-->

2015-12-31

2016-புத்தாண்டு பலன்கள்- ரிஷபம் ராசி | 2016 Rasi palan Rishaba Rasi | New Year Palangal 2016 Rishaba Rasi

2016 - புத்தாண்டு பலன்கள் : ரிஷபம் ராசி 2016


ரிஷபம் ராசி  2016
இந்த ஆண்டு2016 ஆகஸ்டு மாதம் வரை, குரு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திலும் ஆகஸ்டு மாதம் முதல் குரு 5-மிடத்திலும், ராகு உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சிம்மத்திலும், கேது ராசிக்கு 10-ம் இடமான கும்பத்திலும் சனி ராசிக்கு 7-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அதாவது2016 ஆகஸ்டு குரு , 4ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வேண்டாம். அந்த வாக்கை காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு, அவைகளை குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வார்கள். கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள் அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகளில் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.
[இந்த க்கான புத்தாண்டு பலன்களை உங்க
ஆண்டின் பிற்பாதியில் அதாவது 2016 ஆக்ஸ்டு மாதம் முத்ல் உங்கள் ராசிக்கு 5-மிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், ஏராளமான பலன்களை வாரி வழங்கப் போகிறார். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்த  பகை, விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள்   என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை  நண்பர்கள் அணுசரணை போன்ற  சூழ்நிலைகள் ஏற்படும்.  குரு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சாதகமாக சஞ்சரிப்பதோடு ,  கேதுவும் சாதகமாக சஞ்சரிப்பதால்,  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள்.
   ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினை இவை நல்லோர் சிலரால், திடீரென மாறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும்.  உங்களுக்கு எதிராக இருந்துவந்த ஊழியர்கள்அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பீர்கள்.  அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். செய்தொழில் மேன்மையடையும். அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகளும் போட்டியாளர்களும் காணாமல் போவார்கள். அவர்களால் நிலவி வந்த தொல்லை நீங்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்படையும். அதே நேரத்தில் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள், வாயுத் தொந்தரவு, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் ஏறப்டும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படும். நெருங்கிய நண்பர்கள்,  நெருங்கிய உறவினர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பும்.   எதிர்பாராத வருமானம் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஆனால் அவை நிரந்தரமாக இருக்காது. கோர்ட் கேஸ்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்கும். சிலருக்கு சாதகமான தீர்ப்புகளும் கிடைக்கும்.    உங்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புண்டாகும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும்  புதிய பொறுப்புகளும் கிடைக்கும். புத்தி சாதுரியம் அதிகரித்து, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகளை முறியடித்துவிடுவீர்கள் . அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த அந்த பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
இந்த் ஆண்டு ராகு பகவான் சிம்ம  ராசிக்கும் கேது பகவான் கும்ப  ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதாவது, ராகு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்துக்கும், கேது உங்கள் ராசிக்கு 10-ம் இடத்துக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இதற்குண்டான பலன்களைக் காணலாம்.
இந்தப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சில சோதனையான பலன்களே நடக்கும். தாயாரின் உடல்நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்களாலும், கால்நடைகளாலும் நஷ்டம் உண்டாகலாம். உங்கள் ஆரோக்கியம் பாதிப்படையும். நீங்கள் கட்டும் கட்டடங்கள் பணப் பற்றாக்குறையாலோ அல்லது எதிரிகளின் தொல்லைகளாலோ பாதியில் நின்று போகும். சிலர் குடியிருக்கும் வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு வீடுகளில் குடியேறுவார்கள்.. சிலர் சொந்த வீட்டைவிட்டு வாடகை வீட்டுக்கு குடி போவார்கள். வியாபாரம் தொழில் காரணமாக அடிக்கடி வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளநேரும். பயணங்கள் வெறும் அலைச்சலிலும் சுகவீனத்திலும் முடியும். வேறு பயன் இருக்காது.
சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்த வேலையிலிருந்து ஊர் ஊராகச் சுற்றி அலையும் வேலைக்கு மாற்றம் வரும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். அதன் காரணமாக குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். ஒற்றுமை குறையும். உங்கள் மீது மற்றவர்களுக்கு வெறுப்பு ஏற்படும். விஷக்கடி ஏற்படக்கூடும்.
மாணவர்களுக்கு கல்வியில் கவனம் குறையும். கடும் முயற்சி செய்தால் மட்டுமே, தேவையான மதிப்பெண் பெற்று, உயர் வகுப்பிலோ வேலைக்கோ செல்ல முடியும். சில மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்காக வெளியூர் சென்று தங்கிப் படிக்க வேண்டி வரும். குடும்பத்திலுள்ள வயதானவர்களுக்கு உடல்நலம் பாதிப்படையும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். சிலருக்கு கேளிக்கை, விருந்துகளில் நாட்டம் அதிகரிக்கும். அதன் காரணமாக அந்த வகையில் பண விரயம் ஏற்பட்டு, அவசியத் தேவைகளுக்கு பணமில்லாமல் அல்லாட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.கடன் வாங்க வேண்டி வரும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் இப்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தவறான முடிவுகள் எடுக்க நேர்ந்து நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி வரும். முடிவெடுப்பதற்கு முன்பு ஆழமாக சிந்திக்கவேண்டும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அலுவலகத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. மேலதிகாரிகளிடம் கெட்ட பெயர் ஏற்படும். சக தொழிலாளர்களிடம் மேலதிகாரிகளிடம் உங்கள் மீது குறை கூறுவார்கள். சிலருக்கு விருமில்லாத இடத்துக்கு பணிமாற்றம் வரும். சிலர் அவர்கள் தகுதிக்குக் குறைந்த வேலையில் அமர்த்தப்படுவார்கள். தசா புத்தி சரியில்லாத சிலருக்கு வீட்டில் திருட்டுப் போகும்.
சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுற்றுலா செல்லவும் வாய்ப்புண்டு. சிலர் பொதுப் பணியாற்றி புகழ் பெறுவார்கள். ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், 6-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிரிகளின் தொல்லை குறைய வாய்ப்புண்டு. சிலருக்கு பழைய கடன்கள் அடைபடும். அதேசமயம் தேவைக்காக புதிய கடன்கள் ஏறப்டவும் வாய்ப்புண்டு. உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுக்கிருக்கும் கடுமையான நோய் பாதிப்புகள் நீங்கும். ஆனால், அலர்ஜி, தோல்நோய்கள் போன்ற சிறிய நோயகளின் உபத்திரவம் இருக்கும். ராகுவின் 11- ம் பார்வை உங்கள் 2-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்கள் சொல்வாக்கு, செல்வாக்கு சரிந்து உங்கள் கௌரவம் பாதிக்கப்படும். முக்கியத் தேவைக்கு வருமானம் இருக்காது. விரயச் செலவுகள் அதிகமாகும். வார்த்தையில் சாதுர்யம் இல்லாமல் போய் காட்டம் அதிகமாகும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகமாகும்.
எதிர்பாராத பணவரவு இருந்தாலும் கூட கையில் தங்காது.மனைவி மற்றும் சகோதரிகளால் தொல்லைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சிலர் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் கூடும். பெரியோர்களின் ஆசியும் கிடைக்கும். கணவன்-மனைவி சுமுகமாக இருக்கும்.
இனி கேதுவின் சஞ்சாரத்தால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம். தொழிலில் பின்னடைவு ஏற்படும். வியாபாரம் மந்த கதியில் இயங்கும். அதனால் கையில் பணப்புழக்கம் குறையும். கடும் பணத்தட்டுப்பாட்டில் சிக்கி சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அதுபோல் அலுவலக வேலையில் இருப்பவர்கள் வேலையை விட்டு விட்டு விருப்ப ஓய்வில் சென்று விடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு அலுவலகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். பண விஷயத்தில் நாணயம் தவறி அவமானப்படக்கூடும். சிலர் தங்களுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சிரமத்துக்குள்ளாவார்கள். சிலர் வீண் ஜம்பத்தை விட முடியாமல் தேவையற்ற கஷ்டங்களைத் தானே தேடிக்கொள்வார்கள். ராகுவின் 11-ம் பார்வை உங்கள் 8-மிடத்தில் பதிவதால், கோர்ட் கேஸ்கள், வீண் வம்பு வழக்குகள் தேடி வரும். தொலலைகள் வந்து சேரும்.
பொதுவாக கேதுவின் 10-ம் இடத்து சஞ்சாரம், எதிர்காலச் சிறப்புக்காக இப்போது அடித்தளம் அமைத்துக்கொடுக்கும். ஞானிகள் சாதுக்களின் தரிசனம் கிடைக்கும்.
சனி 7-ம் இடத்தில் சஞ்சரிப்பது உகந்தது அல்ல. பலன்கள் எப்படி இருக்கும்?
குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாவதால், உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள் என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை ந்ம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும் உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்படும். உடல் நலம் குறையும் முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள் தங்கள் கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள்உண்டாகும். குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயற்சிமேற்கொண்டு வீட்டில் ஒரு திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் அலைச்சல் காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.
பரிகாரம்:
சனியின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், சனிக்கிழமைகளில், சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும்.  வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் உதவி செய்யவும். உங்களுடைய ராசிக்கு   கேதுவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், வினாயகர் கோவிலுக்குச் சென்று, சேவையாற்றவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லையாதலால், வெள்ளிக் கிழமைகளில் துர்க்கையம்மனை சிவப்பு மலர்களால் அர்ச்சானி  குரு பகவான் ஆண்டின்  முற்பகுதியில், சரியான  சஞ்சாரம் செய்யாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்.
இந்த 2016-ம் ஆண்டு உங்களுக்கு யோகமாக அமைய வாழ்த்துக்கள்!. வாழ்க!

