதும் அடையும், பணபயிரில் லாபம் அதிகம் கிட்டும், பருப்பு, பயறு வகை பயிர்கள் செழிக்கும்,
உயர்ரக நெல் வகை விளைச்சல் அதிகரிக்கும் நல்ல விலைக்கு விற்கும் லாபமும் அதிகாரிக்கும், மஞ்சள் உற்பத்தி அதிகம் இருக்கும்

மாணவ மாணவியர்கள் :

இதுவரை படிப்பில் இருந்து வந்த சுணக்கம் மாறும் படிப்பில் ஆர்வம் உண்டாகும் வரும் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடையும் காலமாக இருக்கும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் காலம் எனவே கவனமுடன் படித்தால் நல்ல உயர்ந்த மதிப்பெண்கள் பெரும் காலம். உயர்கல்வி படிக்க வாய்ப்புகள் கிட்டும் நல்ல மதிப்பெண்ணும் கிட்டும்

கலைஞர்கள் :

இதுவரை உங்கள் துறையில் நஷ்டத்தை சந்திந்து வந்து இருப்பீர்கள் சிலருக்கு வாய்ப்பே கிடைக்காமல் அலைச்சல், மன உளைச்சல் உண்டாகியிருக்கும் இனி அந்த நிலைமாறும். எல்லாம் நல்ல படியாக நண்மையாக நடைபெறும் காலம்
மேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.
எனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுப்பது சிறப்பை தரும்
நன்றி
வாழ்க வளநலமுடன்
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்
AT 97901 26877
Jio 87787 97194