புத்தாண்டு பலன்- 2016 - மேஷம் ராசி | 2016 Rasi palan Mesha Rasi | New Year Palangal 2016 Mesha Rasi

புத்தாண்டு பலன் - 2016 | மேஷம் ராசி 2016 


மேஷ ராசி 2016
                       இந்த் வருடம் குரு  2016 ஆக்ஸ்டு  மாதம் வரை குரு 5-மிடத்திலும், அதன்பிறகு 6-மிடத்துக்கும் பிரவேசிக்கிறார். சனி அஷ்டம சனியாக சஞ்சரிக்கிறார். ராகு 5-மிடத்திலும், கேது 11-மிடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்
இந்த வருடம் சனி பகவான் உங்கள் ராசிக்கு  8-ம் இடத்தில் பிரவேசிக்கிறார். இதனை ‘அஷ்டமச் சனி’ என்று கூறுவார்கள். அஷ்டமச் சனி, ஏழரைச் சனியைவிட அதிகம் தொல்லை தரும். தொல்லைகளையும் அவமானங்களையும் சந்திக்க நேரும்.
உடல் நலம் கெடும். தீராத வயிற்று நோய் படுத்தும்.   பண நஷ்டம் உண்டாகும். தொட்டதெல்லாம் தோல்வி மயமே. நிலையற்ற வாழ்க்கை இருக்கும். கால்நடைகளுக்கு அழிவுண்டாகும். பலவையான நோய்கள் உண்டாகும். சந்ததிக்கு அரிஷ்டம் ஏற்படும். நண்பர்களுக்கும் தொல்லை உண்டாகும். அரசாங்கத்தால் தொல்லைகளும் சிறைத் தண்டனையும் ஏற்படலாம். மாரக தசை நடப்பவர்களுக்கு, உயிருக்கு பயம் உண்டாகும். மான கௌரவப் பிரச்சினைகள் உண்டாகும். மனைவியுடன் பகை உண்டாகும். பலவகை தடங்கல்கள், தண்டச் செலவுகள், வீண் செலவுகள், குற்றம் முதலியவற்றிற்கு அ பராதத் தொகை செலுத்துதல் போன்றவைகளில் வீண் செலவு உண்டாகி, பணம் கரையும். வேண்டாத, வசதியற்ற ஊருக்கு மாற்றலாகி, அவதிப்படுவர். கண்நோய்கள் ஏறப்டும். இது சமயம் கூசாமல் பொய் பேசுவர். மீள்வதற்கு வழியில்லாமல் , கீழ்த்தரமான செயல்களிலும் இறங்குவர். வறுமை மிகுதியால், பட்டினி கிடக்கவேண்டி வரும். மனதை ஏதாவது துன்பமோ கவலையோ வாட்டிக்கொண்டே இருக்கும். ஒரு பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். யாருக்காவது அடிமையாக இருக்கவேண்டியது வரும். கடுமையான உழைப்பின் மூலம்தான் வயிறு நிறையும். ஆபத்துகள், விபத்துகள் ஏற்படும்.  வேளைக்கு சாப்பிட முடியாமலோ அன்றி உணவில்லாமலோ, அதிகம் பசியும் இருக்கும். மனக் கவலையும் இருந்துகொண்டே இருக்கும். 8ல் சனி அஷ்டமச் சனி எனப்படும். ஏழரைச் சனிக்கு நிகரான கஷ்டம் உண்டாகும். அஷ்டமச் சனியின்போது, இவர் பிள்ளைகள்கூட இவர் பேச்சைக் கேட்க மாட்டார்கள். இவர் வார்த்தைக்கு யாரிடத்திலும் மதிப்பிருக்காது என்று கொள்ளவேண்டும். பெண்களுக்கு குடும்பச் சுமை அதிகரிக்கும். வீட்டிற்கு வந்து செல்வோரின் சில தேவையற்ற விமர்சனங்களுக்கு நீங்கள் ஆளாக நேரும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும். அனுசரித்து நடந்துகொண்டால், குடும்பத்தில் குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்படுவதைத் தடுக்க முடியும். கிரக நிலை சரியில்லாததால், யார் எனன் சொன்னாலும் காதில் வாங்காமல், செய்யும் செயலில் கவனம் வைப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு உங்களின் பொறுமையை சோதிக்கும் வண்ணமாக உங்களின் கீழ்ப்பட்டவரக்ளின் செயல்கள் தலை விரித்தாடும்.அதை நீங்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். மேலும் உனக்ளிடம் நெருங்கிப் பழகும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு சில துரோகச் செயல்களைப் புரிவார்கள். அதன் காரணமாக சில அலைச்சல்களையும் அவமதிப்புகளையும் நீங்கள் தாங்க வேண்டியிருக்கும். வெகு நாட்களாகக் கட்டிக் காத்துவந்த மதிப்பு மரியாதையை வெகு சீக்கிரத்தில் இழக்க நேரிடும்.  மாணவர்கள் வீட்டுச் சூழலாலும், சில தேவையற்ற கற்பனைகளாலும், மனதை அலையவிட்டு கல்வியில் போதிய ஆர்வத்தைக் குறைத்துக்கொள்ள நேரும். பெற்றோர்களும் உறவினர்களும் மற்றும் உங்கள் பள்ளி ஆசிரியர்களும் உங்கள் நிலையைக் குறித்து வருத்தம்கொள்ளூம் விதமாக உங்கள் நிலையானது மாறலாம். சில சமயங்களில் மன பாதிப்பால், எடுப்பார் கைப்பிள்ளையாக , யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பி செயல்படுவீர்கள்.உங்களின் சொந்த புத்தியைக்கூட சிலசமயம் அடகு வைத்துவிடுவீர்கள். எனவே கருத்துன்றிப் படிகக்வேண்டியது அவசியம்.
இந்த வ்ருடம் ராகு பகவான் சிம்மராசிக்கும், கேது பகவான் கும்ப  ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். அதாவது, உங்கள் ராசிக்கு 11-ம் இடத்துக்கு கேதுவும், 5-ம் இடத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ராகு பகவான் தனது 5-மிட சஞ்சாரத்தின் மூலம் பலவித கற்பனையான எண்ணங்களைத் தோற்றுவித்துக்கொண்டே இருப்பார். எதையாவது சாதிக்கவேண்டும் என்ற பரபரப்பு உங்களிடம் இருக்கும். செயல்பாட்டுக்கு வரமுடியாத எண்ண அலைகள் தொடர்ந்து உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கும். நினைத்தது அனைத்தையுமே அடைந்துவிடவேண்டுமென்ற ஆவல் உங்கள் மனதில் அதிகரிக்கும். அதனால் எப்போதும் புதிய சிந்தனைகளும் புதிய வழிமுறைகளும் தோன்றும் வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய வாகனங்கள் புதிய இயந்திரங்கள் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. புதிய நூதனமான தொழில் வாய்ப்புகளும் உருவாகும்.

இந்தக் காலத்தில், உங்களைவிட வயதில் சிறியவர்களானாலும் சரி, வயதில் பெரியவர்களானாலும் சரி, அவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவேண்டும். அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகக்கூடும். சிலருக்கு எதிர்பாராதவிதமாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நூதனமான தொழில் வாய்ப்புகள் ,வியாபாரம் அமையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் ஆகக்கூடும். பணிமாற்றம் ஏற்பட்டு புதிய பொறுப்புகளை ஏற்கும்படியும் இருக்கும். பிளைகளின் போக்கு கவலையளிக்கும் அவர்களின் முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும். உங்களை எதிர்ப்பார்கள். உங்கள் புத்திமதி எதுவும் எடுபடாமல் போகும்.

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை ராகு பார்க்கிறார். இந்தப் பார்வை உங்களுக்கு மன தைரியத்தைக் கொடுக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். சகோதரர்களுக்கு பாதிப்பு உண்டாகும். ராகு பகவான் தனது 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படும். தொழில் கூட்டாளியுடன் கருத்து வேறுபாடு தோன்றி தொழில் பாதிப்புகளை ஏற்படுத்தும். நெருங்கிய நண்பர்கள் உங்களைவிட்டுப் பிரிவார்கள். உறவினர்களுடனும் கருத்து வேறுபாடு ஏற்படும். வீணான மனக்கசப்பும் அலைச்சலும் ஏற்படும்.

திடீர் வருமானம் கிடைத்து நல்ல பொருட்சேர்க்கை ஏற்படும். போட்டி பந்தயங்கள் வெற்றியளிக்கும். கோர்ட் கேஸ்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். கணவன் மனைவி உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. மனக்கவலையும் அலைச்சலும் தவிர்க்க முடியாது.
கேது பகவான் உங்கள் ஜென்ம ராசியையும், உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தையும்,5-ம் இடத்தையும் பார்ப்பதால், உங்கள் செல்வாக்கு மதிப்பு மரியாதை கூடும். ஆன்மீகம் ஆலயத் திருப்பணி அறக்கட்டளை தர்மகர்த்தா போன்ற பொறுப்பான பதவிகளும் கிடைக்கும். உங்கள் கௌரவம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்பும் அவர்களது ஆசிகளும் கிடைக்கும். பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். மூத்த சகோதரர்களால் நன்மை கிடைக்கும்.

எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளம் கூடும். சிலர் நூதனமான வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். காதில் விழும் விஷயங்கள் மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கும்.

சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நற்பெயரும் ஏறப்டும். சிலருக்கு பதவி உயர்வு ,வேண்டிய இட பணிமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் அரசுத் துறையில் உள்ளவர்களின் உதவியும் கிடைக்கும். உங்கள் தாய்க்கு நேரம் சரியில்லை.அவருடைய உடல்நலம் பாதிக்கப்படும். கோர்ட் கேஸ்களில் சாதகமான தீர்ப்பு வரும். வம்பு வழக்குகள், கோர்ட் கேஸ்கள் ஒரு முடிவுக்கு வந்து ஒருவழியாக முடிந்து போகும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள். அந்நிய தேசத்திலிருந்து வருமானம் கிடைக்கும். இதுவரை குடத்துக்குள் விளக்காக இருந்துவந்த உங்கள் பெருமை இப்போது குன்றின் மேலிட்ட விளக்காகும்.சிலருக்கு வண்டி வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். தந்தை மூலம் எதிர்பாராத அனுகூலம் கிடைக்கும்.

கேதுவின் 11-ம் இடத்து சஞ்சாரம் பெயரையும் புகழையும் தேடிக் கொடுக்கும். தொழில் மேன்மையடையும். மருத்துவச் செலவு குறையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொட்டதெல்லாம் பொன்னாகும். மேலதிகாரிகள், பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அரசு சம்பந்தமான நன்மைகள் கிடைக்கும். குடும்பத்துக்கு புதிய வரவாக ஒரு குழந்தை பிறக்கும். பயணங்கள் அதிகமாகும். பயணங்களால் நன்மை கிடைக்கும். சொத்து, நகை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சிநிறைந்ததாக இருக்கும். உற்றார் உறவினர் உதவி செய்வார்கள்.
இந்த 2016 ஆண்டின்  ஆக்ஸ்டு மாதம் வரை உங்கள் ராசிக்கு 5-மிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், ஏராளமான பலன்களை வாரி வழங்கப் போகிறார். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்த  பகை, விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள்   என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை  நண்பர்கள் அணுசரணை போன்ற  சூழ்நிலைகள் ஏற்படும்.  குரு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சாதகமாக சஞ்சரிப்பதோடு ,  கேதுவும் சாதகமாக சஞ்சரிப்பதால்,  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள்.    ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினை இவை நல்லோர் சிலரால், திடீரென மாறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும்.  உங்களுக்கு எதிராக இருந்துவந்த ஊழியர்கள்அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பீர்கள்.  அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். செய்தொழில் மேன்மையடையும். அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகளும் போட்டியாளர்களும் காணாமல் போவார்கள். அவர்களால் நிலவி வந்த தொல்லை நீங்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்படையும். அதே நேரத்தில் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள், வாயுத் தொந்தரவு, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் ஏறப்டும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படும். நெருங்கிய நண்பர்கள்,  நெருங்கிய உறவினர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பும்.   எதிர்பாராத வருமானம் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஆனால் அவை நிரந்தரமாக இருக்காது. கோர்ட் கேஸ்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்கும். சிலருக்கு சாதகமான தீர்ப்புகளும் கிடைக்கும்.    உங்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புண்டாகும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும்  புதிய பொறுப்புகளும் கிடைக்கும். புத்தி சாதுரியம் அதிகரித்து, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகளை முறியடித்துவிடுவீர்கள் . அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த அந்த பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று சங்கடங்கள்  தீரும். உங்களுடைய முயற்சிகளுக்கு தந்தையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். இதுவரை தடைப்பட்ட திரும்ணங்கள்  நடந்தேறும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் புகழடைவீர்கள். சிலர் சொந்தத் தொழிலை மேற்கொள்வர். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவிசெய்வார்கள். மற்றவர்கள்  முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியில் ஒத்துழைப்பு  கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள்.
ஏற்கெனவே கூறியுள்ளபடி, குரு 2016 ஆகஸ்டு மாதம் முதல், உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வாண்டாம். அந்த வாக்கைக்  காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு, அவைகளை குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வார்கள். கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள்  அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகள் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள்  மற்றும் உறவினர்களின் வருகை அதிகமாகும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள்  எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சில்ர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். சிலருக்கு தேவையற்ற விவகாரங்கள் தேடி வந்தடையும். எதிர்பாராத திடீர் கஷ்டங்கள், திடீர் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் மனம் வேதனைப்பட்டு, குடும்பத்தைப் பிரிந்து  தூர தேசங்களுக்கு சென்று விடுவர். பொருளாதாரத்தில் உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே மிகவும் சிரமமாக இருக்கும். கட்டடத் தொழிலில் ஈடுபட்டால் பாதியில் நின்றுபோகும். அன்னியரிடம் உங்கள் பணத்தை ஒப்படைத்து ஏமாந்து போவீர்கள். உண்ணும் உணவு சிலருக்கு விஷ பாதிப்பைக் கொடுக்கும். நிம்மதிக் குறைவின் காரணமாக சிலருக்கு ராத் தூக்கம் கெடும். மன உறுதி பாதிக்கும்.
பயணங்களின்போது கவனமாக இல்லையென்றால் கைப்பொருள் திருட்டுப் போகும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிட்டால், அவர்களது பிரச்சினை உங்களையும் தொற்றிக்கொகொள்ளும். அடிக்கடி ஏதாவது ஒரு துக்க செய்தி வந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக மனதில் வேதனைகளும் கலக்கங்களும் சூழ்ந்துகொள்ளும். எதிர்பாராமல் திடீர் திடீரென  கஷ்டங்களும், வேதனைச் சம்பவங்களும் உங்களுக்கு உருவாகும். .
இந்த்  சந்தர்ப்பத்தில் பொருளாதார தட்டுப்பாடு அதிகம். கூட்டுத் தொழில் செய்ய முயன்றால், கிடைத்த பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் உங்கள் பணத்தை பிறரிடம் ஒப்படைத்தாலும் அதை இழக்க வேண்டியிருக்கும். சிலருக்கு விஷம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். சிலர் குடும்பத்தில் வயது முதிர்ந்த ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் தொல்லைப்படுத்தும். கோர்ட், கேஸ்கள் நீண்டுகொண்டே போகும். சிலருக்கு புதிய கோர்ட் கேஸ்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு கூட்டுத்தொழில் பிரிவதற்கான வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். முதியவர்களுக்கு தொல்லை ஏற்படும். அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படும். மேலதிகாரிகளும் ஊழியர்களும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். குடும்பமும் அலுவலகமும் நிம்மதியைக் குலைக்கும். தாய்மாமன் மற்றும் அத்தை முறை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள் அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட  வியாதிகள் வரும். உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கையூட்டு பெற்று மாட்டிக்கொள்ள நேரும். இல்லையென்றால் வேறு காரணங்களுக்காக அவமானப்பட நேரும். கோர்ட் வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வராது. குரு சாதகமாக இருப்பதால் அப்பீலில் பார்த்துக்கொள்ளலாம். பெண்களால் கெட்ட பெயர் ஏற்பட்டு நற்பெயர் கெடும். மனைவி வழி உறவினர்களுடன் சண்டை சச்சரவுகல் ஏற்படும். விஷபாதிப்பு ஏற்படும். விஷ ஜந்துகள் தீண்டலாம். அடிக்கடி பயணங்கள் ஏற்பட்டாலும், பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வராது.
பரிகாரம்:
ஆண்டு பிற்பகுதியில் குரு  6-ம் இடத்தில் சஞ்சரிப்பது நல்லதல்ல. . தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை மாலை கொண்டும் வழிபடவும். சனியின் சஞ்சாரம் சரியில்லையாதலால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி , வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும், உதவி செய்யவும். கருப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ‘ஹனுமான் சலீஸா’வை பாராயணம் செய்யவும். ராகுவின்  சஞ்சாரம் சரியில்லாததால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். மஹாலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபாடு செய்யவும்.  வாழ்க வளமுடன்! வளம் சிறக்கட்டும் இனிய புத்தாண்டில்!

2015-12-30

2016 rasi palan | New Year Palangal 2016 | ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2016 - அனைத்து ராசிகளுக்கும்