2016-04-15

தமிழ் புத்தாண்டு பலன்கள்- துர்முகி வருஷம் 2016-2017 மேஷ ராசி

தமிழ் புத்தாண்டு பலன்கள்- துர்முகி வருஷம் 2016-2017 மேஷ ராசி
புத்தாண்டு பலன்கள்- துர்முகி வருஷம் 2016-2017 மேஷ ராசி
இந்த வருடம் குரு பகவான்  ஆகஸ்டு மாதம் 11ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் பிரவேசிக்கிறார். இது நல்ல சஞ்சாரமல்ல.  ராகு உங்கள் ராசிக்கு  5-மிடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 11ம் இடத்திலும் சஞ்சரிக்கிறாரக்ள். மேலும், இந்த வருடம்  சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் பிரவேசிக்கிறார். இதனை அஷ்டமச் சனிஎன்று கூறுவார்கள். அஷ்டமச் சனி, ஏழரைச் சனியைவிட அதிகம் தொல்லை தரும்.  இப்போது பலன்களைப் பர்க்கலாம்.
சனியின் 8-மிட சஞ்சரம் அஷ்டமச் சனிஎனப்படுகிறது.   தற்போது நீங்கள் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. மாறாக தொல்லைகளையும் அவமானங்களையும் சந்திக்க நேரும். உடல் நலம் கெடும். தீராத வயிற்று நோய் படுத்தும். பண நஷ்டம் உண்டாகும். தொட்டதெல்லாம் தோல்வி மயமே. நிலையற்ற வாழ்க்கை இருக்கும். கால்நடைகளுக்கு அழிவுண்டாகும். பலவையான நோய்கள் உண்டாகும். சந்ததிக்கு அரிஷ்டம் ஏற்படும். நண்பர்களுக்கும் தொல்லை உண்டாகும்.
அரசாங்கத்தால் தொல்லைகளும் சிறைத் தண்டனையும் ஏற்படலாம். மாரக தசை நடப்பவர்களுக்கு, உயிருக்கு பயம் உண்டாகும். மான கௌரவப் பிரச்சினைகள் உண்டாகும். மனைவியுடன் பகை உண்டாகும். பலவகை தடங்கல்கள், தண்டச் செலவுகள், வீண் செலவுகள், குற்றம் முதலியவற்றிற்கு அபராதத் தொகை செலுத்துதல் போன்றவைகளில் வீண் செலவு உண்டாகி, பணம் கரையும். வேண்டாத, வசதியற்ற ஊருக்கு மாற்றலாகி, அவதிப்படுவர். கண்நோய்கள் ஏறப்டும். இது சமயம் கூசாமல் பொய் பேசுவர். மீள்வதற்கு வழியில்லாமல் , கீழ்த்தரமான செயல்களிலும் இறங்குவர். வறுமை மிகுதியால், பட்டினி கிடக்கவேண்டி வரும். மனதை ஏதாவது துன்பமோ கவலையோ வாட்டிக்கொண்டே இருக்கும். ஒரு பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். யாருக்காவது அடிமையாக இருக்கவேண்டியது வரும். கடுமையான உழைப்பின் மூலம்தான் வயிறு நிறையும். ஆபத்துகள், விபத்துகள் ஏற்படும். வேளைக்கு சாப்பிட முடியாமலோ அன்றி உணவில்லாமலோ, அதிகம் பசியும் இருக்கும். மனக் கவலையும் இருந்துகொண்டே இருக்கும். 8ல் சனி அஷ்டமச் சனி எனப்படும். ஏழரைச் சனிக்கு நிகரான கஷ்டம் உண்டாகும். அஷ்டமச் சனியின்போது, இவர் பிள்ளைகள்கூட இவர் பேச்சைக் கேட்க மாட்டார்கள். இவர் வார்த்தைக்கு யாரிடத்திலும் மதிப்பிருக்காது என்று கொள்ளவேண்டும்.
பெண்களுக்கு குடும்பச் சுமை அதிகரிக்கும். வீட்டிற்கு வந்து செல்வோரின் சில தேவையற்ற விமர்சனங்களுக்கு நீங்கள் ஆளாக நேரும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும். அனுசரித்து நடந்துகொண்டால், குடும்பத்தில் குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்படுவதைத் தடுக்க முடியும். கிரக நிலை சரியில்லாததால், யார் எனன் சொன்னாலும் காதில் வாங்காமல், செய்யும் செயலில் கவனம் வைப்பது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு உங்களின் பொறுமையை சோதிக்கும் வண்ணமாக உங்களின் கீழ்ப்பட்டவரக்ளின் செயல்கள் தலை விரித்தாடும்.அதை நீங்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். மேலும் உனக்ளிடம் நெருங்கிப் பழகும் உறவினர்கள் மற்றும் ந்ண்பர்கள் உங்களுக்கு சில துரோகச் செயல்களைப் புரிவார்கள். அதன் காரணமாக சில அலைச்சல்களையும் அவமதிப்புகளையும் நீங்கள் தாங்க வேண்டியிருக்கும். வெகு நாட்களாகக் கட்டிக் காத்துவந்த மதிப்பு மரியாதையை வெகு சீக்கிரத்தில் இழக்க நேரிடும்.
மாணவர்களுக்கு வீட்டுச் சூழலாலும், சில தேவையற்ற கற்பனைகளாலும், மனதை அலையவிட்டு கல்வியில் போதிய ஆர்வத்தைக் குறைத்துக்கொள்ள நேரும். பெற்றோர்களும் உறவினர்களும் மற்றும் உங்கள் பள்ளி ஆசிரியர்களும் உங்கள் நிலையைக் குறித்து வருத்தம்கொள்ளூம் விதமாக உங்கள் நிலையானது மாறலாம். சில சமயங்களில் மன பாதிப்பால், எடுப்பார் கைப்பிள்ளையாக , யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பி செயல்படுவீர்கள்.உங்களின் சொந்த புத்தியைக்கூட சிலசமயம் அடகு வைத்துவிடுவீர்கள். எனவே கருத்துன்றிப் படிக்கவேண்டியது அவசியம்.