Rasi Palan 2016 | ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2016


இந்த 2016-ம் ஆண்டு உங்களுக்கு எல்லா வளங்களையும் கொண்டுவரவேண்டும் என இறைவனருளை  வேண்டி வணங்குகிறோம். மூன்றாம் கோணம் மூலமாக 12 ராசிக்காரர்களுக்கும் உள்ள ராசி பலன்களைச் சொல்லியிருக்கிறோம். இந்த பலன்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் படித்துப் பலனடையும்படி கேட்டுக்கொள்கிறோம்.
பலன்களைக் கணிக்கும்போது இந்த மாதம் நிகழப்போகும் பலவித முக்கிய நிகழ்வுகளை கவனத்தில் கொண்டு  இந்த பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. முக்கிய நிகழ்வுகள் பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
ஆண்டு தொடக்கத்தில் 2016 ஜனவரி மாதம் முதல் தேதியில் குரு பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார் .  ராகு-கேது பெயர்ச்சி ஜனவரி மாதம் 8-ம் தேதி முதல் நிகழப் போவதால்,சர்ப்பக் கிரகங்களான  ராகு சிம்ம ராசியிலும், கேது கும்ப  ராசியிலும் சஞ்சரிக்கிறாரக்ள்.  சனி பகவான் விருச்சிகத்தில்   வீற்றிருக்கிறார்.
இந்த ஆண்டில் குரு ,சனி முதலிய பெரிய கிரகங்களின் சஞ்சார பலன்கள் உங்கள் வாழ்வியலை பெரிதும் தீர்மானிக்கும் என்பதையும் வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இங்கே சொல்லப்பட்டிருக்கும் அத்தனை பலன்களும் கோச்சாரப்படி சொல்லப்பட்டிருப்பதால், அவைகளே அனைவருக்கும் பொருந்தும் என்று நினக்கவேண்டாம்.
ஒருவருடைய சொந்த ஜாதகமும் அதில் உங்களுக்கு நடக்கும் திசா-புத்திப் பலன்களும் வாழ்வியலைத் தீர்மானிக்கும் விஷயங்கள என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். அதனால், ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல திசா-புத்திகள் நடந்துகொண்டிருந்தால், கோச்சாரத்தின்படி சொல்லப்பட்டிருக்கும் மோசமான பலன்கள் மிகவும் மோசமாக உங்களைப் பாதிக்காது. அதேபோல ஜாதகத்தில் மோசமான திசா-புத்திகள் நடந்துகொண்டிருக்கும்போது  கோச்சாரப்படி சொல்லப்பட்டிருக்கும் மிக நல்ல பலன்கள் ஓரளவுக்குத்தான் கை கொடுக்கும். எனவே கெடுபலன் பற்றி அதிகம் நொந்து போகாமல், உங்கள் சொந்த ஜாதகத்தையும் ஒருமுறை பரிசீலித்துக்கொள்வது நல்லது.
உங்களுடைய கோச்சார பலன்களின் பிரகாரம், ப்ரிகார ஸ்தலங்களான , குரு ஸ்தலங்களுக்கும், சனீஸ்வரனின் சந்நிதிகளுக்கும், ராகு- கேது சந்நிதிகளுக்கும் சென்று பரிகார பூஜைகள் செய்து வந்தால் எந்த தீமைகளும் உங்களை அணுகாது. இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கப் பெற்று இந்தப் புத்தாண்டில் நீங்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று உங்களை வாழ்த்துகிறோம். இனி பலன்களை ஒவ்வொரு ராசியாகப் படித்துப் பலனடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வாழ்க வளமுடன்!.  வளம் சிறக்கட்டும் இந்தப் புத்தாண்டில்!

by moonramkonam

2015-12-29

Manti in Twelve house | மாந்தி பன்னிரு பாவங்களில் நின்ற பலன்

மாந்தி பன்னிரு பாவங்களில் நின்ற பலன்

1ம் இடத்தில( லக்கினத்தில்) மாந்தி இருந்தால் குண்டான உடல‌மைப்பு, உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்றும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
2 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் குடும்ப வாழ்க்கை நிம்மதி இல்லாதவராகவும், பேச்சில் தடுமாற்றமும், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் செய்பவராகவும், கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர்.

3ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்.
4ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும்.
5ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மனநிலை பாதிப்பு, புத்திர தோஷம் பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்வம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாத்வராகவும், சுய இன்பப்பழக்கம் அல்லது முறையற்ற உறவு கொண்டவராகவும் இருப்பார்கள்.
6ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், பிற‌ருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, எதிர்கள் இல்லாத நிலை அல்லது எதிரிகளிடம் எப்போதும் வெற்றி, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள்.
7 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடல், இல்லற வாழ்வில் நிம்மதியற்ற நிலை, குறைவான நட்பு, மனைவியின் சொத்தை அழிக்கும் நிலை, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியன ஏற்படும்.
8 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் அதிக பசி கொண்டவராகவும், மறைமுக நோய் கொண்டவராகவும், அதிக கவலை கொண்டவராகவும், எதிலும் தோல்வியே ஏற்படும் நிலையும், வீண் விரயம் செய்பவராகவும் இருப்பர்.
9ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடலமைப்பு கொண்டவராகவும், தந்தைக்கு தோஷம் உடையவராகவும், தவறான பாதைக்கு செல்பவராகவும், அதனால் தவறான பழக்கவழக்கங்களும்,முறையற்ற பாலுணர்வு உடையவராகவும், எப்பொழுதும் சோதனை உடையவராகவும், பணக்கஷ்டம் உடையவராகவும் இருப்பர்.
10ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்ப்படும்.
11ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் செல்வம், செல்வாக்குடன், நல்ல மனைவி, மிகுந்த புகழ், நெருங்கியவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், குறுகிய கால்களை கொண்டவராகவும் இருப்பர்.
12ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வீண் விரயம் செய்பவராகவும், இழிவான செயல்களை செய்பவராகவும், உடலில் குறையுடன், குறைவான சந்தோசம் கொண்டவராகவும், குடும்பவாழ்வில் சோகம், சோதனை கொண்டவராகவும், சோம்பல் கொண்டவராகவும் இருப்பர்.
மற்றபடி மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம்
பெரும்பாலானோருக்கு பொருந்தும்


Jaimahakale

2015-12-28

Some astrology tips for home | வீட்டுக்கான சில ஜோதிடக் குறிப்புகள்


வீட்டுக்கான சில ஜோதிடக் குறிப்புகள்
*சமையல் அறையில் அலமாரி மேற்கு, தெற்கு சுவர்களை ஒட்டி அமைக்க வேண்டும்.
*சமையலறை கதவுக்கு நேர் எதிரில் அடுப்பு வைக்கக் கூடாது.
*தெற்குப் பார்த்து சமையல் செய்வது தற்கொலை உணர்வைத் தூண்டும்.
*மேற்குப் பார்த்து சமையல் செய்வது தீ விபத்தை உண்டாக்கும்.
*வடக்குப் பார்த்து சமையல் செய்வது துர்மரணத்தை உண்டாக்கும்.
*படிப்பறை கிழக்குப் பக்கம் இருக்க வேண்டும்.
*அலமாரி கிழக்கு அல்லது வடக்குப் பார்த்து இருக்க வேண்டும்.
*பூசையறையில் அலமாரி பணம் வருவதும் போவதுமாக இருக்கும். பணம் தங்காது.
*அக்கினியில் அலமாரி பணம் அக்கினியில் கரைவதைப் போல செலவாகும்.
*வாயுவியத்தில் அலமாரி அமைத்தால், வரவுக்கு அதிகமான செலவை உண்டாக்கும்.
*மேல்நிலைத் தண்ணீர் தொட்டி மேற்கு, தெற்கு சார்ந்தாற்போல் இருக்க வேண்டும்.
*ஈசானியத்தில் கண்டிப்பாக மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டி அமைக்கக் கூடாது.குடும்ப கெளரவத்தைக் கெடுக்கும்.
*பிரம்மஸ்தானத்தில் மாடிப்படி மற்றும் மேல்நிலைத் தண்ணீர்த்தொட்டி குடும்ப கெளரவத்தைப் பாதிக்கும்.
*கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வீட்டின் தரையைவிடத் தாழ்வாக இருக்க வேண்டும்.
*ஈசானியத்தில் மாடிப்படிகளை அமைக்கக் கூடாது.
*மாடிப்படிக்குக் கீழ் கடவுள் படங்களை வைத்து வழிபடக்கூடாது.
*தந்தையின் வீட்டைப் பாகப் பிரிவினை செய்யும்போது, மூத்தவர்களுக்கு மேற்குப் பாகத்தையோ, அல்லது தெற்குப் பகுதியையோ கொடுக்க வேண்டும். இளையவர்களுக்குக் கிழக்கு அல்லது வடக்குப் பகுதிகளில் கொடுக்க வேண்டும்.
*மேற்குத் திக்கிலுள்ள சுவர் வெடிக்குமானால் வர்த்தகத்தில் நஷ்டமடைவான். உட்பக்கமாகக் கட்டடச் சுவர் விழுமானால் வீட்டுச் சொந்தக்காரன் நாசமடைவான்.
*வாசம் செய்யும் வீட்டில் திடீரென்று கிழக்குச் சுவரில் வெடிப்பு உண்டானால், அந்த வீட்டில் வசிப்பவர்கள் தரித்திரமடைவார்கள்.
*தெற்கில் உள்ள சுவர்களில் வெடிப்புக் கண்டால் அந்த வீட்டில் யாராவது மரணமடைவார்கள்.
*வடக்கில் உள்ள சுவரில் வெடிப்பு உண்டானால் திடீர் விரயங்கள் உண்டாகும்.
*வீடுகளுக்குத் தாழ்வாரம் ஐந்தரை அடிக்குக் குறையாமல் அமைக்க வேண்டும்.
*குடியிருப்பதற்காகக் கருங்கல்லில் கட்டடங்கள், வீடுகள் கட்டக்கூடாது. அது குடும்பத்தில் பல பிரச்சனைகளைக் கொடுத்துக் குடும்பத்தில் நிம்மதியைக் குலைத்துவிடும்.
*ஏற்கனவே இடம் அல்லது வீடு வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டை ஒட்டியோ அல்லது இடத்தை ஒட்டியோ உள்ள வடக்கு அல்லது கிழக்கில் உள்ள வீடு, மனை வாங்கலாம். தெற்கு, மேற்கு கூடாது.
*வீடுகள், எந்தத் திசையில் வாசல் இருந்தாலும், வெளியில் இருக்கும் தெரு மட்டத்தை விட வீட்டுத் தளம் உயரமாக இருக்க வேண்டும்.
*பிரதான வாசல்களை விட மற்ற உள்வாசல் கால்கள் கொஞ்சம் சிறிதாக உள்ளடக்கமாக இருக்க வேண்டும்.
*வீட்டின் கழிவு நீர் ஈசான்யத்தில் வெளியேற வேண்டும். இல்லையெனில், கழிவுநீர் ஈசான்யத்தில் ஒரு சின்னத் தொட்டியில் விழுமாறு செய்து, பின்பு அங்கிருந்து தனியே வாட்டம் கொடுத்து மற்ற திசைகளில் கொண்டு செல்ல வேண்டும்..

By Jaimahakale

2015-12-26

Rahu ketu yoga and dosha | ராகு-கேது தருவது யோகாமா... தோஷமா ....?

ராகு-கேது தருவது யோகாமா... தோஷமா ....?
***********************************************************************

ஜனன ஜாதகத்தில் குரு இருக்கும் ராசியில் கோசார குரு நுழையும் போது ஜாதகர் செய்த தவறுகளை அவனுக்கு உணர்த்தி அதற்குண்டான தண்டனையை அனுபவிக்க செய்வான். அதன் பிறகு அதே ராசியை விட்டு வெளியேறும் போது அந்த ஜாதகனுக்கு புதிய பதவியை தந்து அவனை உயர்த்தி விட்டு செல்வான்.
குருவின் மாண்பும் மேன்மையும் தங்களின் இன்று ஒரு தகவலில் தெரிய வந்தது ஐயா...தங்களுக்கு வணக்கங்களும் நன்றிகளும்🙏

ஒருவர் ஜாதகத்தில், இரண்டுக்குடையவனும், குருவும் பலமாக இருந்து சுக்கிரன் பார்வை பெற்று இருப்பின்,அந்த ஜாதகர் சிறந்த பேச்சாளர் ஆவார்.
சனி
சூரி +கேது=தோசம்
சந் +கேது=தோசம்
செவ் +கேது=தோசம்
புதன் +ராகு=யோகம்
குரு + ராகு=யோகம்
சுக் +ராகு=யோகம்
சனி
சூரி+ராகு,சந்+ராகு,செவ்+ராகு =தோசம் அதிக படுத்துதல்.
புத+கேது.குரு+கேது,சுக்+கேது =யோகம் குறைத்தல்.
ஒரு சாதகத்தில் இந்த கிரகங்களின் சேர்க்கை இருந்தால் சனி பகவான் கோட்சார ரீதியாக வரும் போது தோசத்தை முன்னேயும்,யோகத்தை பின்னேயும் தருவார்.
பிருகு நந்தி நாடி ஆய்வு
குரு+ புதன் சேர்க்கை
இந்த இணைவு உள்ள ஜாதகர் தாய்மாமனுக்கு மிகவும் பிடித்த நபர் .....
ஜாதகர் வியாபார தந்திரம் நிறைந்தவர் ....
நல்ல புத்திசாலி ஜாதகர் இளமையான தோற்றம் நிறைந்தவர் .....
விகட கவி போல் ஹாஸ்யம் நிறைந்தவர்....
வீமகவி போல் ஜோஸியம் தெரிந்தவர்......
நான்காம் அதிபன் ஏழில் இருந்தால் நல்ல படிப்பு இருக்கும். ஆனால் சபை கூச்சம் இருக்கும். நான்கும் ஏழும் பரிவர்த்தனை ஆனால் பூர்வீக சொத்தை தன் சுகத்திற்காக விரயம் செய்து விடுவார்கள்.

4 ம் மாதி புதன் 7 ல் உச்சம் .குரு 7 ஆம் பார்வையாகப்பார்க்கிறார்.நன்றி ஐயா.🙏🏾.பூர்வீக சொத்து உண்டு .ஆனாலும் அதன்மேல் ஆர்வமில்லை.நிறைய விஷயங்கள் அறிந்து கொள்கிறேன்.

Vellore Bala Jothidar

2015-12-22

Known and unknown (some strange remedy ) : Vedic remedies | Astrological Remedy | Vedic Astrology Remedies,

தெரிந்ததும் தெரியாததும் -- (சில விசித்திர பரிகாரம்கள் )

1.விநாயகருக்கு சுண்டைக்காய் மலர் வைத்து வழிபட உடலில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடும் .

2.வெளியில் செல்லும் பொழுது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில
< நாணயங்களை > பூமியில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு செல்ல, அந்த ஆத்மவினால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் ஏற்படாமல் இருக்கும்.


3.தினசரி வீட்டை விட்டு கிளம்புமுன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட்/தொட்டி /குளம் பார்த்து செல்ல, போகிற விஷயம் சுபமாய் முடியும்.

4.கொடுத்த கடன் திரும்ப வரவில்லை எனில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு தினசரி 43 நாட்கள் நீல நிற பூவை வைத்து வேண்டி வர கடன் வசூலாக ஆரம்பிக்கும்.

5.அண்டை அயலார் மூலம் தொடர்ந்து தொல்லைகள் ஏற்பட்டால் தினசரி வீட்டு முன் 
> மெழுகுவர்திகளை ஏற்றி வேண்டி வர தொல்லைகள் நீங்கும் .

6.எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும்.


7.சாம்பிராணி தூபம்..

வெண்கடுகு ,நாய்க்கடுகு ,மருதாணி விதை ,சாம்பிராணி ,
அருகம்புல் வில்வ இலை ,
வேப்ப இலை இவைகளை நன்றாக கைய வைத்து துளாக்கி சம்பிராணியுடன் கலந்து வீட்டில் அடிக்கடி தூபம் போட வேண்டும்...
{ இந்த கலவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கலாம் }

 வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது.

 மருதாணி விதை திருமகளுக்குரியது.

 அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும்.

 வில்வம் மற்றும் வேம்பு முறையே சிவன் மற்றும் சக்தி இவர்களுக்குரியது.

 மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள்.

இப்படி செய்யும் பொழுது ..வீட்டில் நிம்மதியின்மை, சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், தூக்கமின்மை, தம்பதியினருக்குமத்தியில் வாக்குவாதங்கள்,திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும்உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல் படும் 

8. பசுவானது பால் கறக்கும் நிலையில் இருக்கும் போது தானம்
செய்வதுதான் மிக சிறந்த தானமாகும். பால் கறக்கும் பாத்திரமும் கொடுப்பது இன்னும் சிறப்பானது,பசுவுடன் காளையையும் சேர்த்து தானம் அளிப்பார்கள். இந்த தானம் கூடுதல் பலன் தருவதாகும்..


9.ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை +தேனு+ என்பார்கள்.
{இரண்டாவது கன்று} பிரசவித்ததும் அதற்கு 
+``கோ'' + என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள், அகவே பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்...


10. முதல் ஆண் குழந்தையின் அரைஞாண் கயிற்றை பணப்பெட்டியில் வைக்க செல்வ வளம் சேரும்.


11. வசிய கட்டு ,தீய மைகள் , தீய வசிய ஏவல் போன்ற சக்திகள் ஒரு மனிதனுக்கு செய்யப்பட்டு இருந்தால் அவைகள் மழை நீரில் அல்லது கறந்த பசும்பாலில்(கறவை சூடாக) தலையில் நனைந்து விட்டால் அந்த சக்திகள் செயல் இழந்து போகும் ....

12. வலம்புரி சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைத்து வழிபடலாம்...

13. ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை வாசற்படியில் தெளிக்கவும்.

14.வலம்புரி சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது. மாமிச உணவருந்திய தினங்களிலும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது,.



Thanks vasudevan

2015-12-17

Vedic Astrology Buying Vehicle - Vahana Yoga in Vedic Astrology | Tamil Jothidam Tips

வாகனம் வாங்கும் சூட்சுமம் ( Vahana Yoga in Vedic Astrology )
============================
ஜோதிடத்தில் ராசிகள் மூன்று வகையாக பிரிக்க படுகிறது. அவையாவன:
1. இரட்டை கால் ராசிகள் - மிதுனம், மீனம், கன்னி, தனுசு
2. நான்கு கால் ராசிகள் - மேஷம், ரிஷபம், சிம்மம்
3. பல கால் ராசிகள் - கடகம், விருச்சகம்
ஒருவர் எத்தகைய வாகனம் வாங்குவார் என இந்த ராசிகளின் அதிபதிகள் வைத்து கணிக்கலாம்.
4 வீடு அதிபதி ஒருவர் வாங்கும் வாகன யோகம் தருபவர். நான்காம் வீட்டு அதிபதி, மேற்கண்ட ராசிகளில் சமந்தபட, அதற்கு ஏற்றவாறு வாகன யோகம் அமையும்.
இதில் நான்காம் அதிபதி பலம் பெற, அதிக வாகனங்களும். ராகு கேது மற்றும் லக்ன பாவிகள் சமந்தபட, வாகனம் வாங்குவதில் சிரமங்களும், அப்படி வாங்கினாலும், நிலையின்மையும் ஏற்படும்.
சனி சமந்தபட்டால் ஏற்கனேவே பயன்படுத்திய வாகனமும், இல்லையேல், வாகனம் வாங்கி தான் பயன்படுத்தாத நிலை ஏற்படும் (அ) கடன் வாங்கி வாகனம் வாங்கும் நிலை ஏற்படும்.
இரண்டு கால் ராசிகள் சமந்தபட - இரண்டு சக்கர வாகனம்.
நான்கு கால் ராசிகள் சமந்தபட - நான்கு சக்கர வாகனம்.
பல கால் ராசிகள் சமந்தபட - பல சக்கரம் கொண்ட வாகனங்கள் (பேருந்து, லாரி மற்றும் பல)
வாகனங்களின் அதிபதியாக விளங்கும் சுக்கிரன், நான்கில் திக் பலம் பெற, ஜாதகர் பல வாகனங்களுக்கு அதிபதியாவர். சுக்ரனின் சாரம் ராகு, புதன் அல்லது செவ்வாய் சாரம் பெற்று, பத்தாம் இடத்தை பார்க்க, தொழில் இடத்தின் மூலமும் அல்லது அதன் லாபம் மூலமும் வாகன யோகம் பெறுவார்.
நான்கில் ராகு அமர்ந்து, ராகு அமர்ந்த வீடு நீர் ராசியாக இருந்து, அதன் அதிபதி லக்னத்தில், கேந்திரத்தில் மற்றும் தன வீட்டை பார்க்க, தீடிர் வாகன யோகம் உண்டு.
மகரம் கும்பம் மற்றும் துலாம் இவைகள் கால் இல்லா ராசிகள் எனவே, இவற்றின் பலன் மற்றவரை சார்ந்து வாகனம் வாங்கும் யோகம் அமைவதாக கொள்ளலாம்