குருவின் 7-மிட சஞ்சாரத்தினால் ஓரளவுக்கு நற்பலன்கள் ஏறப்ட்டன. இவை இந்த வருடம் ஆகஸ்டு மடஹ்ம் 11-ம் தேதியோடு முடிவடைந்து குருவின் சாதகமற்ற சஞ்சரமான 6-மிட சஞ்சரம் ஆரம்பமகிறது.  . சனி, மற்றும் குருவின் சஞ்சாரங்கள் உங்களுக்கு  உகந்தது அல்ல. குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாகி, உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள்  என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும்.  திருமணத் தடை ஏற்படும். உயர் கல்வியில் சேர இருந்தவர்களுக்கு, பண முடை காரணமாகவோ அல்லது, வேறு குடும்பக் காரணங்களுக்காகவோ  கல்வியில் தடை ஏற்படும். ஆரோக்கியம் கெடும். மருத்துவ மனையில் சேர்ந்து வைத்தியம் செய்துகொள்ள நேரும்.  வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகி வருமானம் குறைய ஆரம்பிக்கும். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போகும். பூர்வீகச் சொத்தில் இழுபறி ஏற்படும். பிளைகளின் வேலைவாய்ப்பு, கல்வி முதலியவற்றில் தடை ஏற்படும். இப்படிப்பட்ட நேரத்தில் சனி, ராகுவின் சாதகமற்ற சஞ்சாரங்களும் சேர்ந்து கொள்கின்றன.
உங்கள் ராசிக்கு 11-ம் இடத்துக்கு கேதுவும், 5-ம் இடத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
ராகு பகவான் தனது 5-மிட சஞ்சாரத்தின் மூலம் பலவித கற்பனையான எண்ணங்களைத் தோற்றுவித்துக்கொண்டே இருப்பார். எதையாவது சாதிக்கவேண்டும் என்ற பரபரப்பு உங்களிடம் இருக்கும். செயல்பாட்டுக்கு வரமுடியாத எண்ண அலைகள் தொடர்ந்து உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கும். நினைத்தது அனைத்தையுமே அடைந்துவிடவேண்டுமென்ற ஆவல் உங்கள் மனதில் அதிகரிக்கும். அதனால் எப்போதும் புதிய சிந்தனைகளும் புதிய வழிமுறைகளும் தோன்றும் வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய வாகனங்கள் புதிய இயந்திரங்கள் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. புதிய நூதனமான தொழில் வாய்ப்புகளும் உருவாகும்.
இந்தக் காலத்தில், உங்களைவிட வயதில் சிறியவர்களானாலும் சரி, வயதில் பெரியவர்களானாலும் சரி, அவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவேண்டும். அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகக்கூடும். சிலருக்கு எதிர்பாராதவிதமாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நூதனமான தொழில் வாய்ப்புகள் ,வியாபாரம் அமையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் ஆகக்கூடும். பணிமாற்றம் ஏற்பட்டு புதிய பொறுப்புகளை ஏற்கும்படியும் இருக்கும். பிளைகளின் போக்கு கவலையளிக்கும் அவர்களின் முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும். உங்களை எதிர்ப்பார்கள். உங்கள் புத்திமதி எதுவும் எடுபடாமல் போகும்.
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை ராகு பார்க்கிறார். இந்தப் பார்வை உங்களுக்கு மன தைரியத்தைக் கொடுக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். சகோதரர்களுக்கு பாதிப்பு உண்டாகும். ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படும். தொழில் கூட்டாளியுடன் கருத்து வேறுபாடு தோன்றி தொழில் பாதிப்புகளை ஏற்படுத்தும். நெருங்கிய நண்பர்கள் உங்களைவிட்டுப் பிரிவார்கள். உறவினர்களுடனும் கருத்து வேறுபாடு ஏற்படும். வீணான மனக்கசப்பும் அலைச்சலும் ஏற்படும்.
திடீர் வருமானம் கிடைத்து நல்ல பொருட்சேர்க்கை ஏற்படும். போட்டி பந்தயங்கள் வெற்றியளிக்கும். கோர்ட் கேஸ்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். கணவன் மனைவி உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. மனக்கவலையும் அலைச்சலும் தவிர்க்க முடியாது.
கேது பகவான் உங்கள் ஜென்ம ராசியையும், உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தையும்,5-ம் இடத்தையும் பார்ப்பதால், உங்கள் செல்வாக்கு மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகம் ஆலயத் திருப்பணி அறக்கட்டளை தர்மகர்த்தா போன்ற பொறுப்பான பதவிகளும் கிடைக்கும். உங்கள் கௌரவம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்பும் அவர்களது ஆசிகளும் கிடைக்கும். பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். மூத்த சகோதரர்களால் நன்மை கிடைக்கும்.
எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளம் கூடும். சிலர் நூதனமான வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். காதில் விழும் விஷயங்கள் மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கும்.
சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நற்பெயரும் ஏறப்டும். சிலருக்கு பதவி உயர்வு ,வேண்டிய இட பணிமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் அரசுத் துறையில் உள்ளவர்களின் உதவியும் கிடைக்கும். உங்கள் தாய்க்கு நேரம் சரியில்லை.அவருடைய உடல்நலம் பாதிக்கப்படும். கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு வரும். வம்பு வழக்குகள், கோர்ட் கேஸ்கள் ஒரு முடிவுக்கு வந்து ஒருவழியாக முடிந்து போகும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள். அந்நிய தேசத்திலிருந்து வருமானம் கிடைக்கும். இதுவரை குடத்துக்குள் விளக்காக இருந்துவந்த உங்கள் பெருமை இப்போது குன்றின் மேலிட்ட விளக்காகும்.சிலருக்கு வண்டி வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். தந்தை மூலம் எதிர்பாராத அனுகூலம் கிடைக்கும்.
கேதுவின் 11-ம் இடத்து சஞ்சாரம் பெயரையும் புகழையும் தேடிக் கொடுக்கும். தொழில் மேன்மையடையும். மருத்துவச் செலவு குறையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொட்டதெல்லாம் பொன்னாகும். மேலதிகாரிகள், பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அரசு சம்பந்தமான நன்மைகள் கிடைக்கும். குடும்பத்துக்கு புதிய வரவாக ஒரு குழந்தை பிறக்கும். பயணங்கள் அதிகமாகும். பயணங்களால் நன்மை கிடைக்கும். சொத்து, நகை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சிநிறைந்ததாக இருக்கும். உற்றார் உறவினர் உதவி செய்வார்கள்.
குருவின் சாதகமற்ற சஞ்சாரத்தால், இந்த சமயத்தில், வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை நம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும்  உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டயம் ஏற்படும். உடல் நல்ம் குறையும் முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள் தங்கள் கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள் விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயற்சி மேற்கொண்டு வீட்டில் ஒரு  திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் ,காரணமாக  உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளி ஏற்படும். அவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே பெரிய சிரமம் உண்டாகும். கொஞ்சம் வருமானம் வந்தாலும் பின்னாலேயே செலவும் வந்து நிற்கும். அவசிய செலவுகளை மட்டும் பிரித்துக்கொள்ளாவிட்டால், கடன்படவேண்டியிருக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். கவனம் கல்வியில் செல்லாது. நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையாகப் போராடவேண்டியிருக்கும். குடும்பத்தில் வீண் சண்டை சச்சரவுகள், குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தாருடன் நீங்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வம்பை விலைக்கு வாங்குவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் நியாயமான தேவைகளைக்கூட பூர்த்திசெய்யமுடியாமல் போகும். அதனால், குடும்பத்தாரின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படும். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு தனிக்குடித்தனம் சென்றுவிடுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போவதால், உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் பாதிகக்ப்படும். சிலருக்கு கண்களில் பாதிப்பு ஏற்படும். மனதில் விரக்தி ஏற்படும். சிலர் மன அமைதிக்காக வேதாந்த விஷயங்களில் மூழ்குவார்கள்.
ன் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.
நிகழும் திசாபுத்திப்படி அவரவர்க்கு பலன்கள் மாறுபடும் என்பதால், சுய ஜாதகத்தையும் பரிசீலித்துக்கொள்ளவும்.
பரிகாரம்:
ஆண்டு பிற்பகுதியில் குரு  6-ம் இடத்தில் சஞ்சரிப்பது ந்ல்லதல்ல. . தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை மாலை கொண்டும் வழிபடவும். சனியின் சஞ்சாரம் சரியில்லையாதலால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி , வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும், உதவி செய்யவும். கருப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ஹனுமான் சலீஸாவை பாராயணம் செய்யவும். ராகுவின்  சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும்.