By மணிகண்டன் பாரதிதாசன் 

The plague of death | Vedic Astrology | Tamil Jothidam Tips

கூட்டு மரண தோஷம்
----------------------------------------
நாடி ஜோதிடத்தில் குருவிற்கு ஜீவக்காரகன் என்றும், ராகுவிற்கு மரணக்காரகன் என்றும் பெயர், பாரம்பரிய ஜோதிடத்தில் குருவும், ராகுவும் சேர்க்கை பெற்றிருந்தால் அதை குரு சண்டாள யோகம் என்று கூறுவர். ஆன்மீக ஆச்சாரங்களைக்குறிக்கும் கிரகம் குருவாகும், ஆன்மீகத்திற்கு எதிரான அனாச்சாரங்களை குறிக்கும் கிரகம் ராகுவாகும்.
குருவின் காரகங்கள்
உயிர்(ஜீவன்), ஜீவாத்மா, நல் தேவதைகள், புண்ணிய ஆத்மாக்கள், சாத்வீக எண்ணம், ஆத்ம சிந்தனை, மதபோதனை, வேதவித்யை, தர்ம சிந்தனை, மத குருக்கள், தெய்வபக்தி, ஆத்திகம், தேவாலயம், சமூக சேவகர்கள்.
ராகுவின் காரகங்கள்
மரணம்,பிணம், சுடுகாடு, துர்தேவதைகள், ஆவிகள், பேய்கள், பிசாசுகள், யட்சினி பிசாசுகள், மாந்தரீகம், ஏவல்,பில்லி,சூனியம், அனாச்சாரம், அபிச்சாரம், நாத்திகம், சமூக விரோதிகள், சாக்கடை, விசம், மாமிசம், கள், சாராயம், விஷவாயு, வெடிமருந்து, புகையிலை, பீடி, சிகரெட், பூச்சிமருந்து
குருவினுடைய காரகங்களையும், ராகுவினுடைய காரகங்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். இவ்விரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று நேர் எதிர்மாறான காரகத்தன்மைகளைக் கொண்டவையாகும். ஒன்றுக்கொன்று ஒவ்வாத தன்மைகளைக் கொண்ட இரு கிரகங்கள் சேர்க்கைப்பெற்றால் அவ்விரண்டு கிரகங்கள் குறிக்கும் காரகங்களும் பாதிக்கப்படும்.
கோட்சாரத்தில் குருவும், ராகுவும் ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் உலகத்தில் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.
1. மத கலவரங்கள் உண்டாகும்.
2. நாத்திகவாதிகளின் கை ஓங்கும்.
3. பொய் பித்தலாட்டங்கள் அதிகரிக்கும்.
4. சமூக விரோத சக்திகளின் கை ஓங்கும்.
5. மனிதர்கள் கூட்டம் கூட்டமாக மடிவார்கள்.
6. ஊனமுற்ற குழந்தைகள் அதிகமாக பிறக்கும்.
7. அதிகப்படியான பெண்கள் அமங்கலியாவார்கள்
8. மக்கள் அகதிகளாவார்கள்
9. வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரிக்கும்.
10. இயற்கை சீற்றங்களால் கூட்டம் கூட்டமாக மக்கள் மடிந்து போவார்கள்.
11. ஆலயங்கள் தகர்க்கப்படும்.
12. ஆன்மீகவாதிகள் தாக்கப்படுவார்கள்
13. ஆலயங்களுக்கு சேதம் உண்டாகும்.
14. நில நடுக்கம் ஏற்படும்
15. பெற்ற குழந்தையை தாய் தூக்கி எறிவாள்
16. முறை தவறி குழந்தைகள் பிறப்பார்கள்
17. சர்வாதிகாரம் தலை விரித்தாடும்
18. நீதித்துறை செயலிழக்கும்
19. விபச்சாரம் கொடிகட்டி பறக்கும்.
20. ஆலயங்களுக்குள் விபச்சாரம் நடக்கும்.
21. கன்யா ஸ்தீரிகள் கற்பழிக்கப்படுவார்கள்
22.பொய்யான குருமார்கள் தோன்றுவார்கள்.
கோட்சார குருவுக்கு 1-5-9 அல்லது 2ல் கோட்சார ராகு இருந்தால் அதை குரு ,ராகு சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம்.
செப்டம்பர் 2001ல் கோட்சாரத்தில் குருவும் , ராகுவும் இணைந்து மிதுன ராசியில் சஞ்சரித்தார்கள். அச்சமயம் அமெரிக்க வர்த்தக நிறுவனத்தை ஆப்கான் தீவிரவாதிகள் விமானத்தால் மோதி தகர்த்தார்கள். இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். இதற்கு பதிலடியாக அமெரிக்க நாடு , ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. போரில் பல்லாயிர்க்கணக்கானவர்கள் மடிந்தனர். ஆப்கன் மக்கள் நாட்டை விட்டு ஓடி அன்னிய நாடுகளில் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டது. இந்த காலக்கட்டத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள புத்தர் சிலை தீவிரவாதிகளால் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. அமெரிக்காவை குறிக்கும் ராசி மிதுனமாகும். ஆப்கானிஸ்தானை குறிக்கும் ராசி கும்பமாகும்.
2004 ல் சிம்மத்தில் குருவும், மேசத்தில் ராகுவும் ஒருவருக்கொருவர் திரிகோணமாக சஞ்சரித்த காலத்தில் ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண வீட்டில் தீவிபத்து ஏற்பட்டு அதில் பலர் இறந்து போனார்கள்.
16-07-2004 அன்று கும்பகோணம் பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு அதில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து போனார்கள். அந்த காலக்கட்டத்தில் மேசத்தில் ராகுவும், சிம்மத்தில் குருவும் சஞ்சரித்தார்கள்.
நாடி ஜோதிடத்தில் குரு,ராகு சேர்க்கைக்கு கூட்டு மரண தோஷம் என்று பெயர். அதாவது ஜீவனை அல்லது ஜீவாத்மாக்களைக்குறிக்கும் கிரகம் குருவாகும். மரணத்தைக்குறிக்கும் கிரகம் ராகுவாகும்.இவ்விரண்டு கிரகங்களும் சேர்க்கை பெறும்போது உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக அழிந்து போகும்.
குரு,ராகு சேர்க்கை நெருப்பு ராசிகளில் ஏற்பட்டால் நெருப்பினாலும், நீர் ராசிகளில் ஏற்பட்டால் மழை , வெள்ளத்தாலும், காற்று ராசிகளில் ஏற்பட்டால் விமான தாக்குதல், வெடிகுண்டு வீசுதல், விஷவாயு தாக்குதல் இவைகளாலும், நில ராசிகளில் ஏற்பட்டால் நிலசரிவு, பூகம்பம், எரிமலை சீற்றம் இவைகளாலும் துர் மரணங்கள் நிகழும்.
ஒவ்வொரு ராசியும் உலகியல் ஜோதிடப்படி, சில நாடு ,நகரங்களைக்குறிக்கும். எனவே கோட்சாரத்தில் குருவும், ராகுவும் இணைந்து எந்த ராசியில் சஞ்சரிக்கிறார்களோ அந்த ராசி மற்றும் அந்த ராசிக்கு திரிகோண ராசிகள் குறிக்கும் நாடு, நகரங்களில் இது போன்ற துர் மரணங்கள் அதிகமாக நிகழும். இதற்கு முக்கிய காரணம் தெய்வ நம்பிக்கை குறைவு, மதம் மற்றும் தெய்வ நம்பிக்கைகளுக்கு எதிரான செயல்கள் அதிகரித்தல் ஆகும்.
குரு,ராகு சேர்க்கை கோச்சாரத்தில் ஏற்படும் காலங்களில் , அந்த சேர்க்கை எந்த வகை ராசியில் ஏற்படுகிறதோ , அந்த ராசியின் தன்மைகளை அறிந்து கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொண்டால், இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறுவதை ஓரளவுக்கு தடுக்கலாம். குறிப்பாக திருமண விழாக்கள், பொது க்கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தும்பொழுது முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும் அல்லது குரு,ராகு சேர்க்கை ஏற்படும் காலங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவேண்டும்.
14-07-2015 முதல் 11-08-2016 வரை குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். 29-02-2016 முதல் 18-08-2017 வரை ராகு சிம்மத்தில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே 29-02-2016 முதல் 11-08-2016 வரை சிம்ம ராசியில் குரு,ராகு சேர்க்கை ஏற்படப்போகிறது. சிம்ம ராசி நெருப்பு ராசியாகும். எனவே தமிழ் நாட்டில் மேச ராசிப் பகுதியான வேலூர்,திருவள்ளூர்,திருவண்ணாமலை, சிம்ம ராசிப் பகுதியான தஞ்சாவூர்,கும்பகோணம், திருச்சி, பெரம்பலூர், தனுசு ராசிப் பகுதியான திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் போன்ற ஊர்களில் தீவிபத்துக்களால் மக்கள் கூட்டமாக மடிந்து போகும் வாய்ப்புகள் உள்ளது. இந்த காலக்கட்டத்தில் அந்த ஊர்களில் உள்ள மக்கள் மிருத்யுஞ்சய மந்திர ஜெபம், ருத்திர ஜெபம், சுதர்சன மந்திர ஜெபம், விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் செய்தால், கெடு பலன்கள் நடவாமல் போகும்.