2016-01-08

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - மேஷ ராசி | 2016 Rahu Ketu Transit Mesha Rasi | Rahu Ketu peyarchi 2016 Mesha Rasi

2016 - ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்: மேஷ ராசி
(Effect of Rahu transit in Leo)
வருகிற ஜனவரி  மாதம் 8-ம் தேதியன்று ராகு பகவான் சிம்ம  ராசிக்கும், கேது பகவான் கும்ப  ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதாவது, உங்கள் ராசிக்கு 11-ம் இடத்துக்கு கேதுவும், 5-ம் இடத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
ராகு பகவான் தனது 5-மிட சஞ்சாரத்தின் மூலம் பலவித கற்பனையான எண்ணங்களைத் தோற்றுவித்துக்கொண்டே இருப்பார். எதையாவது சாதிக்கவேண்டும் என்ற பரபரப்பு உங்களிடம் இருக்கும். செயல்பாட்டுக்கு வரமுடியாத எண்ண அலைகள் தொடர்ந்து உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கும். நினைத்தது அனைத்தையுமே அடைந்துவிடவேண்டுமென்ற ஆவல் உங்கள் மனதில் அதிகரிக்கும். அதனால் எப்போதும் புதிய சிந்தனைகளும் புதிய வழிமுறைகளும் தோன்றும் வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய வாகனங்கள் புதிய இயந்திரங்கள் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. புதிய நூதனமான தொழில் வாய்ப்புகளும் உருவாகும்.
இந்தக் காலத்தில், உங்களைவிட வயதில் சிறியவர்களானாலும் சரி, வயதில் பெரியவர்களானாலும் சரி, அவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவேண்டும். அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகக்கூடும். சிலருக்கு எதிர்பாராதவிதமாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நூதனமான தொழில் வாய்ப்புகள் ,வியாபாரம் அமையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் ஆகக்கூடும். பணிமாற்றம் ஏற்பட்டு புதிய பொறுப்புகளை ஏற்கும்படியும் இருக்கும். பிளைகளின் போக்கு கவலையளிக்கும் அவர்களின் முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும். உங்களை எதிர்ப்பார்கள். உங்கள் புத்திமதி எதுவும் எடுபடாமல் போகும்.
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை ராகு பார்க்கிறார். இந்தப் பார்வை உங்களுக்கு மன தைரியத்தைக் கொடுக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். சகோதரர்களுக்கு பாதிப்பு உண்டாகும். ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படும். தொழில் கூட்டாளியுடன் கருத்து வேறுபாடு தோன்றி தொழில் பாதிப்புகளை ஏற்படுத்தும். நெருங்கிய நண்பர்கள் உங்களைவிட்டுப் பிரிவார்கள். உறவினர்களுடனும் கருத்து வேறுபாடு ஏற்படும். வீணான மனக்கசப்பும் அலைச்சலும் ஏற்படும்.
திடீர் வருமானம் கிடைத்து நல்ல பொருட்சேர்க்கை ஏற்படும். போட்டி பந்தயங்கள் வெற்றியளிக்கும். கோர்ட் கேஸ்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். கணவன் மனைவி உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. மனக்கவலையும் அலைச்சலும் தவிர்க்க முடியாது.
கேது பகவான் உங்கள் ஜென்ம ராசியையும், உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தையும்,5-ம் இடத்தையும் பார்ப்பதால், உங்கள் செல்வாக்கு மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகம் ஆலயத் திருப்பணி அறக்கட்டளை தர்மகர்த்தா போன்ற பொறுப்பான பதவிகளும் கிடைக்கும். உங்கள் கௌரவம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்பும் அவர்களது ஆசிகளும் கிடைக்கும். பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். மூத்த சகோதரர்களால் நன்மை கிடைக்கும்.
எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளம் கூடும். சிலர் நூதனமான வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். காதில் விழும் விஷயங்கள் மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கும்.
சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நற்பெயரும் ஏறப்டும். சிலருக்கு பதவி உயர்வு ,வேண்டிய இட பணிமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் அரசுத் துறையில் உள்ளவர்களின் உதவியும் கிடைக்கும். உங்கள் தாய்க்கு நேரம் சரியில்லை.அவருடைய உடல்நலம் பாதிக்கப்படும். கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு வரும். வம்பு வழக்குகள், கோர்ட் கேஸ்கள் ஒரு முடிவுக்கு வந்து ஒருவழியாக முடிந்து போகும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள். அந்நிய தேசத்திலிருந்து வருமானம் கிடைக்கும். இதுவரை குடத்துக்குள் விளக்காக இருந்துவந்த உங்கள் பெருமை இப்போது குன்றின் மேலிட்ட விளக்காகும்.சிலருக்கு வண்டி வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். தந்தை மூலம் எதிர்பாராத அனுகூலம் கிடைக்கும்.
கேதுவின் 11-ம் இடத்து சஞ்சாரம் பெயரையும் புகழையும் தேடிக் கொடுக்கும். தொழில் மேன்மையடையும். மருத்துவச் செலவு குறையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொட்டதெல்லாம் பொன்னாகும். மேலதிகாரிகள், பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அரசு சம்பந்தமான நன்மைகள் கிடைக்கும். குடும்பத்துக்கு புதிய வரவாக ஒரு குழந்தை பிறக்கும். பயணங்கள் அதிகமாகும். பயணங்களால் நன்மை கிடைக்கும். சொத்து, நகை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சிநிறைந்ததாக இருக்கும். உற்றார் உறவினர் உதவி செய்வார்கள்.

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 - மேஷ ராசி 

2015-12-31

புத்தாண்டு பலன்- 2016 - மேஷம் ராசி | 2016 Rasi palan Mesha Rasi | New Year Palangal 2016 Mesha Rasi

புத்தாண்டு பலன் - 2016 | மேஷம் ராசி 2016 

மேஷ ராசி 2016
                       இந்த் வருடம் குரு  2016 ஆக்ஸ்டு  மாதம் வரை குரு 5-மிடத்திலும், அதன்பிறகு 6-மிடத்துக்கும் பிரவேசிக்கிறார். சனி அஷ்டம சனியாக சஞ்சரிக்கிறார். ராகு 5-மிடத்திலும், கேது 11-மிடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்
இந்த வருடம் சனி பகவான் உங்கள் ராசிக்கு  8-ம் இடத்தில் பிரவேசிக்கிறார். இதனை ‘அஷ்டமச் சனி’ என்று கூறுவார்கள். அஷ்டமச் சனி, ஏழரைச் சனியைவிட அதிகம் தொல்லை தரும். தொல்லைகளையும் அவமானங்களையும் சந்திக்க நேரும்.
உடல் நலம் கெடும். தீராத வயிற்று நோய் படுத்தும்.   பண நஷ்டம் உண்டாகும். தொட்டதெல்லாம் தோல்வி மயமே. நிலையற்ற வாழ்க்கை இருக்கும். கால்நடைகளுக்கு அழிவுண்டாகும். பலவையான நோய்கள் உண்டாகும். சந்ததிக்கு அரிஷ்டம் ஏற்படும். நண்பர்களுக்கும் தொல்லை உண்டாகும். அரசாங்கத்தால் தொல்லைகளும் சிறைத் தண்டனையும் ஏற்படலாம். மாரக தசை நடப்பவர்களுக்கு, உயிருக்கு பயம் உண்டாகும். மான கௌரவப் பிரச்சினைகள் உண்டாகும். மனைவியுடன் பகை உண்டாகும். பலவகை தடங்கல்கள், தண்டச் செலவுகள், வீண் செலவுகள், குற்றம் முதலியவற்றிற்கு அ பராதத் தொகை செலுத்துதல் போன்றவைகளில் வீண் செலவு உண்டாகி, பணம் கரையும். வேண்டாத, வசதியற்ற ஊருக்கு மாற்றலாகி, அவதிப்படுவர். கண்நோய்கள் ஏறப்டும். இது சமயம் கூசாமல் பொய் பேசுவர். மீள்வதற்கு வழியில்லாமல் , கீழ்த்தரமான செயல்களிலும் இறங்குவர். வறுமை மிகுதியால், பட்டினி கிடக்கவேண்டி வரும். மனதை ஏதாவது துன்பமோ கவலையோ வாட்டிக்கொண்டே இருக்கும். ஒரு பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். யாருக்காவது அடிமையாக இருக்கவேண்டியது வரும். கடுமையான உழைப்பின் மூலம்தான் வயிறு நிறையும். ஆபத்துகள், விபத்துகள் ஏற்படும்.  வேளைக்கு சாப்பிட முடியாமலோ அன்றி உணவில்லாமலோ, அதிகம் பசியும் இருக்கும். மனக் கவலையும் இருந்துகொண்டே இருக்கும். 8ல் சனி அஷ்டமச் சனி எனப்படும். ஏழரைச் சனிக்கு நிகரான கஷ்டம் உண்டாகும். அஷ்டமச் சனியின்போது, இவர் பிள்ளைகள்கூட இவர் பேச்சைக் கேட்க மாட்டார்கள். இவர் வார்த்தைக்கு யாரிடத்திலும் மதிப்பிருக்காது என்று கொள்ளவேண்டும். பெண்களுக்கு குடும்பச் சுமை அதிகரிக்கும். வீட்டிற்கு வந்து செல்வோரின் சில தேவையற்ற விமர்சனங்களுக்கு நீங்கள் ஆளாக நேரும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும். அனுசரித்து நடந்துகொண்டால், குடும்பத்தில் குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்படுவதைத் தடுக்க முடியும். கிரக நிலை சரியில்லாததால், யார் எனன் சொன்னாலும் காதில் வாங்காமல், செய்யும் செயலில் கவனம் வைப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு உங்களின் பொறுமையை சோதிக்கும் வண்ணமாக உங்களின் கீழ்ப்பட்டவரக்ளின் செயல்கள் தலை விரித்தாடும்.அதை நீங்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். மேலும் உனக்ளிடம் நெருங்கிப் பழகும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு சில துரோகச் செயல்களைப் புரிவார்கள். அதன் காரணமாக சில அலைச்சல்களையும் அவமதிப்புகளையும் நீங்கள் தாங்க வேண்டியிருக்கும். வெகு நாட்களாகக் கட்டிக் காத்துவந்த மதிப்பு மரியாதையை வெகு சீக்கிரத்தில் இழக்க நேரிடும்.  மாணவர்கள் வீட்டுச் சூழலாலும், சில தேவையற்ற கற்பனைகளாலும், மனதை அலையவிட்டு கல்வியில் போதிய ஆர்வத்தைக் குறைத்துக்கொள்ள நேரும். பெற்றோர்களும் உறவினர்களும் மற்றும் உங்கள் பள்ளி ஆசிரியர்களும் உங்கள் நிலையைக் குறித்து வருத்தம்கொள்ளூம் விதமாக உங்கள் நிலையானது மாறலாம். சில சமயங்களில் மன பாதிப்பால், எடுப்பார் கைப்பிள்ளையாக , யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பி செயல்படுவீர்கள்.உங்களின் சொந்த புத்தியைக்கூட சிலசமயம் அடகு வைத்துவிடுவீர்கள். எனவே கருத்துன்றிப் படிகக்வேண்டியது அவசியம்.
இந்த வ்ருடம் ராகு பகவான் சிம்மராசிக்கும், கேது பகவான் கும்ப  ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதாவது, உங்கள் ராசிக்கு 11-ம் இடத்துக்கு கேதுவும், 5-ம் இடத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ராகு பகவான் தனது 5-மிட சஞ்சாரத்தின் மூலம் பலவித கற்பனையான எண்ணங்களைத் தோற்றுவித்துக்கொண்டே இருப்பார். எதையாவது சாதிக்கவேண்டும் என்ற பரபரப்பு உங்களிடம் இருக்கும். செயல்பாட்டுக்கு வரமுடியாத எண்ண அலைகள் தொடர்ந்து உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கும். நினைத்தது அனைத்தையுமே அடைந்துவிடவேண்டுமென்ற ஆவல் உங்கள் மனதில் அதிகரிக்கும். அதனால் எப்போதும் புதிய சிந்தனைகளும் புதிய வழிமுறைகளும் தோன்றும் வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய வாகனங்கள் புதிய இயந்திரங்கள் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. புதிய நூதனமான தொழில் வாய்ப்புகளும் உருவாகும்.