By Ravi Sankaran

2015-12-14

EFFECTS OF BIRTH ON AMAVASYA TITHI - TamilJothidamTips

அமாவாசையில் பிறந்தவன் – கெட்டவனாமே.... மெய்தானா...?

இன்று வேலூர் ஜோதிடம் வாட்ஸ் அப் கிளபில் நடந்த கருத்துரையாடல்கள் .
அமாவாசையில் குழந்தை பிறந்தால் உண்டாகும் பலன்... 
அமாவாசையை ஆறு பாகங்களாக பிரித்து, அவைகளுள்...
1 ம் பாகம்....பிறந்தால்
பொருளழிவு.
2 ம் பாகம்.. தாயையும்
3 ம் பாகம்..தகப்பனையும்
4.. பாகம்..தாய் மாமனையும் கொன்றுவிடும்..
5 ம் பாகம் குழந்தை மறிக்கும்..
6 ம் பாகம் பிறந்தால்
மட்டுமே எவ்வித தோஷமும் கிடையாது..
+++பூர்வ பராசர்யம்+++
அமாவாசையில் பிறந்த தாய் தந்தை எத்தனை சண்டைகள் வந்தாலும் பிரிவினை வரது
அமாவாசையில் பிறந்தால் எங்கேயும் எதிலும் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு திதி, சூன்யம் பாதிப்பு இருக்காது
திரு .... ஐயா அமாவாசையை 6ஆக எப்படி பிறிப்பது 10 10 நாழிகையாகவா
அமவாசையில் ஒரு பிறந்தால் மட்டும் தோஸம் ஆகும்...என்பது சாஸ்திரமாக இருந்தாலும் அனுபவத்தில் ஒன்னாம் பாகத்தில் பிறந்து தனலாப ஸ்தானங்கள் கெட்டிருந்தால் மட்டுமே பொருளழிவு ஏற்படுகிறது...மேலும் அந்த, அந்த காரக கிரகமும்,அந்த ஸ்தானமும்,ஸ்தானாதிபதியும் கெட்டிருந்தால் மட்டுமே தோஸநிலை சொல்லலாம் என்பது அடியேனின் கருத்தாகும்,சபையோர்களே....அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!!
லக்னாதிபதியாக சந்தரன் இருந்து நீச்சமானலோ கெட்டாலோ தினமும் பசுவிற்கு ஆகாரம் கொடுப்பது, அரிசி, வீட்டில் உள்ள கிணற்றிலோ, போர் வெல்லிலோ தண்ணீர் வற்றாமல் பார்த்துக் கொள்வது. படுக்கையில் தலையணை அடியில் சந்திர காயத்ரி எழுதிய வெள்ளி தகட்டை வைத்து படுபபது பாதிப்பை குறைக்கும். வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் பால் பொருட்கள் வியாபாரம் செய்ய கூடாது. இந்த அமைப்பில் ஏழாம் பாவம் சுத்தமாக இருந்தால் அந்த ஜாதகர் 24 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வது நல்லது.
மொத்த பரம நாழிகையை ஆறாக பிரித்துக்கொண்டால் 10 நாழிகைதான் சற்றேறக்குறைய வரும்...மேலும் மரணத்திற்கொப்பான
கஷ்டம் எனவும் எடுத்துக்கொள்ள வேண்டும்...
பரிகாரமாக..பசு கன்றுகளை தானமாக கொடுக்கலாம.
மேற்சொன்ன குறிப்பு பூர்வ பராசர்யம் ஏழாவது அத்தியாயத்தில்
அரிஷ்டாத்யாயத்தில் உள்ளது...நன்றி..
ஸவாமி ஐயா! அமாவாசை 60நாழிகை இருந்தால் தான் 10-10 நாழிகையாக பிரிக்க முடியும். இல்லையென்றால் அமாவாசை இருக்கும் மொத்த நாழிகையை 6ஆல் வகுத்து வரும் நாழிகையை 1பாகமாக கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து.🙏
ஜோதிட வணக்கம்
ஐயா! மிகச்சிறந்த இன்றொரு தகவல்.
அமாவாசை திதியில் பிறந்த பலன் அருமை. இந்த திதியில் பிறந்தவர்கள் highly technical skills இருக்கக்கூடியவர்கள். minute repairing கைவல்லவர்கள். இது போன்ற கூர்மையான திறமை இருப்பதால் ஒரு சிலர் அமாவாசையில் ஆண் பிறந்தால் திருடனாவான் என்றும் பெண் பிறந்தால் தவறான வழிகளில் கூட செல்வாள் என்பார்கள். அதாவது இவர்கள் எந்த துறையில் சென்றாலும் சிறக்க வாய்ப்பு என்பதால் திருடனுக்கு ரொம்பவே திறமை இருக்கும் என்ற நோக்கில் கூறுவது.

Vellore Bala Jothidar

2015-12-10

The names of herbal powders, and its benefits

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-
*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

2015-11-26

How to predict dasha results

தசா பலன்கள் அறிவது எப்படி
==============================

லக்னாதிபதி பலம் மற்றும் திசா நாதன் காரக பலம் மற்றும் அம்சத்தில் உள்ள பலம் கணித்து பின்னர் தசா பலன் அறிதல் நலம்.
1. தசாநாதன் நின்ற பாவதிபத்தியம்,
2. தசா நாதன் பெற்ற பாவதிபத்தியம்,
3. தசா நாதன் பார்க்கும் பாவதிபத்தியம்
4. தசா நாதன் நின்ற சார நாதனின் ஆதிபத்தியம்,
5. தசா நாதனுடன் சேரும் கிரகத்தின் பாவதிபத்தியம்,
6. தசா நாதன் நின்ற சாரநாதன் பெற்ற ஆதிபத்தியம்.
இவற்றில் அசுப ஆதிபத்தியம் (6, 8, 12) அதிகம் எனில் அசுப பலன்களையும், சுப ஆதிபத்தியம் அதிகம் எனில் நன்மையையும் தரும் என எடுத்து கொள்ளலாம்.
குறிப்பு - குரு பார்வை அசுப இடங்களான 6, 8,12 பட்டால், சுபமான இடங்களாக மாறும்.
இதில் கோசாரம் கருத்தில் முக்கியமாக கொள்ளவேண்டும்.
கீழே இருக்கும் உதாரண ஜாதகத்தை எடுத்துகொள்ளலாம். அதில் குரு திசை கணிப்போம்.
குருவின் ஆதிபத்தியம் - 6, 9
குரு அமர்ந்த ஆதிபத்தியம் - 12
குரு பெற்ற சாரனதனின் (சுய சாரம்) ஆதிபத்தியம் - 6, 9
குரு பார்க்கும் ஆதிபத்தியம் - 4, 6, 8 (குரு பார்வை என்பதால் ஆறு மற்றும் எட்டு சுப தன்மை அடைகிறது).
பன்னிரெண்டும் இடது அதிபதி உச்சம் பெற்று குருவின் சுப செயல்களுக்கு ஊக்கம் கொடுத்தார்.
மொத்த பாவங்கள் - 4, 6, 8, 9, 12
இதில் குரு தான் நிற்கும் பாவத்தை கெடுப்பார் என்பதால், பன்னிரெண்டாம் பாவத்தில் இருக்கும் குரு, அசுப விரயத்தை தடுத்து, சுப விரயமாக தன் ஒன்பதாம் வீட்டினை பார்க்கும் குரு செய்யவைத்தார். ஒன்பதாம் பாவ (9) செயல்களான வேத, பாட சாலைகள், இலவச கல்யாணம், மற்றும் கோவில் கட்டும் பணியை செய்யவைத்தது, நான்காம் (4) பாவ செயல்களான ஆரோக்கியம், வீடு மனை வாங்க சுப விரையம் செய்தது. குரு பார்வை ஆறாம் (6) இடமான எதிரிகள், கடன் மற்றும் எட்டாம் (8) இடமான அவமானம், விபத்தில் இருந்து காத்தது..
இங்கே, குரு திசையில் அனைத்தும் சுப பாவங்களே. மேலும் இவை அனைத்தும் கோசார குரு ஒன்பதாம் இடமான மேஷத்திற்கும், இரண்டாம் இடமான துலாதிற்கும் வந்த போது சுப விரையம் ஏற்பட்டது.
அன்புடன்,
மணிகண்டன் பாரதிதாசன் B.Tech., MBA

2015-11-20

Effects vakra or retrograde planets

வக்கிர கிரகத்தின் பலன்
======================
ஒரு அசுப அதிபத்தியம் பெற்ற சுப/அசுப கிரகம் வக்கிரம் பெற்றால் (அம்சத்தில் கெடாமல்) அது தான் பெற்ற அதிபத்தியம் மூலம் தற்காலிக யோகம் மட்டுமின்றி, தன் காரகத்துவ பலனையும் சேர்த்து தரும் அவையாவன:
1. வக்கிர செவ்வாய் - வீரத்தையும், தைரியத்தையும் தரும்.
2. வக்கிர புதன் - புத்தி கூர்மையும், சமயோகித புத்தியும் தரும்.
3. வக்கிர சுக்கிரன் - ஆடம்பரத்தையும், கலை தாகத்தையும் தரும்.
4. வக்கிர குரு - நுண்ணறிவையும், ஒழுக்கத்தையும் பக்குவத்தையும் தரும்.
5. வக்கிர சனி - கடின உழைப்பையும், நேர்மையையும் தரும்.

neecha bhanga raja yoga : How does a planet get Neechabhanga?

ஒரு கிரகம் எப்போது நீச்ச பங்கமடையும்
=======================================
1. நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் பெறுதல். (நீச்ச பங்க ராஜ யோகம்)
2. நீச்ச கிரகத்துடன் அந்த வீட்டில் ஒரு கிரகம் உச்சம் பெறுதல் ((நீச்ச பங்க ராஜ யோகம்)
3. நீச்ச கிரகத்துடன் ஒரு நட்பு கிரகம் சேருதல்.
4. ஒரு நீச்ச கிரகத்தை இன்னொரு நீச்ச கிரகம் பார்த்தால் நீச்ச பங்கம். (நீச்ச பங்க ராஜ யோகம்)
5. நீச்ச கிரகம் பரிவர்த்தனை பெறுதல்.
6. நீச்ச கிரகம் வர்கோதமம் பெறுதல். (நீச்ச பங்க ராஜ யோகம்)
7. நீச்ச கிரகம் வக்கிரம் பெறுதல். (நீச்ச பங்க ராஜ யோகம்)
8. சந்திர கேந்திரத்தில் நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் இருத்தல்.
9. லக்ன கேந்திரத்தில் நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் இருத்தல்.
10. நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் சுய நட்சத்திர சாரம் பெறுதல்
11. நீச்ச கிரகம் சுய சாரம் பெறுதல் (இது புதனுக்கு மட்டுமே சாத்தியம் - நீச்ச பங்க ராஜ யோகம்)
நீச்ச பங்கமடையும் கிரகம், தன் திசையில் முதலில் குறைவான பலன்களை கொடுத்து பின் நற்பலன்களை கொடுக்கும். இதில் நீச்ச பங்க ராஜயோகம் அடையும் கிரகம், மிக பெரிய ராஜயோகத்தை கொடுக்கும்.


Vedic Astrology Lessons has published more articles about Neechabhanga rajayoga. some of articles are given below:


 

2015-11-13

Rasi - Love - and - Marriage - Astrology

காதலில் அதிக ஈடுபாடுள்ள ராசிகள்
காதல் என்று வரும் போது, அதில் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசிக்காரர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும்.
சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வார். அதுவே சுக்கிரன் மோசமான நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் காதல் தோல்வி அல்லது திருமணத்திற்கு பின் துணையை விரைவில் பிரியக்கூடும்
எந்த ஒரு ராசி அல்லது லக்னமாக இருந்தாலும், களத்திர ஸ்தானம் என்னும் 7, 8 ஆம் வீடுகளைக் கொண்டே எந்த மாதிரியான திருமணம் நடைபெறும் என்று கூற முடியும்
திருமணம் ஒருவரின் ஜாதகத்தில் 7, 8 ஆம் அதிபதிகள் நல்ல நிலையில் இருந்து, கெட்ட கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால், அந்த ஜாதகருக்கு பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம் நடைபெறும்.
ஒருவரின் ஜாதகத்தில் களஸ்திர மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானங்கள் மிகவும் வலிமையாக இருந்தால், அவர் அத்தை, மாமன் முறையிலேயே திருமணம் நடைபெறும்.
ஜாதகத்தில் கேந்திர பகுதியான ஏழாமிடம் சிறப்பாக அமைந்து விட்டால் மனிதனின் இல்லறம் நல்லறமாக இருக்கும் நல்லறமான இல்லறத்தில் பிறக்கும் குழந்தைகளே சமூக வளர்ச்சிக்கு தூண்களாக இருப்பார்கள்.
இல்லறம் கெட்டுவிட்டால் குடும்பம் மட்டுமல்ல நாடும் கெட்டு விடும். அதனால் தான் தராசு போல் நீதி வழியில் நின்று காம உணர்ச்சியை பயன்படுத்த வேண்டும் என்பதே நம் முன்னோர்களின் விருப்பம்.

Secrets for being wealthy always

“செல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”
வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது.
வடக்கு பார்த்து சாப்பிடக்கூடாது.
மாலை ஐந்து மணிக்கு மேல் தயிர் சாப்பிடக்கூடாது.
நெல்லிக்காய் ,அகத்திக்கீரை மாலை ஐந்து மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.
நகம் ,முடி சாப்பிடக்கூடாது.
வியாழன், வெள்ளி, சனி, முடி வெட்டுதல் நகம் வெட்டுதல் கூடாது.
திங்கள் கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரை தண்ணீர் முதல் கொண்டு ஏதும் சாப்பிடக்கூடாது.
சனிக்கிழமை காலை ஆறுமணி முதல் ஏழு மணிக்குள் சுத்தமான நல்லெண்ணெய்யை ஆண்கள் இடது காலிலும் பெண்கள் வலது காலிலும் தடவினால் பணம் வந்துகொண்டே இருக்கும்.
வியாபாரம் தொழில் செய்யும் இடத்தில் ஐந்து முக ருத்ராட்சம் வைத்து பூஜித்தால் வியாபாரம் தொழில் அமோகமாக நடக்கும்.
வீட்டில் மல்லிகை செடி வில்வம் துளசி வளர்க்க பெரும் செல்வம் ஏற்படும்.
தினமும் மல்லிகை பூவை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் சேரும்.
வீட்டின் வாசற்படியில் நற்பவி என்று எழுதிவைத்தால் நன்மைகள் வந்து சேரும்.
மயில் தோகையை வீட்டில் வைக்க பற்பல நன்மைகள் உண்டாகும்.
வீட்டில் பப்பாளி மரம் கறிவேப்பிலை மரம் வளர்க்க கூடாது ,பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் பாதிப்படைய செய்யும்.
முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.
ஏகாதசி நாள் அன்று விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

நன்றி
வர்மக்கலை ஆசான் பிரம்ம ஸ்ரீ எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியா 9894285755.

2015-11-12

Cure for AIDS in 48 days

ayurvedic medicine for hiv aids




48 நாளில் Aids-ஐ (எய்ட்ஸ்) குணமடைய வைக்கும் மூலிகை..! உலக ஆராட்சிக்கே சவால் விடும் நம் சித்தர்களின் கண்டுபிடிப்பு..! பகிருங்கள் பயன்பெறட்டும்...




2015-08-04

Rahu Kalam Yamagandam and Gulika Kalam

Rahu Kalam Yamagandam and Gulika Kalam Timing


Rahu kalam (time of the snake, or Dragon’s Head): 

Any activity or journey away (short or long distance) started during this time is bound to meet a significant degree of failure, lack of success or postponement.

To Counteract Rahu kalam:

Avoid commencing important, money-related or travel activities, during this time.
Leave your current location or have your meeting, or start your activity earlier than or after the Rahu Kalam period.

Yamagandam (death time): 

Any activity commenced during this time invites the ‘death’ of the work orenergies relating to that work.

To Counteract Yamagandam:

Avoid commencing important, money-related or travel activities, during this time.
Leave your current location or have your meeting, or start your activity earlier than or after the Yamagandam time.

Gulika kalam (blossoming time): 

Any activity in this period has positive, good and growth-oriented results;gives happiness.


Day of Week
Rahukalam
Yamagandam
Gulika
Sunday 4:30 PM to 6 PM Noon to 1:30 PM 3 PM to 4:30 PM
Monday 7:30 AM to 9 PM 10:30 AM to Noon 1:30 PM to 3 PM
Tuesday 3 PM to 4:30 PM 9 AM to 10:30 AM Noon to 1:30 PM
Wednesday Noon to 1:30 PM 7:30 AM to 9 AM 10:30 AM to Noon
Thursday 1:30 PM to 3 PM 6 AM to 7:30 AM 9 AM to 10:30 AM
Friday 10:30 AM to Noon 3 PM to 4:30 PM 7:30 AM to 9 AM
Saturday 9 AM to 10:30 AM 1:30 PM to 3 PM 6 AM to 7:30 AM


Tagged: Auspicious Times of a day, Bad Timings of the day, Good Time of the week, Good Timings of the day, Good Timings of the week, Good Timings on friday, Good Timings on monday, Good Timings on saturday, Good Timings on Sunday, Good Timings on thursday, Good Timings on tuesday, Good Timings on wednesday, Gulika Kalam, Gulika Kalam Timings, Gulika Kalam Timings of the day, Rahu Kalam, Rahu Kalam Timings, Rahu Kalam Timings of the day, Rahu Kalam Yamagandam and Gulika Kalam Timings, Rahu Kalam Yamagandam and Gulika Kalam Timings of the day, Rahu Kalam Yamagandam and Gulika Kalam Timings today, Yamagandam, Yamagandam Timings of the day, YamagandamTimings

© 2015 Tamil Jothidam Tips. WP themonic converted by Bloggertheme9. Powered by Blogger.
TOP