இந்தக் காலத்தில், உங்களைவிட வயதில் சிறியவர்களானாலும் சரி, வயதில் பெரியவர்களானாலும் சரி, அவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவேண்டும். அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகக்கூடும். சிலருக்கு எதிர்பாராதவிதமாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நூதனமான தொழில் வாய்ப்புகள் ,வியாபாரம் அமையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் ஆகக்கூடும். பணிமாற்றம் ஏற்பட்டு புதிய பொறுப்புகளை ஏற்கும்படியும் இருக்கும். பிளைகளின் போக்கு கவலையளிக்கும் அவர்களின் முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும். உங்களை எதிர்ப்பார்கள். உங்கள் புத்திமதி எதுவும் எடுபடாமல் போகும்.

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை ராகு பார்க்கிறார். இந்தப் பார்வை உங்களுக்கு மன தைரியத்தைக் கொடுக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். சகோதரர்களுக்கு பாதிப்பு உண்டாகும். ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படும். தொழில் கூட்டாளியுடன் கருத்து வேறுபாடு தோன்றி தொழில் பாதிப்புகளை ஏற்படுத்தும். நெருங்கிய நண்பர்கள் உங்களைவிட்டுப் பிரிவார்கள். உறவினர்களுடனும் கருத்து வேறுபாடு ஏற்படும். வீணான மனக்கசப்பும் அலைச்சலும் ஏற்படும்.

திடீர் வருமானம் கிடைத்து நல்ல பொருட்சேர்க்கை ஏற்படும். போட்டி பந்தயங்கள் வெற்றியளிக்கும். கோர்ட் கேஸ்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். கணவன் மனைவி உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. மனக்கவலையும் அலைச்சலும் தவிர்க்க முடியாது.
கேது பகவான் உங்கள் ஜென்ம ராசியையும், உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தையும்,5-ம் இடத்தையும் பார்ப்பதால், உங்கள் செல்வாக்கு மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகம் ஆலயத் திருப்பணி அறக்கட்டளை தர்மகர்த்தா போன்ற பொறுப்பான பதவிகளும் கிடைக்கும். உங்கள் கௌரவம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்பும் அவர்களது ஆசிகளும் கிடைக்கும். பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். மூத்த சகோதரர்களால் நன்மை கிடைக்கும்.

எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளம் கூடும். சிலர் நூதனமான வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். காதில் விழும் விஷயங்கள் மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கும்.

சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நற்பெயரும் ஏறப்டும். சிலருக்கு பதவி உயர்வு ,வேண்டிய இட பணிமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் அரசுத் துறையில் உள்ளவர்களின் உதவியும் கிடைக்கும். உங்கள் தாய்க்கு நேரம் சரியில்லை.அவருடைய உடல்நலம் பாதிக்கப்படும். கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு வரும். வம்பு வழக்குகள், கோர்ட் கேஸ்கள் ஒரு முடிவுக்கு வந்து ஒருவழியாக முடிந்து போகும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள். அந்நிய தேசத்திலிருந்து வருமானம் கிடைக்கும். இதுவரை குடத்துக்குள் விளக்காக இருந்துவந்த உங்கள் பெருமை இப்போது குன்றின் மேலிட்ட விளக்காகும்.சிலருக்கு வண்டி வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். தந்தை மூலம் எதிர்பாராத அனுகூலம் கிடைக்கும்.

கேதுவின் 11-ம் இடத்து சஞ்சாரம் பெயரையும் புகழையும் தேடிக் கொடுக்கும். தொழில் மேன்மையடையும். மருத்துவச் செலவு குறையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொட்டதெல்லாம் பொன்னாகும். மேலதிகாரிகள், பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அரசு சம்பந்தமான நன்மைகள் கிடைக்கும். குடும்பத்துக்கு புதிய வரவாக ஒரு குழந்தை பிறக்கும். பயணங்கள் அதிகமாகும். பயணங்களால் நன்மை கிடைக்கும். சொத்து, நகை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சிநிறைந்ததாக இருக்கும். உற்றார் உறவினர் உதவி செய்வார்கள்.
இந்த 2016 ஆண்டின்  ஆக்ஸ்டு மாதம் வரை உங்கள் ராசிக்கு 5-மிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், ஏராளமான பலன்களை வாரி வழங்கப் போகிறார். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்த  பகை, விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள்   என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை  நண்பர்கள் அணுசரணை போன்ற  சூழ்நிலைகள் ஏற்படும்.  குரு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சாதகமாக சஞ்சரிப்பதோடு ,  கேதுவும் சாதகமாக சஞ்சரிப்பதால்,  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள்.    ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினை இவை நல்லோர் சிலரால், திடீரென மாறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும்.  உங்களுக்கு எதிராக இருந்துவந்த ஊழியர்கள்அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பீர்கள்.  அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். செய்தொழில் மேன்மையடையும். அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகளும் போட்டியாளர்களும் காணாமல் போவார்கள். அவர்களால் நிலவி வந்த தொல்லை நீங்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்படையும். அதே நேரத்தில் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள், வாயுத் தொந்தரவு, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் ஏறப்டும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படும். நெருங்கிய நண்பர்கள்,  நெருங்கிய உறவினர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பும்.   எதிர்பாராத வருமானம் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஆனால் அவை நிரந்தரமாக இருக்காது. கோர்ட் கேஸ்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்கும். சிலருக்கு சாதகமான தீர்ப்புகளும் கிடைக்கும்.    உங்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புண்டாகும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும்  புதிய பொறுப்புகளும் கிடைக்கும். புத்தி சாதுரியம் அதிகரித்து, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகளை முறியடித்துவிடுவீர்கள் . அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த அந்த பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று சங்கடங்கள்  தீரும். உங்களுடைய முயற்சிகளுக்கு தந்தையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். இதுவரை தடைப்பட்ட திரும்ணங்கள்  நடந்தேறும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் புகழடைவீர்கள். சிலர் சொந்தத் தொழிலை மேற்கொள்வர். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவிசெய்வார்கள். மற்றவர்கள்  முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியில் ஒத்துழைப்பு  கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள்.
ஏற்கெனவே கூறியுள்ளபடி, குரு 2016 ஆகஸ்டு மாதம் முதல், உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வாண்டாம். அந்த வாக்கைக்  காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு, அவைகளை குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வார்கள். கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள்  அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகள் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள்  மற்றும் உறவினர்களின் வருகை அதிகமாகும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள்  எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். சிலருக்கு தேவையற்ற விவகாரங்கள் தேடி வந்தடையும். எதிர்பாராத திடீர் கஷ்டங்கள், திடீர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் மனம் வேதனைப்பட்டு, குடும்பத்தைப் பிரிந்து  தூர தேசங்களுக்கு சென்று விடுவர். பொருளாதாரத்தில் உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே மிகவும் சிரமமாக இருக்கும். கட்டடத் தொழிலில் ஈடுபட்டால் பாதியில் நின்றுபோகும். அன்னியரிடம் உங்கள் பணத்தை ஒப்படைத்து ஏமாந்து போவீர்கள். உண்ணும் உணவு சிலருக்கு விஷ பாதிப்பைக் கொடுக்கும். நிம்மதிக் குறைவின் காரணமாக சிலருக்கு ராத் தூக்கம் கெடும். மன உறுதி பாதிக்கும்.
பயணங்களின்போது கவனமாக இல்லையென்றால் கைப்பொருள் திருட்டுப் போகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிட்டால், அவர்களது பிரச்சினை உங்களையும் தொற்றிக்கொகொள்ளும். அடிக்கடி ஏதாவது ஒரு துக்க செய்தி வந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக மனதில் வேதனைகளும் கலக்கங்களும் சூழ்ந்துகொள்ளும். எதிர்பாராமல் திடீர் திடீரென  கஷ்டங்களும், வேதனைச் சம்பவங்களும் உங்களுக்கு உருவாகும். .
இந்த்  சந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிகம். கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கூட்டுத்தொழில் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட  வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும். கோர்ட் வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராது. குரு சாதகமாக இருப்பதால் அப்பீலில் பார்த்துக்கொள்ளலாம். பெண்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு நற்பெயர் கெடும். மனைவி வழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகல் ஏற்படும். விஷபாதிப்பு ஏற்படும். விஷ ஜந்துகள் தீண்டலாம். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டாலும், பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வராது.
பரிகாரம்:
ஆண்டு பிற்பகுதியில் குரு  6-ம் இடத்தில் சஞ்சரிப்பது நல்லதல்ல. . தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை மாலை கொண்டும் வழிபடவும். சனியின் சஞ்சாரம் சரியில்லையாதலால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி , வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும், உதவி செய்யவும். கருப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ‘ஹனுமான் சலீஸா’வை பாராயணம் செய்யவும். ராகுவின்  சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும்.  வாழ்க வளமுடன்! வளம் சிறக்கட்டும் இனிய புத்தாண்டில்!

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP